டானிய குரோன்

குரோன் (சின்னம்: kr / ,-; குறியீடு: DKK), டென்மார்க் நாட்டின் நாணயம். குரோன் என்ற் சொல்லுக்கு டானிய மொழியில் முடி/கிரீடம் என்று பொருள். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவுடன் நாணய மாற்று மதிப்பு மாறாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது (ஒரு யூரோவுக்கு 7.46038 குரோன்கள்). குரோன் என்ற சொல்லின் பன்மை வடிவம் குரோனர். ஒரு குரோனில் 100 ஓர்கள் உள்ளன. இந்த நாணயம் டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளாகிய கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளிலும் புழக்கத்தில் உள்ளது. பரோயே தீவுகளின் நாணயமான பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன.

டானிய குரோன்
dansk krone
donsk króna
Danskinut koruuni
ஐ.எசு.ஓ 4217
குறிDKK (எண்ணியல்: 208)
சிற்றலகு0.01
அலகு
பன்மைகுரோனர்
குறியீடுkr
மதிப்பு
துணை அலகு
 1/100ஓர்
பன்மை
 ஓர்ஓர்
Coins50 ஓர், 1, 2, 5, 10, 20 குரோனர்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) டென்மார்க்
 கிறீன்லாந்து
 பரோயே தீவுகள்
1
வெளியீடு
நடுவண் வங்கிடான்மார்க்ஸ் தேசிய வங்கி
 இணையதளம்www.nationalbanken.dk
மதிப்பீடு
பணவீக்கம்1.3% (டென்மார்க்கில் மட்டும்)
 ஆதாரம்Danmarks Statistik, 2009 கணிப்பு.
மூலம் இணைக்கப்பட்டதுஃபாரோஸ் குரோனா (சம மதிப்பு)
ஐ.ஒ மாற்று விகித வழிமுறை (ERM)
முதல் ஆண்டு13 மார்ச் 1979
1 € =kr 7.46038
பேண்ட்2.25%
    "https://ta.wikipedia.org/w/index.php?title=டானிய_குரோன்&oldid=1381788" இலிருந்து மீள்விக்கப்பட்டது