எஸ்தோனிய குரூன்

குரூன் (சின்னம்: kr or ,-; குறியீடு: EEK), எஸ்டோனியா நாட்டின் முன்னாள் நாணயம். குரோன் என்னும் சொல் இலத்தீன் மொழியின் “குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, நார்வே குரோன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் பெயர்களும் இச்சொல்லிலிருந்தே தோன்றின. ஒரு குரூனில் நூறு சென்டிகள் உள்ளன. குரூன் என்ற சொல்லின் பன்மை வடிவம் “குரூனி”. எஸ்தோனிய குரூன் முதன் முதலில் 1928ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது எஸ்டோனியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் குரூன் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1992ல் எஸ்டோனியா விடுதலை அடைந்தவுடன் குரூன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்டோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் ஜனவரி 1, 2011 முதல் குரூன் கைவிடப்பட்டது. அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ எஸ்டோனியாவின் நாணயமாகிவிட்டது.[2][3]

எஸ்தோனிய குரூன்
Eesti kroon
குரூன் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிEEK
அலகு
பன்மைகுரூனி
வேறுபெயர்காகிதம் (Paper)
மதிப்பு
துணை அலகு
 1/100சென்ட்
பன்மை
 சென்ட்சென்டி
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)2, 5, 10, 25, 100, 500 குரூனி
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)1, 50 குரூனி
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
10, 20, 50 சென்டி, 1 குரூனி
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

5 சென்டி, 5 குரூனி
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) எசுத்தோனியா
வெளியீடு
நடுவண் வங்கிஎஸ்டோனிய வங்கி
 இணையதளம்www.bankofestonia.info
மதிப்பீடு
பணவீக்கம்2.8%
 ஆதாரம்ஐரோப்பிய மத்திய வங்கி, மே 2010
ஐ.ஒ மாற்று விகித வழிமுறை (ERM)
முதல் ஆண்டு28 ஜூன் 2004
முதல் நிலையான விகிதம்31 டிசம்பர் 1998
1 € =15.6466 குரூனி
பேண்ட்மாறுவதில்லை[1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்தோனிய_குரூன்&oldid=3770164" இருந்து மீள்விக்கப்பட்டது