விக்ரம் நாட்காட்டி
விக்ரம் நாட்காட்டி (விக்ரம் சம்வாட், அல்லது பிக்ரம் சம்பாத்), (தேவநாகரி:विक्रम संवत) இந்திய பேரரசன் விக்கிரமாதித்தன் நிறுவிய நாட்காட்டியாகும். நேபாளத்தின் அலுவல்முறை நாட்காட்டியாகவும் இந்தியாவில் பலரும் பாவிக்கும் நாட்காட்டியாகவும் உள்ளது.நேபாளத்தில் விக்ரம் சம்வாத் தவிர அங்கு பழங்காலத்தில் நிலவிய நேபாள் சம்பாத்தும் கிரெகொரியின் நாட்காட்டியும் அங்கு பயன்படுத்தப்படுகிறது.
சந்திரகுப்த விக்கிரமாதித்தனால் நிறுவப்பட்டதாக எண்ணப்படும் பொதுவான கருத்துக்கு மாறாக, உண்மையில் இந்த நாட்காட்டி உஜ்ஜைனை ஆண்டுவந்த விக்கிரமாதித்தனால் கி.மு 56ஆம் ஆண்டில் அவன் சகா வம்சத்தவர்களை வெற்றி கண்டதைக் கொண்டாடும் வகையில் நிறுவப்பட்டது.[1]. இது சந்திர நாட்காட்டியை பின்பற்றிய இந்து நாட்காட்டியாகும்.விக்ரம் நாட்காட்டி 56.7 ஆண்டுகள் சூரிய நாட்காட்டியான கிரெகொரியின் நாட்காட்டியை விட கூடுதலாகும்.காட்டாக,விக்ரம் சம்வாட் 2056 கிரெகொரியின் நாட்காட்டியில் கி.பி 1999 ஆண்டு துவங்கி 2000ஆம் ஆண்டு முடிவடைந்தது.வட இந்தியாவில் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் துவங்கும் சைத்ரா மாதத்தின் அமாவாசையன்று ஆண்டு துவங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The cyclopædia of India and of Eastern and Southern Asia by Edward Balfour, B. Quaritch 1885, p502