நவம்பர் 30
நாள்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 30 (November 30) கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.
- 1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர்.
- 1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார்.
- 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
- 1786 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
- 1803 – எசுப்பானிய அமெரிக்கா, மற்றும் பிலிப்பீன்சில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி இடுவதற்கான மூன்றாண்டுத் திட்டத்துக்கான பயணம் பால்மீசு என்ற மருத்துவர் தலைமையில் எசுப்பானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
- 1803 – லூசியானா வாங்கல்: எசுப்பானியா லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தது. 20 நாட்களின் பின்னர் பிரான்சு இப்பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
- 1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.
- 1853 – கிரிமியப் போர்: உருசியப் பேரரசின் கடற்படை வடக்கு துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் உதுமானியரின் படைகளைத் தோற்கடித்தன.
- 1872 – முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
- 1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
- 1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.[1]
- 1936 – இலண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.
- 1939 – பனிக்காலப் போர்: சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசீன.
- 1947 – பலத்தீன் உள்நாட்டுப் போர் ஆரம்பம். இது இசுரேல் என்ற நாட்டை உருவாக்க வழி வகுத்தது.
- 1954 – அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீடு ஒன்றில் வீழ்ந்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
- 1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
- 1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்படோசு விடுதலை பெற்றது.
- 1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
- 1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாக்கித்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
- 1971 – ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.
- 1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர அணுவாயுத ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
- 1995 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் வட அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களுக்கு ஆதரவாக உரையாற்றி, தீவிரவாதிகளை அவர் "நேற்றைய மனிதர்" எனக் கூறினார்.
- 1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
- 2000 – நாசா தனது 101-வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.
- 2012 – கொங்கோ குடியரசு, பிராசவில்லி நகரில் சரக்கு வானூர்தி ஒன்று நகரக் குடியிருப்புகளின் மீது வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1508 – ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (இ. 1580)
- 1667 – ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (இ. 1745)
- 1761 – சிமித்சன் டெனண்ட், ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1815)
- 1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரான்சிய ஓவியர் (இ. 1905)
- 1835 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
- 1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய இயற்பியலாளர் (இ. 1937)
- 1869 – நில்சு குஸ்டாப் டேலன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாலர் (இ. 1937)
- 1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
- 1888 – கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (இ. 1969)
- 1902 – திருக்கண்ணபுரம் விஜயராகவன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1955)
- 1904 – ச. து. சுப்பிரமணிய யோகி, தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1963)
- 1912 – ந. சிதம்பர சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர் (இ. 1977)
- 1923 – வி. என். ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (இ. 1996)
- 1931 – ரூமிலா தாப்பர், இந்திய வரலாற்றியலாளர்
- 1943 – டெரன்சு மாலிக், அமெரிக்க இயக்குநர்
- 1945 – வாணி ஜெயராம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2023)
- 1947 – மோசசு நாகமுத்து, கயானா அரசியல்வாதி, எழுத்தாளர்
- 1948 – கே. ஆர். விஜயா இந்திய திரைப்பட நடிகை
- 1952 – ஜீவா, தெலுங்குத் திரைப்பட நடிகர்
- 1957 – ஜி. விவேகானந்த், இந்திய அரசியல்வாதி
- 1961 – மன்சூர் அலி கான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1965 – பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்
- 1967 – இராஜிவ் தீக்சித், இந்திய சமூக ஆர்வலராவார் (இ. 2010)
- 1972 – கிறிஸ்டோப் பெக், தொலைக்காட்சி இசையமைப்பாளர்
- 1976 – மார்த்தா பர்கே, இத்தாலிய வானியலாளர்
- 1982 – எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை
- 1985 – கலே கியூகோ, அமெரிக்க நடிகை
- 1987 – டேனியல் நோபோவா, எக்குவடோர் அரசியல்வாதி
- 1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2014)
- 1989 – அபர்ணா நாயர், மலையாளத் திரைப்பட நடிகை
- 1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க வீரர்
- 1990 – நிவேதா பெத்துராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1990 – ராசி கன்னா, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1805 – பழசி இராசா, கோட்டயம்-மலபார் அரசர் (பி. 1753)
- 1830 – யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1752)
- 1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (பி. 1854)
- 1930 – மேரி ஹாரிசு ஜோன்சு, அமெரிக்க தொழிலாளர் செயற்பாட்டாளர் (பி. 1837)
- 1988 – எம். கே. றொக்சாமி, இலங்கை இசைக்கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1932)
- 1990 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1917)
- 1992 – மீனாம்பாள் சிவராஜ், தமிழக சமூகப் போராளி, பெண்ணியவாதி (பி. 1904)
- 2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 12வது பிரதமர் (பி. 1919)
- 2013 – ரகுராம், திரைப்பட நடன இயக்குநர், நடிகர் (பி. 1948)
- 2013 – பால் வாக்கர், அமெரிக்க நடிகர் (பி. 1973)
- 2014 – ஜார்பம் காம்லின், இந்திய அரசியல்வாதி (பி. 1961)
- 2018 – ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41-வது அரசுத்தலைவர் (பி. 1924)
- 2022 – சியான் செமீன், சீனாவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1926)
சிறப்பு நாள்
- தியாகிகள் நாள் (ஐக்கிய அரபு அமீரகம்)
- விடுதலை நாள் (பார்படோசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
- விடுதலை நாள் (தெற்கு யேமன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1967)
- புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 111
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 30 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்