2011
2011 (MMXI) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமாகும் ஒரு சாதாரண ஆண்டு ஆகும். ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டை அனைத்துலக வனங்கள் ஆண்டாகவும், அனைத்துலக வேதியியல் ஆண்டாகவும் அறிவித்துள்ளது.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2011 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2011 MMXI |
திருவள்ளுவர் ஆண்டு | 2042 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2764 |
அர்மீனிய நாட்காட்டி | 1460 ԹՎ ՌՆԿ |
சீன நாட்காட்டி | 4707-4708 |
எபிரேய நாட்காட்டி | 5770-5771 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2066-2067 1933-1934 5112-5113 |
இரானிய நாட்காட்டி | 1389-1390 |
இசுலாமிய நாட்காட்டி | 1432 – 1433 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 23 (平成23年) |
வட கொரிய நாட்காட்டி | 100 |
ரூனிக் நாட்காட்டி | 2261 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4344 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 1 - யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது.
- சனவரி 3 - சிலியின் நடுப்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது.
- சனவரி 8 - 1811 இல் தொலைந்த யூஎஸ்எஸ் ரிவெஞ்ச் என்ற அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் ரோட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டன.
- சனவரி 9 – தெற்கு சூடான் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தியது.
- சனவரி 9 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் உயிரிழந்தனர்.
- சனவரி 10 - ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.
- சனவரி 11 - புவியைப் போன்ற மிகச்சிறிய கெப்லர்-10பி என்ற புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- சனவரி 12 - ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வரலாறு காணாத வெள்ளத்தில்,குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
- சனவரி 13 - பிரேசில் வெள்ளப்பெருக்கில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- சனவரி 14 - சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்.[1]
- சனவரி 14 - துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பியோடினார்.
- ஏப்ரல் 3 - கசக்ஸ்தான் நாட்டின் அதிபர் நுர்சுல்தான் நசர்பாயெவ் தேர்தலில் 95.5% வாக்குகள் பெற்று சாதனை படைத்தார்.
விருதுகள்
தொகுஇறப்புகள்
தொகு- சனவரி - அரியான்பொய்கை செல்லத்துரை, ஈழத்துக் கலைஞர்
- சனவரி 7 - சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (பி. 1941)
- சனவரி 22 - அஸ்லம் கொகுகர், பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் (பி. 1920)
- சனவரி 24 - பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (பி. 1922)
- பெப்ரவரி 20 - மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்
- ஏப்ரல் 6 - கல்பகம் சுவாமிநாதன், வீணை இசைக்கலைஞர் (பி. 1922)
- ஏப்ரல் 6 - சுஜாதா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1952)
- ஏப்ரல் 20 - ர. சு. நல்லபெருமாள், தமிழ் எழுத்தாளர்
- ஏப்ரல் 24 - சத்திய சாயி பாபா, ஆன்மிக குரு (பி, 1926)
- மே 1 - உசாமா பின் லாதின், அல்கைதா தலைவர் (பி. 1957)
- மே 1 - அலெக்ஸ், தமிழ்த் திரைப்பட நடிகர்
- மே 4 - கி. கஸ்தூரிரங்கன், தமிழக எழுத்தாளர் (பி. 1933)
- மே 11 - ஆ. ச. தம்பையா, தமிழக மருத்துவர் (பி. 1924)
- மே 21 - சுவாமி அஜராத்மானந்தா, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)
- சூன் 3 - இலியாசு காசுமீரி, அல்கைதா உறுப்பினர் (பி. 1964)
- சூலை 6 - கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)
- சூலை 8 - கா. கலியபெருமாள், மலேசியத் தமிழறிஞர் (பி. 1937)
- செப்டம்பர் 18 - டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)