ரூனிக் நாட்காட்டி
ரூனிக் நாட்காட்டி சந்திரனின் 19 ஆண்டு சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட எக்காலத்திற்குமான நாட்காட்டியாகும்.
ரூன் என்பது இலத்தீன் எழுத்துக்களை அங்கீகரிப்பதற்கு முன்னர் செருமானிய சார்பு மொழிக்குடும்பங்களில் இருந்துவந்த எழுத்துக்களாகும்.இவ்வெழுத்துக்களை பாவித்து மரச்சட்டங்களில் பண்டைய சுவீடன் மக்கள் பாவித்த இந்நாட்காட்டி அவ்வெழுத்துக்களை காரணமாகக் கொண்டு ரூன் கோல் அல்லது ரூன் பஞ்சாங்கம் என வழங்கப்பட்டது.கிடைத்துள்ள மிகப் பழமையான மரச்சட்டம் 13வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப் படுகிறது.
ஓர் ரூனிக் நாட்காட்டியில் சின்னங்கள் கொண்ட பல வரிகள் ஒன்றன் மேல் ஒன்றாக எழுதப்பட்டிருக்கும்.சிறப்பு நாட்களான கதிர்த்திருப்பங்கள்,சம இரவு நாட்கள் மற்றும் கிறித்தவ விடுமுறைகள் போன்றவை கூடுதல் வரிகளாக குறிக்கப்பட்டிருக்கும்.
நாட்காட்டியில் காலநிலை ஆண்டு மற்றும் நெட்டாண்டுகளைக் குறித்த செயல்பாடு இல்லை.ஒவ்வொரு ஆண்டின் கூதிர்கால கதிர்திருப்பத்திற்கு பிறகு ஏற்படும் முதல் முழுநிலவு அன்று ஆண்டு துவங்குகிறது.இந்நாள் பழஞ்சமய விருந்து மற்றும் சந்தை நாளாகும்.
கூடுதல் எழுத்துகள்
தொகுதுவக்கநிலை செருமானிய (ரூனிக்)மொழியில் 16 எழுத்துக்கள் (ரூன்கள்) இருந்தன.சந்திரனின் 19 ஆண்டுக்கால சுழற்சியை நாட்காட்டியில் குறித்திட மேலும் மூன்று எழுத்துக்கள் தேவைப்பட்டன. இதனை தீர்க்குமாறு மூன்று கூடுதல் எழுத்துக்கள் அர்லாக் (17),த்விமதுர் (18) மற்றும் பெல்க்டார் (19)உருவாக்கப்பட்டன.
-
Arlaug, ரூனிக் நாட்காட்டியில் எண் 17 எழுத்துரு.
-
Tvimadur, ரூனிக் நாட்காட்டியில் எண் 18 எழுத்துரு.
-
Belgthor, ரூனிக் நாட்காட்டியில் எண் 19 எழுத்துரு.
பிரைம்ஸ்டாவ்
தொகுபிரைம்ஸடாவ் (மொழிபெயர்ப்பு: முதன்மை கோல்) நார்வே நாட்டு பழமையான நாட்காட்டி கோலாகும்.இவற்றில் ரூன்களுக்குப் பதிலாக படிமங்கள் செதுக்கப்பட்டன.மிகப் பழமையான நாட்காட்டி கோல் 1457 ஆண்டிற்குரியது;அது அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
தற்கால பாவனை
தொகுஇந்த நாட்காட்டிகள் தற்போதைய பாவனையில் இல்லாதிருப்பினும் எஸ்தோனிய நாட்டு பழமைவிரும்பிகள் 1978ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூனிக் நாட்காட்டிகளை பதிப்பித்து வருகிறார்கள்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sirvilauad loevad aega". Archived from the original on 2012-09-04. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.