நவம்பர் 24
நாள்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 24 (November 24) கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 380 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார்.
- 1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.
- 1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார்.
- 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
- 1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது.
- 1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்..
- 1859 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.
- 1865 – இலங்கையில் கொழும்பு, கண்டி மாநகரசபைகள் அமைக்கப்பட்டன.[1]
- 1914 – முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
- 1917 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
- 1922 – துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டர்சு உட்பட ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: தோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானப் படை வடக்கு மரியானா தீவுகளில் இருந்து குண்டுகளை வீசின.
- 1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடியை சுட்டுக் கொன்ற லீ ஆர்வி ஆசுவால்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
- 1965 – யோசப் மொபுட்டு கொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- 1966 – செக்கோசிலோவாக்கியாவில் பிராத்திஸ்லாவா நகரில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் உயிரிழந்தனர்.
- 1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
- 1971 – வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் வான்குடையுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
- 1973 – 1973 எண்ணெய் நெருக்கடியை அடுத்து செருமனியில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இது அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருந்தது.
- 1976 – துருக்கியின் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
- 2002 – ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் தில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
- 2006 – சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
- 2012 – டாக்கா நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்.
- 2015 – உருசியாவின் சுகோய் சு-24 போர் விமானம் சிரியா-துருக்கிய எல்லையில் துருக்கிய வான்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வானோடி ஒருவர் கொல்லப்பட்டார்.
- 2016 – கொலம்பியா அரசும் கொலம்பியா மக்கள் இராணுவமும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. நாட்டின் 50-ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 2017 – பிர் அல்-அபெட் தாக்குதல்: எகிப்தில் பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளிவாசலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1632 – பரூக் இசுப்பினோசா, இடச்சு மெய்யியலாளர் (இ. 1677)
- 1784 – சக்கரி தைலர், அமெரிக்காவின் 12வது அரசுத்தலைவர் (இ. 1850)
- 1888 – டேல் கார்னெகி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1955)
- 1914 – அபுல் அஸன் அலி அஸனி நத்வி, இந்திய இசுலாமிய அறிஞர் (இ. 1999)
- 1918 – கிருஷ்ண சைதன்யா, மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (இ. 1994)
- 1924 – தத்தினேனி பிரகாஷ் ராவ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992)
- 1934 – கரோலின் கர்லெசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1987)
- 1939 – எஸ். ஏ. ஐ. மத்தியு, இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (இ. 2016)
- 1943 – மான்டெக் சிங் அலுவாலியா, இந்தியப் பொருளியலாளர், ஆட்சிப் பணி அதிகாரி
- 1955 – இயன் போத்தம், ஆங்கிலேயத் துடுப்பாளர்
- 1961 – அருந்ததி ராய், இந்திய எழுத்தாளர்
- 1968 – அனுர குமார திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி
- 1969 – ருமேஸ் களுவித்தாரன, இலங்கைத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1675 – குரு தேக் பகதூர், இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1621)
- 1834 – ஜான் கில்லிஸ், இசுக்கொட்லாந்து தாவரவியலாளர் (பி. 1792)
- 1891 – லிட்டன் பிரபு, ஆங்கிலேய கவிஞர் (பி. 1831)
- 1953 – வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், தமிழக இந்தியவியலாளர் (பி. 1896)
- 1973 – ஏ. எம். ஏ. அசீஸ், இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1911)
- 1980 – என்றியேட்டா கில் சுவோப், அமெரிக்க வானியலாளர் (பி. 1902)
- 2002 – ஜான் ரால்ஸ், அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1921)
- 2004 – ஆர்தர் ஹெய்லி, ஆங்கிலேய-கனடிய எழுத்தாளர் (பி. 1920)
- 2005 – தனுஷ்கோடி ராமசாமி, தமிழக எழுத்தாளர் (பி. 1945)
- 2009 – சமாக் சுந்தரவேஜ், தாய்லாந்தின் 25வது பிரதமர் (பி. 1935)
- 2011 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி, இராணுவ அதிகாரி (பி. 1938)
- 2014 – முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937)
- 2015 – ஏ. எஸ். பொன்னம்மாள், தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர்
- 2018 – அம்பரீசு, கன்னடத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1952)
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 24 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்