வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு

அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணி

பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது.

வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு
Organisation du traité de l'Atlantique nord
உருவாக்கம்4 ஏப்ரல் 1949
வகைஇராணுவக் கூட்டணி
தலைமையகம்பிரசெல்ஸ், பெல்ஜியம்
உறுப்பினர்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
பிரெஞ்சு[2]
பொதுச் செயலாளர்
ஆண்டர்ஸ் ஃபோ ராஸ்முசென்
இராணுவச் செயற்குழுத் தலைவர்
கியாம்பாவுலோ டி பாவுலோ
வலைத்தளம்

இதன் முதல் சில ஆண்டுகள் இது ஒரு அரசியல் கூட்டணியாகவே செயல்பட்டது. ஆனாலும், கொரியப் போர் இதன் உறுப்பு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக் கூட்டணியின் முதல் செயலாளர் நாயகமான லார்ட் இஸ்மே என்பவரின் புகழ் பெற்ற கூற்றின்படி, இவ்வமைப்பின் நோக்கம், ரஷ்யர்களை வெளியிலும், அமெரிக்கர்களை உள்ளேயும், ஜேர்மானியர்களைக் கீழேயும் வைத்திருப்பதாகும். பனிப்போர்க் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் தொடர்புகளின் பலம் குறித்த ஐயம் நிலவி வந்ததுடன், சோவியத் ஒன்றியத்தின் தாக்குதலுக்கு எதிராக "நாட்டோ" கூட்டணியினர் வழங்கக்கூடிய பாதுகாப்புக் குறித்த கவலைகளும் இருந்தன. இது பிரான்சின் அணுவாயுதத் திட்டத்தின் உருவாக்கத்துக்கும், 1966 இல் பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கும் வழிகோலியது.

பொது செயலாளர்களின் பட்டியல்
# பெயர் நாடு காலப்பகுதி
1 லோர்ட் இஸ்மாய்  ஐக்கிய இராச்சியம் 4 ஏப்ரல் 1952 – 16 மே 1957
2 போல்-ஹென்றி ஸ்பாக்  பெல்ஜியம் 16 மே 1957 – 21 ஏப்ரல் 1961
3 டிர்ட் ஸ்டிக்கர்  நெதர்லாந்து 21 ஏப்ரல் 1961 – 1 ஆகஸ்ட் 1964
4 மன்லியோ புரோசியோ  இத்தாலி 1 ஆகஸ்ட் 1964 – 1 அக்டோபர் 1971
5 லோசப் லூனஸ்  நெதர்லாந்து 1 அக்டோபர் 1971 – 25 ஜூன் 1984
6 லோர்ட் கரிங்டன்  ஐக்கிய இராச்சியம் 25 ஜூன் 1984 – 1 ஜூலை 1988
7 மான்பிரெட் வோர்னர்  செருமனி 1 ஜூலை 1988 – 13 ஆகஸ்ட் 1994
சேர்ஜியோ பலசினோ (பதிலாக)  இத்தாலி 13 ஆகஸ்ட் 1994 – 17 அக்டோபர் 1994
8 வில்லி கிளீஸ்  பெல்ஜியம் 17 அக்டோபர் 1994 – 20 அக்டோபர் 1995
சேர்ஜியோ பலசினோ (பதிலாக)  இத்தாலி 20 அக்டோபர் 1995 – 5 டிசம்பர் 1995
9 ஜேவியர் சொலனா  எசுப்பானியா 5 டிசம்பர் 1995 – 6 அக்டோபர் 1999
10 லோர்ட் றொபேட்சன்  ஐக்கிய இராச்சியம் 14 அக்டோபர் 1999 – 17 டிசம்பர் 2003
அலெஸ்ஸாண்ட்ரோ மினுட்டோ-றிசோ (பதிலாக)  இத்தாலி 17 டிசம்பர் 2003 – 1 ஜனவரி 2004
11 ஜாப் டி ஹூப் செப்பர்  நெதர்லாந்து 1 ஜனவரி 2004 – 1 ஆகஸ்ட் 2009
12 அன்டேர்ஸ் போக் ரஸ்முசென்  டென்மார்க் 1 ஆகஸ்ட் 2009–செப்டம்பர் 2014
12 இயென்சு சுடோல்ட்டென்பர்க்  சுவீடன் 1 அக்டோபர் 2014–'
பிரதிப் பொதுச் செயலாளர்களின் பட்டியல்[3]
# பெயர் நாடு காலப்பகுதி
1 ஜோன்கீர் வான் விரெடென்பேர்ச்  நெதர்லாந்து 1952–1956
2 பாரொன் அடோல்ப் பென்ரிங்க்  நெதர்லாந்து 1956–1958
3 அல்பெரிக்கோ கசார்டி  இத்தாலி 1958–1962
4 கைடோ கொலொன்னா டி பலியானோ  இத்தாலி 1962–1964
5 ஜேம்ஸ் ஏ. ரொபேட்ஸ்  கனடா 1964–1968
6 ஒஸ்மன் ஒல்கேய்  துருக்கி 1969–1971
7 பவோலோ பன்சா செட்ரோனியோ  இத்தாலி 1971–1978
8 ரினால்டோ பெட்ரிஞானி  இத்தாலி 1978–1981
9 எரிக் டா ரின்  இத்தாலி 1981–1985
10 மார்செல்லோ கைடி  இத்தாலி 1985–1989
11 அமேடியோ டி பிரான்சிஸ்  இத்தாலி 1989–1994
12 சேர்ஜியோ பலன்சினோ  இத்தாலி 1994–2001
13 அலெஸ்ஸாண்ட்ரோ மினுட்டோ-றிசோ  இத்தாலி 2001–2007
14 குளோடியோ பிசொக்னீரோ  இத்தாலி 2007–2012
15 அலெக்சாண்டர் வேர்ஸ்போ  ஐக்கிய அமெரிக்கா 2012–

பங்குபற்றும் நாடுகள்

தொகு
வட_அத்திலாந்திய_ஒப்பந்த_அமைப்பில் பங்குபற்றும் ஐரோப்பிய நாடுகள் சர்வதேச ரீதியில் வட_அத்திலாந்திய_ஒப்பந்த_அமைப்பில் பங்குபற்றும் நாடுகள்
   

மேற்கோள்கள்

தொகு
  1. "The official Emblem of NATO". NATO. Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
  2. "English and French shall be the official languages for the entire North Atlantic Treaty Organization.", Final Communiqué following the meeting of the North Atlantic Council on September 17, 1949. "(..)the English and French texts [of the Treaty] are equally authentic(...)"The North Atlantic Treaty, Article 14
  3. "NATO Who's who? – Deputy Secretaries General of NATO". NATO. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூலை 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)