பிரசெல்சு

(பிரசல்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரசெல்சு (பிரெஞ்சு மொழி: Bruxelles, [bʁysɛl] (கேட்க); டச்சு: Brussel, [ˈbrʏsəɫ] (கேட்க)), உத்தியோக பூர்வமாக பிரசெல்சு பகுதி அல்லது பிரசெல்சு தலைநகரப் பகுதி[5][6] (பிரெஞ்சு மொழி: Région de Bruxelles-Capitale, டச்சு: Brussels Hoofdstedelijk Gewest), என்பது பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைநகரமுமாகும். இதுவே பெல்ஜியத்தின் பாரிய நகரப் பகுதியாகும்.[7][8] இது பெல்ஜியத்தின் நீதித்துறைத் தலைநகரான பிரசெல்சு நகர் உட்பட 19 மாநகர சபைகளைக் கொண்டுள்ளது. பிரசெல்சு நகரில் "பெல்ஜியத்தின் பிரஞ்சுச் சமூகம்" மற்றும் "பிளெமிய சமூகம்" ஆகியன காணப்படுகின்றன.[9]

பிரசெல்சு
  • Bruxelles
  • Brussel
பெல்ஜியத்தின் பகுதி
  • பிரசெல்சு - தலைநகரப் பகுதி
  • Région de Bruxelles-Capitale
  • Brussels Hoofdstedelijk Gewest
பிரசெல்சின் பல்வேறு தோற்றங்கள், மேல்: நோர்தேர்ன் குவாட்டர் வணிக மாவட்டத்தின் காட்சி., 2வது இடது: கிரான்ட்பிளேசின் ஃப்ளோரல் கார்ப்பட் நிகழ்வு, 2வது வலது: பிரசெல்சு நகர மண்டபம் மற்றும் மொன்ட் டெஸ் ஆர்ட்ஸ் பகுதி, 3வது: ஐம்பதாண்டுப் பூங்கா, 4வது இடது: மான்னெக்கன் பிஸ், 4வது நடு: புனித மிக்கேல் மற்றும் புனித குடுலா தேவாலயம், 4வது வலது: காங்கிரசு தூண் கீழ்: பிரசெல்சின் அரச மாளிகை
பிரசெல்சின் பல்வேறு தோற்றங்கள், மேல்: நோர்தேர்ன் குவாட்டர் வணிக மாவட்டத்தின் காட்சி., 2வது இடது: கிரான்ட்பிளேசின் ஃப்ளோரல் கார்ப்பட் நிகழ்வு, 2வது வலது: பிரசெல்சு நகர மண்டபம் மற்றும் மொன்ட் டெஸ் ஆர்ட்ஸ் பகுதி, 3வது: ஐம்பதாண்டுப் பூங்கா, 4வது இடது: மான்னெக்கன் பிஸ், 4வது நடு: புனித மிக்கேல் மற்றும் புனித குடுலா தேவாலயம், 4வது வலது: காங்கிரசு தூண் கீழ்: பிரசெல்சின் அரச மாளிகை
அடைபெயர்(கள்): ஐரோப்பாவின் தலைநகரம்[1] நகைச்சுவை நகரம்[2][3]
அமைவிடம்: பிரசெல்சு  (red) – in the European Union  (brown & light brown) – in Belgium  (brown)
அமைவிடம்: பிரசெல்சு  (red)

– in the European Union  (brown & light brown)
– in Belgium  (brown)

கவுன்டிபெல்ஜியம்
குடியேற்றம்c. 580
நிறுவல்979
பகுதிகள்18 June 1989
அரசு
 • அமைச்சுத் தலைவர்ரூடி வெர்வூட்(2013–)
 • ஆள்பதிஜீன் கிளமன்ட் (2010–)
 • பாராளுமன்றத் தலைவர்எரிக் தோமசு
பரப்பளவு
 • பகுதி161.38 km2 (62.2 sq mi)
ஏற்றம்
13 m (43 ft)
மக்கள்தொகை
 • பகுதிவார்ப்புரு:Metadata Population BE
 • அடர்த்தி7,025/km2 (16,857/sq mi)
 • பெருநகர்
18,30,000
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
ISO 3166
BE-BRU
இணையதளம்www.brussels.irisnet.be

பிரசெல்சு சார்லமேனின் வழித்தோன்றல் ஒருவரால் 10ம் நூற்றாண்டில் ஒரு கோட்டை நகராக உருவாக்கப்பட்டு பின் ஒரு நகராக வளர்ச்சியடைந்துள்ளது.[10] இந்நகரின் சனத்தொகை 1.1 மில்லியனும் இதன் பெருநகர்ப்பகுதிச் சனத்தொகை 1.8 மில்லியனும் ஆகும். இது பெல்ஜியத்திலேயே பெரிய சனத்தொகையாகும்.[11][12] இரண்டாம் உலகப் போரின் முடிவு தொடக்கம் பிரசெல்சு சர்வதேச அரசியலின் முக்கிய மையமாகத் திகழ்கிறது. இது முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள்[13] மற்றும் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமையத்தின் தலைமையகம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் ஒரு பன்மொழிச் சமூகத்தை உருவாக்கியுள்ளதுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசியல் வல்லுனர்கள் போன்றோரின் இருப்பிடமாகவும் விளங்குகிறது.[14]

வரலாற்று ரீதியாக டச்சு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரசெல்சு, 1830ல் பெல்ஜியத்தின் விடுதலையைத் தொடர்ந்து பிரெஞ்சு மொழி பேசும் சமுதாயமாக மாறியுள்ளது. இன்று இந்நகர் அதிகார பூர்வமாக இருமொழி நகராகும். இங்கு காணப்படும் போக்குவரத்து அடையாளங்கள், வீதிகளின் பெயர்கள் மற்றும் பல்வேறு விளம்பர மற்றும் சேவைப் பதாகைகள் இவ்விரு மொழிகளையும் கொண்டுள்ளன.[15] இங்கு மொழி தொடர்பான முறுகல்கள் காணப்படுவதோடு, பிரசெல்சைச் சுற்றியுள்ள நகரங்களில் காணப்படும் மொழி தொடர்பான சட்டங்கள் பெல்ஜியத்தில் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

வரலாறு

தொகு
 
லொரைனின் சார்ள்சு என்பவரே 979ல் பிரசெல்சை உருவாக்கினார்.

பிரசெல்சின் பெயர் தோன்றிய விதம் தொடர்பான பொதுவான கருத்தின் படி, "புரோக்செல்" என்ற பண்டைய டச்சுச் சொல்லே இதன் மூலமாகும். இதன் கருத்து சதுப்புநிலம் ("புரோக்") மற்றும் வீடு ("செல்") அல்லது சதுப்பு நிலத்திலுள்ள வீடு என்பதாகும்.[16] பிரசெல்சின் ஆரம்ப அமைவிடம் சீன் நதியிலுள்ள ஒரு தீவின் மீது அமைந்துள்ளது. இது 580 அளவில் உருவாக்கப்பட்டது.[17] கம்பிராயின் ஆயரான புனித வின்டிசியானசு என்பவரே "புரோசெல்லா" எனப்பட்ட இடத்தைப் பற்றிய முதல் குறிப்புகளை எழுதியுள்ளார்.[18] இவரது காலமான 695இல் இது ஒரு சிறு கிராமமாகவே இருந்துள்ளது. எனினும் அதிகாரபூர்வமான பிரசெல்சின் உருவாக்கம் 979ம் ஆண்டளவிலேயே இடம்பெற்றது. இவ்வாண்டில் கீழ் லோதரிஞ்சியாவின் சார்ள்சு என்பவன், புனித குடுலா என்பவரின் தந்த தாதுவை மூர்செல் எனுமிடத்திலிருந்து புனித கௌகரிகசின் தேவாலயத்துக்கு மாற்றினான். மேலும் இவன் அத்தீவிலேயே முதலாவது நிரந்தரமான கோட்டையைக் கட்டினான்.

சார்ள்சின் மகளை மணந்துகொண்டதன் மூலம் லூவானின் முதலாம் லம்பேட் என்பவன் 1000ம் ஆண்டளவில் பிரசெல்சைப் பெற்றுக்கொண்டான். புரூக்சு, கென்ட் மற்றும் கொலோன் ஆகிவற்றுக்கிடையிலான வணிகப்பாதையில் காணப்பட்ட சீன் நதியின் கரையில் அமைந்திருந்த காரணத்தால் பிரசெல்சு ஓரளவு விரைவான முன்னேற்றம் கண்டது. இது ஒரு வாணிக மையமாக வளர்ந்ததுடன் அதன் எல்லை மேல் நகரம் வரை விரிவடைந்தது. இதன் சனத்தொகை 30,000ஐ எட்டியபோது பிரசெல்சைச் சூழவுள்ள சதுப்பு நிலங்கள் நிரப்பப்பட்டு மேலதிக விரிவாக்கங்கள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் லூவானின் ஆட்சியாளர்கள், பிராபன்டின் ஆட்சியாளர்களாக மாறினர். 13ம் நூற்றாண்டில் இந்நகரச் சூழக் கோட்டை மதில்கள் எழுப்பப்பட்டன.[19]

 
பிரஞ்சு இராணுவத்தினால் 1695ல் நடத்தப்பட்ட தாக்குதலின் பின் கிராண்ட் பிளேஸ்

13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நகர மதில்களின் கட்டுமானத்தின் பின் பிரசெல்சு குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தது. நகரை விரிவாக்குமுகமாக 1356க்கும் 1383க்கும் இடையில் இரண்டாம் கட்ட மதில்கள் எழுப்பப்பட்டன. இவற்றின் எச்சங்களை இன்றும் காணலாம்.

1516ல் ஐந்தாம் சார்ள்சு பிரசெல்சின் புனித மிக்கேல் மற்றும் புனித குடுலா தேவாலயத்தில், தன்னை எசுப்பானியாவின் மன்னனாக அறிவித்துக் கொண்டான். இவனது பாட்டனான முதலாம் மாக்சிமில்லியனின் மரணத்தின் பின், சார்ள்சு ஹப்ஸ்பேர்க் பேரரசு மற்றும் உரோமப் பேரரசின் மன்னனானான். 1555ல் கூட்டன்பேர்க்கிலுள்ள மாளிகைத் தொகுதியில் ஐந்தாம் சார்ள்சு முடி துறந்தான். இம் மாளிகை ஐரோப்பா முழுவதிலும் பிரசித்தி பெற்றிருந்ததோடு, பிராபன்ட் அரசர்களின் தலைமையிடமாக ஆன பின் பாரியளவில் விரிவாக்கப்பட்டது. எனினும் 1731ல் இடம்பெற்ற தீவிபத்தின் பின் இது அழிவடைந்தது.

1695ல், பிரான்சின் பதினான்காம் லூயி தனது படைகளை அனுப்பி பீரங்கிகள் மூலம் பிரசெல்சைத் தாக்கினான். இதனால் ஏற்பட்ட தீவிபத்துடன் பிரசெல்சு பாரிய அழிவைச் சந்தித்தது. இந்நகரின் மூன்றிலொரு பகுதிக் கட்டடங்கள், அதாவது கிட்டத்தட்ட 4000 கட்டடங்களுடன் கிரான்ட் பிளேசும் அழிக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியை மீளமைக்கும் நடவடிக்கைகள் அடுத்தடுத்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இது அந்நகரின் தோற்றத்தையே மாற்றியமைத்தது. 1746ல் ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின்போது இந் நகரம் பிரான்சினால் கைப்பற்றப்பட்டது. மூன்றாண்டுகளின் பின் இது ஆஸ்திரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

1795 வரை பிரசெல்சு ஆஸ்திரியாவுடன் இணைந்திருந்தது. தென் நெதர்லாந்துப் பகுதி பிரான்சினால் கைப்பற்றப்படும்வரை இந்நிலை நீடித்தது. டைல் பகுதியின் தலைநகராக பிரசெல்சு நியமிக்கப்பட்டது. 1815 வரை இது பிரான்சின் பகுதியாக இருந்தது. பிரசெல்சு அவ்வாண்டில் நெதர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்தது. டைல் பகுதி, பிரசெல்சைத் தலைநகராகக் கொண்டு தென் பிராபன்ட் மாகாணமானது.

 
"1830ன் பெல்ஜியப் புரட்சியின் அத்தியாயங்கள்", வாப்பெர்ஸ் (1834)

1830ல், பிரசெல்சிலும் பெல்ஜியப் புரட்சி பரவியது. புதிய நாட்டின் தலைநகரமாகவும் புதிய அரசாங்கத்தின் தலைமையகமாகவும் பிரசெல்சு செயல்பட்டது. தென் பிராபன்ட் பகுதி, பிராபன்ட் எனப் பெயர் மாற்றப்பட்டு பிரசெல்சு அதன் தலைநகரானது. சூலை21, 1831ல் முதலாம் லெப்பால்ட் பெல்ஜியத்தின் முதல் மன்னனானான். இவன் நகர மதிகளை அழித்ததுடன், புதிய கட்டடங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டான். இந் நகரம் பல மாற்றங்களுக்கு உள்ளானது. சீன் நதி நகரின் பாரிய சுகாதாரச் சீர்கேட்டுக்கு வழிகோலியமையால், 1867இலிருந்து 1871 வரை நகர்ப்பகுதிக்குள் காணப்பட்ட அதன் பகுதி முழுவதும் முழுமையாக மூடப்பட்டது. இதன் காரணமாக நகரம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு நவீன கட்டடங்களும் வீதியமைப்புக்களும் கட்டப்பட்டன.

 
1927ல் பிரசெல்சில் நடைபெற்ற சோல்வே மாநாடே உலகின் ஐந்தாவது பௌதிகவியல் மாநாடாகும்.

இக்காலப்பகுதியில் பிரசெல்சு பெரும்பாலும் ஒரு டச்சு மொழிபேசும் நகரமாகக் காணப்பட்டது. இது 1921ல் பிரெஞ்சு தனி ஆட்சிமொழியாக அறிவிக்கப்படும் வரை தொடர்ந்தது. எவ்வாறாயினும் 1921ல், பெல்ஜியம் மூன்று மொழிப் பிரதேசங்களாகப் பிளவுற்றது. அவை டச்சு மொழி பேசும் பிலாந்தர்சு, பிரெஞ்சு மொழி பேசும் வல்லோனியா மற்றும் இரு மொழி பேசும் பிரசெல்சு என்பனவாகும். 20ம் நூற்றாண்டில், இந்நகரம் பல்வேறு மாநாடுகள் மற்றும் சந்தைகளை நடத்தியுள்ளது. அவற்றுள் 1927ல் நடைபெற்ற சோல்வே மாநாடு மற்றும் 1935 பிரசெல்சு சர்வதேசக் கண்காட்சி மற்றும் எக்ஸ்போ '58 ஆகிய வர்த்தகக் கண்காட்சிகள் என்பவை குறிப்பிடத்தக்கவை. முதலாம் உலகப் போரில் பிரசெல்சு செருமனியால் கைப்பற்றப்பட்டாலும், செருமானியப் படைகள் இதற்குச் சேதம் விளைவிக்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் மீண்டும் இது செருமானியர் வசப்பட்டு பாரிய அழிவுகளைச் சந்தித்தது. பின்னர் இது பிரித்தானியத் தாங்கிப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

போரின்பின் பிரசெல்சு நவீனமயப்படுத்தப்பட்டது. புதிய புகையிரதப் பாதைகளும் உருவாக்கப்பட்டன. 1960களின் தொடக்கத்திலிருந்து பிரசெல்சு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரானதுடன், புதிய கட்டடங்களும் கட்டப்பட்டன. எனினும் எதிர்பாராத வகையில் இதன் பண்டைய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

1988ன் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் பின் சூன் 18, 1989 அன்று பிரசெல்சு தலைநகரப் பகுதி உருவாக்கப்பட்டது. இது இரு மொழிப் பயன்பாட்டு நிலையைப் பெற்றுள்ளதுடன் பிலாந்தர் மற்றும் வல்லோனியா ஆகியவற்றுடன் கூடிய பெல்ஜியத்தின் கூட்டமைப்புப் பிரதேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.[5][6]

நகர சபைகள்

தொகு
 
பிரசெல்சு நகர மண்டபம் - 1880களில்

பிரசெல்சு தலைநகரப் பகுதியின் 19 நகர சபைகளும் தத்தம் எல்லைக்குட்பட்ட கடமைகளை நிறைவேற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இவற்றுள் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாடசாலைகள் மற்றும் வீதிகளைப் பராமரித்தல் என்பன அடங்கும்.[20][21] நகரசபையின் நிர்வாகம் நகர முதல்வர், சபை மற்றும் நிறைவேற்றுக் குழு ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.[21]

1831ல், பெல்ஜியம் பிரசெல்சின் 19 பகுதிகள் அடங்கலாக 2739 நகர சபைகளாகப் பிரிக்கப்பட்டது.[22] 1964,1970 மற்றும் 1975களில் பெல்ஜியத்தின் சில நகர சபைகள் ஒன்றிணைக்கப்பட்டபோதும் பிரசெல்சு தலைநகரப் பகுதியில் காணப்பட்ட நகரசபைகள் ஏனையவற்றுடன் இணைக்கப்படவில்லை.[22] எவ்வாறாயினும், பிரசெல்சு தலைநகர்ப் பகுதிக்கு வெளியிலுள்ள சில நகரசபைகள் பிரசெல்சு நகருடன் இணைக்கப்பட்டன. இவற்றுள் 1921ல் இணைக்கப்பட்ட லேக்கன், ஆரென் மற்றும் நெடெர் ஓவர் ஈம்பீக் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[23]

நகரசபைகளில் பெரியதும் சனத்தொகை மிகுந்ததுமான பிரசெல்சு நகர் 32.6 சதுர கிலோமீட்டர்கள் (12.6 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், 145,917 பேர் இங்கு வசிக்கின்றனர். சனத்தொகை குறைந்த நகரசபை 18,541 பேரைக் கொண்ட கோகெல்பேர்க் ஆகும். பரப்பளவில் சிறியது 1.1 சதுர கிலோமீட்டர்கள் (0.4 sq mi) பரப்பளவைக் கொண்ட செயின்ட் ஜோசே டென் நூட் ஆகும்.எனினும், இதுவே உயர் சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. இதன் சனத்தொகை அடர்த்தி சதுரக் கிலோமீற்றருக்கு 20,822 பேர் ஆகும்.

காலநிலை

தொகு

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் பிரசெல்சு சமுத்திரக் காலநிலையைக் கொண்டுள்ளது. பிரசெல்சு கடற்கரைக்கு அண்மையிலுள்ளதால் அத்திலாந்திக்கு பெருங்கடலிலிருந்து வீசும் கடற்காற்று இதன் காலநிலையில் செல்வாக்குச் செலுத்துகிறது. அருகிலுள்ள ஈரநிலங்களும் கடல்சார் இடைவெப்பக் காலநிலையைக் கொண்டுள்ளன. சராசரியாக (கடந்த 100 வருடகால அளவீடுகளின்படி) பிரசெல்சு தலைநகரப் பகுதியில் வருடத்துக்கு அண்ணளவாக 200 மழை நாட்கள் காணப்படுகின்றன.[24] பனிவீழ்ச்சி மிகவும் அரிதாக, வருடத்துக்கு பொதுவாக ஒருமுறை அல்லது இருமுறை நிகழ்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பிரசெல்சு
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 15.3
(59.5)
20.0
(68)
24.2
(75.6)
28.7
(83.7)
34.1
(93.4)
38.8
(101.8)
37.1
(98.8)
36.5
(97.7)
34.9
(94.8)
27.8
(82)
20.6
(69.1)
16.7
(62.1)
38.8
(101.8)
உயர் சராசரி °C (°F) 5.7
(42.3)
6.6
(43.9)
10.4
(50.7)
14.2
(57.6)
18.1
(64.6)
20.6
(69.1)
23.0
(73.4)
22.6
(72.7)
19.0
(66.2)
14.7
(58.5)
9.5
(49.1)
6.1
(43)
14.2
(57.6)
தினசரி சராசரி °C (°F) 3.3
(37.9)
3.7
(38.7)
6.8
(44.2)
9.8
(49.6)
13.6
(56.5)
16.2
(61.2)
18.4
(65.1)
18.0
(64.4)
14.9
(58.8)
11.1
(52)
6.8
(44.2)
3.9
(39)
10.54
(50.98)
தாழ் சராசரி °C (°F) 0.7
(33.3)
0.7
(33.3)
3.1
(37.6)
5.3
(41.5)
9.2
(48.6)
11.9
(53.4)
14.0
(57.2)
13.6
(56.5)
10.9
(51.6)
7.8
(46)
4.1
(39.4)
1.6
(34.9)
6.9
(44.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) -21.1
(-6)
-18.3
(-0.9)
-13.6
(7.5)
-5.7
(21.7)
-2.2
(28)
0.3
(32.5)
4.4
(39.9)
3.9
(39)
0.0
(32)
-6.8
(19.8)
-12.8
(9)
-17.7
(0.1)
−21.1
(−6)
பொழிவு mm (inches) 76.1
(2.996)
63.1
(2.484)
70.0
(2.756)
51.3
(2.02)
66.5
(2.618)
71.8
(2.827)
73.5
(2.894)
79.3
(3.122)
68.9
(2.713)
74.9
(2.949)
76.4
(3.008)
81.0
(3.189)
852.4
(33.559)
ஈரப்பதம் 86.6 82.5 78.5 72.5 73.2 74.1 74.3 75.5 80.9 84.6 88.2 88.8 80
சராசரி பொழிவு நாட்கள் 19.2 16.3 17.8 15.9 16.2 15.0 14.3 14.5 15.7 16.6 18.8 19.3 199
சராசரி பனிபொழி நாட்கள் 5.2 5.9 3.2 2.4 0.4 0 0 0 0 0 2.4 4.6 24.1
சூரியஒளி நேரம் 59 77 114 159 191 188 201 190 143 113 66 45 1,546
ஆதாரம்: KMI/IRM[25]

போக்குவரத்து

தொகு

விமானப்போக்குவரத்து

தொகு

இங்கு ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Brussels". City-Data.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2008.
  2. Herbez, Ariel (30 May 2009). "Bruxelles, capitale de la BD" (in French). Le Temps (Switzerland) இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110612124527/http://www.letemps.ch/Page/Uuid/73a8ca52-4c90-11de-8192-71ce8207b7fa. பார்த்த நாள்: 28 May 2010. "Plus que jamais, Bruxelles mérite son statut de capitale de la bande dessinée." 
  3. "Cheap flights to Brussels". Easyjet. பார்க்கப்பட்ட நாள் 1 June 2010.
  4. வார்ப்புரு:Metadata Population BE
  5. 5.0 5.1 "The Belgian Constitution (English version)" (PDF). Belgian House of Representatives. January 2009. Archived from the original (PDF) on 6 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 5 June 2009. Article 3: Belgium comprises three Regions: the Flemish Region, the Walloon Region and the Brussels Region. Article 4: Belgium comprises four linguistic regions: the Dutch-speaking region, the French speaking region, the bilingual region of Brussels-Capital and the German-speaking region. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 "Brussels-Capital Region: Creation". Centre d'Informatique pour la Région Bruxelloise (Brussels Regional Informatics Center). 2009. Archived from the original on 29 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 5 June 2009. Since 18 June 1989, the date of the first regional elections, the Brussels-Capital Region has been an autonomous region comparable to the Flemish and Walloon Regions. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help) (All text and all but one graphic show the English name as Brussels-Capital Region.)
  7. It is the de facto EU capital as it hosts all major political institutions—though Parliament formally votes in Strasbourg, most political work is carried out in Brussels—and as such is considered the capital by definition. However, it should be noted that it is not formally declared in that language, though its position is spelled out in the Treaty of Amsterdam. See the section dedicated to this issue.
  8. Demey, Thierry (2007). Brussels, capital of Europe. S. Strange (trans.). Brussels: Badeaux. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-9600414-2-9.
  9. "Welcome to Brussels". Brussels.org. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
  10. "History of Brussels". Brussels.org. பார்க்கப்பட்ட நாள் 29 June 2010.
  11. Statistics Belgium; Population de droit par commune au 1 janvier 2008 (excel-file) Population of all municipalities in Belgium, as of 1 January 2008. Retrieved on 18 October 2008.
  12. Statistics Belgium; De Belgische Stadsgewesten 2001 (pdf-file) Definitions of metropolitan areas in Belgium. The metropolitan area of Brussels is divided into three levels. First, the central agglomeration (geoperationaliseerde agglomeratie) with 1,451,047 inhabitants (2008-01-01, adjusted to municipal borders). Adding the closest surroundings (suburbs, banlieue or buitenwijken) gives a total of 1,831,496. And, including the outer commuter zone (forensenwoonzone) the population is 2,676,701. Retrieved on 18 October 2008.
  13. "Protocol (No 6) on the location of the seats of the institutions and of certain bodies, offices, agencies and departments of the European Union, Consolidated version of the Treaty on the Functioning of the European Union, OJ C 83, 30.3.2010, p. 265–265". EUR-Lex. 30 March 2010. பார்க்கப்பட்ட நாள் 3 August 2010.
  14. "Europe | Country profiles | Country profile: Belgium". BBC News. 14 June 2010. http://news.bbc.co.uk/2/hi/europe/country_profiles/999709.stm. பார்த்த நாள்: 29 June 2010. 
  15. Hughes, Dominic (15 July 2008). "Europe | Analysis: Where now for Belgium?". BBC News. http://news.bbc.co.uk/2/hi/europe/7507506.stm. பார்த்த நாள்: 29 June 2010. 
  16. Geert van Istendael Arm Brussel, uitgeverij Atlas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-450-0853-X
  17. "Brussels History". City-data.com. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
  18. (பிரெஞ்சு) Jean Baptiste D'Hane, François Huet, P.A. Lenz, H.G. Moke (1837). Nouvelles archives historiques, philosophiques, et littéraires. Vol. 1. Gent: C. Annoot- Braeckman. p. 405. பார்க்கப்பட்ட நாள் 11 September 2010. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: multiple names: authors list (link)
  19. (டச்சு) Zo ontstond Brussel பரணிடப்பட்டது 2007-11-20 at the வந்தவழி இயந்திரம் Vlaamse Gemeenschapscommissie – Commission of the Flemish Community in Brussels
  20. "Communes". Centre d'Informatique pour la Région Bruxelloise. 2004. Archived from the original on 6 ஜூன் 2004. பார்க்கப்பட்ட நாள் 4 August 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  21. 21.0 21.1 "Managing across levels of government" (PDF). OECD. 1997. pp. 107, 110. பார்க்கப்பட்ட நாள் 5 August 2008.
  22. 22.0 22.1 Picavet, Georges (29 April 2003). "Municipalities (1795-now)". Georges Picavet. பார்க்கப்பட்ட நாள் 4 August 2008.
  23. "Brussels Capital-Region". Georges Picavet. 4 June 2005. பார்க்கப்பட்ட நாள் 4 August 2008.
  24. "Site de l'institut météorologique belge". Meteo.be. Archived from the original on 20 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2010.
  25. "Monthly normals for Uccle, Brussels". KMI/IRM. Archived from the original on 20 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசெல்சு&oldid=3780547" இலிருந்து மீள்விக்கப்பட்டது