சுகோய் சு-24 (Sukhoi Su-24, உருசியம்: Су-24, நாட்டோ குறிப்பிடும் பெயர்: "பென்சர்", Fencer) சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து-வானிலை மீயொலிவேக குண்டுவீசு வானூர்தி ஆகும். இந்த வானூர்தியில் மடங்கு-நீட்டு இறக்கை, இரு தாரைப்பொறிகள், அடுத்தடுத்து அமரக்கூடிய இரு இருக்கைகள் சிறப்பம்சங்களாக உள்ளன. இது செலுத்துகை/தாக்குதல் அமைப்பு ஒருங்கிணைந்து எண்ணிம முறைமையில் வடிவமைக்கப்பட்ட முதல் சோவியத் வானூர்தி ஆகும்.[1] இந்த படைத்துறை வானூர்தி உருசிய, உக்ரானிய, கசக் வான்படைகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்ட பிற நாட்டு வான்படைகளிலும் சேவையில் உள்ளது.

சு-24
உருசிய வான்படையின் சு-24எம், மே 2009
வகை அனைத்து-வானிலை குண்டுவீசு வானூர்தி
உற்பத்தியாளர் சுகோய்
வடிவமைப்பாளர் 1985 முதல் யெ. எசு. பெல்சுனர் – எல்.ஏ. லோக்வினோவ்[1]
முதல் பயணம் T-6: 2 சூலை 1967
T-6-2I: 17 சனவரி 1970
அறிமுகம் 1974
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் உருசிய வான்படை
உக்ரைனிய வான்படை
கசக் வான்படை
ஈரான் இசுலாமியக் குடியரசின் வான்படை
உற்பத்தி 1967–1993[1]
தயாரிப்பு எண்ணிக்கை ஏறத்தாழ 1,400
அலகு செலவு $24–25 மில்லியன் (1997)

உருவாக்கம்

தொகு

வடிவமைப்புக் கட்டம்

தொகு
 
T-6-1

ஆகத்து 24, 1965இல் இந்த வானூர்தியை உருவாக்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது; இது டி-6 என்ற குறிப்பெயருடன் திட்டமிடப்பட்டது. முதல் முன்னோடி, டி-6-1 மே 1967இல் தயாரானது; சூலை 2 அன்று விளாடிமர் இல்யுசினின் கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டது.[2] துவக்கத்தில் நான்கு தூக்குப் பொறிகளின்றி இயக்கப்பட்டன; அக்டோபர் 1967இல்தான் இவை நிறுவப்பட்டன. அதேவேளையில் ஆர்-27களுக்கு மாற்றாக லையுல்கா ஏஎல் இரக வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தூக்குப் பொறிகள் எரிபொருளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைவதால் பறக்கும் தொலைவு குறைவது கண்டறியப்பட்டது; மேலும் குறைந்த ஏறுகை இறங்குகை வானூர்திப் பறப்பிலிருந்து வழமையான வானூர்திப் பறப்பிற்கு மாறுகையில் தடுமாற்றமும் காணப்பட்டது.[2] எனவே ஆறு-பொறிகள் கொண்ட வடிவமைப்புக் கைவிடப்பட்டது.

 
2015 நிலவரப்பட்டி சு-24 இயக்குபவர்கள். (நீலம்) முன்னாளில் இயக்கியவர்கள் (சிவப்பு)

1967இல், F-111 இரக வானூர்திகள் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டதால் மடக்கு-நீட்டு இறக்கை வடிவமைப்பின் பயன்களும் தொழினுட்பத் தீர்வுகளும் புலனாயின. ஆகத்து 7, 1968இல் டி-6யை மாறும் வடிவவியல் இறக்கை கொண்டு வடிவமைக்க ஆணையிடப்பட்டது. இவ்வகை டி-6-2I முதலில் சனவரி 17, 1970 அன்று இல்யுசினால் இயக்கப்பட்டது. தொடர்ந்து அரசு சோதனையோட்டங்கள் 1974 வரை நீடித்தன. வானூர்தியின் சிக்கலான கட்டுப்பாட்டு அறைக் கருவிகளை இயக்க அரசு ஓட்டிகளைப் பழக்கப்படுத்த நேரம் எடுத்தது.[2] பகலோ இரவோ, மழையோ வெயிலோ,பனியோ செலுத்தக்கூடிய திறன்கள் சோதிக்கப்பட்டன. செலுத்துகை/தாக்குதலுக்காக இரண்டு ஓரியன்-ஏ இரக கதிரலைக் கும்பாக்களும் மிகத் தாழ்ந்த பறப்புகளின்போது பறப்பைத் துல்லியமாக கட்டுப்படுத்த தனிப்பட்ட ரெலெப் தரை தேடும் கதிரலைக் கும்பாவும் ஊர்தியிலேயே இடம்பெற்ற ஓர்பிட்டா-10-58 கணினியும் உள்ளடக்கிய பூமா செலுத்துகை/தாக்குதல் அமைப்பு இதற்கு காரணமாயிற்று.[1] ஓட்டுநர்களுக்கு இசுவெசுடா கே-36 டி இரக வெளியேற்று இருக்கைகள் அமைக்கப்பட்டன; இவைமூலம் விமானிகள் எவ்வுயரத்திலும் எந்த வேகத்திலும் செல்கையிலும் ஏறும்போதும் இறங்கும்போதும் வெளியேற முடியும்.[1][2] இறுதியாக்கப்பட்ட வடிவமைப்பில் 3,000 கிமீ (கிட்டத்தட்ட 2,000 மைல்கள்) செல்லக்கூடியதாகவும் 8,000 கிலோ (கிட்டத்தட்ட 18,000 பவுண்டு) தாங்குசுமை கொண்டதாகவும் F-111ஐ விட சிறியதாகவும் குறைந்த தொலைவு செல்லக்கூடியதாகவும் உறுதி செய்யப்பட்டது.

இரண்டு உருசிய Su-24எம் வானூர்திகள் பறப்பில், 2009

முதல் தயாரிப்பு வானூர்தி திசம்பர் 31, 1971 அன்று வி.டி.வைலோமோவ் இயக்கத்தில் பறந்தது; பெப்ரவரி 4, 1975இல் டி-6 முறையாக சு-24 என சேவையில் ஏற்கப்பட்டது.[2] ஏறத்தாழ 1,400 சு-24கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேம்பாடுகள்

தொகு

தற்போது சேவையிலுள்ள Su-24M வானூர்திகள் வாழ்நாள் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின்கீழ் குளோநாசு எனப்படும் துணைக்கோள்வழி செலுத்துகை அமைப்பு, பல்வினைக் காட்சிப்பலகைகள், தலைமேல் காட்சிப்பலகைகள், எண்ணிம இயங்குநிலப்பட உருவாக்கி, தலைக்கவசத்தில் பொருத்தப்பட்ட காட்சிகள், நவீன வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள், வான்-வான் ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் இருக்கையகம் என மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வானூர்திகள் சு-24எம்2 எனப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Airplanes - Military Aircraft - Su-24 - Historical background". Sukhoi Company (JSC). Archived from the original on 19 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Sukhoi Su-24 history". sukhoi.org. 15 April 2007. Archived from the original on 25 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 January 2011.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சு-24
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்_சு-24&oldid=3932248" இலிருந்து மீள்விக்கப்பட்டது