ஈரப்பதம்

காற்று வெளியில் நீராவி இருக்கும் அளவு

வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் வானிலையையும் காலநிலையையும் தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். சார்பற்ற ஈர்ப்பதம் என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். சார்பு ஈரப்பதம் என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். குறிப்பு ஈரப்பதம் என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.[1][2][3]

மழைக்காடுகளிலும் உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.

அளவிடும் முறை

தொகு
 
ஒரு ஈரமானி

காற்றின் ஈரப்பதத்தை அளவிட ஈரமானி பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் செய்ம்மதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Brun, Philipp; Zimmermann, Niklaus E.; Hari, Chantal; Pellissier, Loïc; Karger, Dirk N. (2022-06-27). "Global climate-related predictors at kilometre resolution for the past and future" (PDF). ESSD – Land/Biogeosciences and biodiversity. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5194/essd-2022-212. Archived (PDF) from the original on Jan 8, 2023.
  2. "What is water vapor?". WeatherQuestions.com. Archived from the original on 2019-03-11. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.
  3. Wyer, Samuel S. (1906). "Fundamental Physical Laws and Definitions". A Treatise on Producer-Gas and Gas-Producers. McGraw-Hill Book Company. p. 23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரப்பதம்&oldid=4133300" இலிருந்து மீள்விக்கப்பட்டது