ஐரோ வலயம்
யூரோவலயம் (Eurozone; ⓘ, யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (Euro Area) என்றழைக்கப்படுகிறது.
ஐரோவை ஏற்றுக் கொண்ட ஆனால் ஐரோ வலயத்தில் இல்லாத நாடுகள் | |
நாணயம் | ஐரோ |
---|---|
ஒன்றிய வகை | பொருளியல் மற்றும் பணவியல் ஒன்றியம் |
தோற்றம் | 1999 |
உறுப்பினர்கள் | |
ஆட்சி முறை | |
அரசியல் அமைப்பு | ஐரோ குழுமம் |
குழுமத் தலைவர் | ஜான்-க்ளாட் ஜங்கர் |
வழங்குரிமை | ஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி) |
ஈசிபி தலைவர் | ஜான்-க்ளாட் திரிஷே |
சார்பு | ஐரோப்பிய ஒன்றியம் |
புள்ளி விவரம் | |
மக்கள் தொகை | 328,597,348 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (பி. பி. பி) | €8.4 டிரில்லியன்[1] |
வட்டி விகிதம் | 1%[2][3] |
பணவீக்கம் | 0.3%[4] |
வேலைவாய்ப்பின்மை | 10%[5] |
வாணிப நிலை | €22.3 பில்லியன் மிகை[6] |
தோற்றம்
தொகுஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:
1. பணவீக்க விகிதம் ஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.
2. அரசின் நிதி நிலைமை
- அ. ஆண்டுப் பற்றாக்குறை : ஒரு நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
- ஆ. அரசின் கடன் சுமை: ஒரு நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
3. நாணய மாற்று வீதம் ஐரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பைக் குறைத்திருக்கக் கூடாது.
4. நீண்டகால வட்டி விகிதம் ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.
1998இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007லும் சைப்பிரசு, மால்டா 2008லும் சுலொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.
விரிவாக்கம்
தொகுஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எசுட்டோனியாவைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா 2011ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.
டென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐசுலாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.
மேற்கோள்கள்
தொகுநிருவாகம்
தொகுஐரோ வலயத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிருவகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது ஐரோ வலய உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். ஐரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர ஐரோ வலயத்தின் அரசியல் சார்பாளராகச் செயல்பட ஐரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜங்கர்.
உறுப்பினர்கள் பட்டியல்
தொகுநாடு | ஐஎசுஓ குறியீடு | இணைந்த ஆண்டு (சனவரி 1 முதல்) | 2021 இல் மக்கள்தொகை[7] | மொ.தே.வ, 2021 $மில்லியன்[8] | மொதேவ மொத்த யூரோவலயத்தின் பின்னம் | மொதேவ தலைக்கு 2021இல் $ | முந்தைய நாணயம் | முந்தைய நாணயமும் பயன்படுத்தப்பட்டது | முந்தைய நாணயத்திற்கு யூரோவை மாற்றும் விகிதம்[9] | யூரோ பயன்படுத்தப்படாத பிரதேசங்கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆஸ்திரியா | AT | 1999[10] | 89,32,664 | 4,72,474 | 3% | 52,893 | சில்லிங்கு | 13.7603 | ||
பெல்ஜியம் | BE | 1999[10] | 1,15,54,767 | 5,85,375 | 4% | 50,661 | பிராங்கு | லக்சம்பர்க் | 40.3399 | |
குரோவாசியா | HR | 2023[11] | 40,36,355 | 68,724 | 0% | 17,026 | குனா | 7.53450 | ||
சைப்பிரசு | CY | 2008[12] | 8,96,007 | 25,634 | 0% | 28,609 | பவுண்டு | 0.585274 | வடக்கு சைப்பிரசு[a] | |
எசுத்தோனியா | EE | 2011[13] | 13,30,068 | 35,219 | 0% | 26,479 | குரூன் | 15.6466 | ||
பின்லாந்து | FI | 1999[10] | 55,33,793 | 2,96,473 | 2% | 53,575 | மார்க்கா | 5.94573 | ||
பிரான்சு | FR | 1999[10] | 6,76,56,682 | 29,91,553 | 21% | 44,217 | பிராங்கு | அந்தோரா மொனாக்கோ |
6.55957 | நியூ கலிடோனியா[b] பிரெஞ்சு பொலினீசியா[b] வலிசும் புட்டூனாவும்[b] |
செருமனி | DE | 1999[10] | 8,31,55,031 | 42,98,325 | 30% | 51,690 | மார்க்கு | 1.95583 | ||
கிரேக்கம் | GR[c] | 2001[14] | 1,06,78,632 | 2,12,807 | 1% | 19,928 | திராச்மா | 340.750 | ||
அயர்லாந்து | IE | 1999[10] | 50,06,324 | 3,83,084 | 3% | 76,520 | பவுண்டு | 0.787564 | ||
இத்தாலி | IT | 1999[10] | 5,92,36,213 | 21,27,119 | 15% | 35,909 | லீரா | சான் மரீனோ வத்திக்கான் நகர் |
1936.27 | |
லாத்வியா | LV | 2014[15] | 18,93,223 | 37,295 | 0% | 19,699 | லாட்சு | 0.702804 | ||
லித்துவேனியா | LT | 2015[16] | 27,95,680 | 60,884 | 0% | 21,778 | லித்தாசு | 3.45280 | ||
லக்சம்பர்க் | LU | 1999[10] | 6,34,730 | 56,449 | 0% | 88,934 | பிராங்கு | பெல்ஜியம் | 40.3399 | |
மால்ட்டா | MT | 2008[17] | 5,16,100 | 15,948 | 0% | 30,901 | லீரா | 0.429300 | ||
நெதர்லாந்து | NL | 1999[10] | 1,74,75,415 | 9,67,837 | 7% | 55,383 | கில்டர் | 2.20371 | அரூபா[d] குராசோ[e] சின்டு மார்தின்[e] கரிபியன் நெதர்லாந்து][f] | |
போர்த்துகல் | PT | 1999[10] | 1,02,98,252 | 2,46,714 | 2% | 23,957 | எசுக்கூடோ | 200.482 | ||
சிலோவாக்கியா | SK | 2009[18] | 54,59,781 | 1,12,424 | 1% | 20,591 | கொருனா | 30.1260 | ||
சுலோவீனியா | SI | 2007[19] | 21,08,977 | 59,608 | 0% | 28,264 | தோலர் | 239.640 | ||
எசுப்பானியா | ES | 1999[10] | 4,73,98,695 | 14,07,936 | 10% | 29,704 | பெசெட்டா | அந்தோரா | 166.386 | |
யூரோவலயம் | EZ[g] | பொருத்தமில்லை | 34,65,97,389[h] | 1,44,61,883 | 100% | 41,725 | பொருத்தமில்லை | பொருத்தமில்லை | பொருத்தமில்லை | மேலே பார்க்க |
குறிப்புகள்
தொகு- ↑ வடக்கு சைப்பிரசின் துருக்கிக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, அது துருக்கிய லிராவைப் பயன்படுத்துகிறது.
- ↑ 2.0 2.1 2.2 French Pacific territories use the CFP franc, which is pegged to the euro at the rate of 1 franc to 0.00838 euro.
- ↑ The European Union internally uses the code EL for Greece, a deviation from the ஐ.எசு.ஓ 3166-1 standard.
- ↑ Aruba is part of the Kingdom of the Netherlands, but not of the EU. It uses the Aruban florin, which is pegged to the US dollar at the rate of 1 dollar to 1.79 florins.
- ↑ 5.0 5.1 Currently uses the Netherlands Antillean guilder and is planning to introduce the Caribbean guilder in 2025, after the change was delayed several times. "CBCS wants to have the Caribbean guilder introduced by 2025". Curaçao Chronicle. 16 March 2022. https://www.curacaochronicle.com/post/local/cbcs-wants-to-have-the-caribbean-guilder-introduced-by-2025/. "Frequent Asked Questions". Centrale Bank Curaçao & Sint Maarten. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022. Both are pegged to the US dollar at the rate of 1 dollar to 1.79 guilders.
- ↑ அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துகிறது.
- ↑ EZ is not assigned, but is reserved for this purpose, in ISO-3166-1.
- ↑ Includes the population of Croatia, even though it was not a eurozone member in 2021.
- ↑ The euro: An international currency, Europa (web portal)
- ↑ WORLD INTEREST RATES TABLE, FX street
- ↑ Key ECB interest rates, ECB
- ↑ HICP - all items - annual average inflation rate Eurostat
- ↑ Harmonised unemployment rate by gender - total - [teilm020]; Total % (SA) Eurostat
- ↑ For the whole of 2009. Euroindicators 17 February 2010 பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம், Eurostat
- ↑ "Population on 1 January". Eurostat.
- ↑ "GNI, Atlas method (current US$) | Data | Table (updated 2022-12-22)". பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
- ↑ "EU countries and the euro". ஐரோப்பிய ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ 10.00 10.01 10.02 10.03 10.04 10.05 10.06 10.07 10.08 10.09 10.10 "COUNCIL DECISION of 3 May 1998 in accordance with Article 109j(4) of the Treaty". Official Journal of the European Union L (139/30). 11 May 1998. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:31998D0317&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ "Council Decision (EU) 2022/1211 of 12 July 2022 on the adoption by Croatia of the euro on 1 January 2023". 12 July 2022.
- ↑ "COUNCIL DECISION of 10 July 2007 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Cyprus of the single currency on 1 January 2008". Official Journal of the European Union L (186/29). 18 July 2007. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32007D0503&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ "COUNCIL DECISION of 13 July 2010 in accordance with Article 140(2) of the Treaty on the adoption by Estonia of the euro on 1 January 2011". Official Journal of the European Union L (196/24). 28 July 2010. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32010D0416&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ "COUNCIL DECISION of 19 June 2000 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Greece of the single currency on 1 January 2001". Official Journal of the European Union L (167/19). 7 July 2000. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32000D0427&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ "COUNCIL DECISION of 9 July 2013 on the adoption by Latvia of the euro on 1 January 2014". Official Journal of the European Union L (195/24). 18 July 2013. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32013D0387&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ "COUNCIL DECISION of 23 July 2014 on the adoption by Lithuania of the euro on 1 January 2015". Official Journal of the European Union L (228/29). 31 July 2014. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32014D0509&from=EN. பார்த்த நாள்: 31 December 2014.
- ↑ "COUNCIL DECISION of 10 July 2007 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Malta of the single currency on 1 January 2008". Official Journal of the European Union L (186/32). 18 July 2007. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32007D0504&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ "COUNCIL DECISION of 8 July 2008 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Slovakia of the single currency on 1 January 2009". Official Journal of the European Union L (195/24). 24 July 2008. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32008D0608&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ "COUNCIL DECISION of 11 July 2006 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Slovenia of the single currency on 1 January 2007". Official Journal of the European Union L (195/25). 15 July 2006. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32006D0495&from=EN. பார்த்த நாள்: 27 October 2014.