விக்கிப்பீடியா:பிரான்சிய ஒலிப்புக் குறிகள்

(உதவி:IPA/French இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரான்சியச் சொற்களை ஒலிப்பதற்கு அல்லது பலுக்குவதற்கு அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடிக் குறியீடுகள் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியம் அல்லாத அல்லது தோராயமான தமிழ் ஒலிப்புகளைக் கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

ஆங்கிலம் போல், பிரான்சிய மொழியில் சொற்களுக்குள் அழுத்தம் தரும் பகுதிகள் இல்லை, எனவே அவை குறிக்கப்பெறுவதில்லை. மேலும் ஆங்கிலமும் பிரான்ச்சியமும் உரோமன்/இலத்தீன் எழுத்துகளைப் பயன்படுத்தினாலும் அவற்றின் ஒலிப்புகள் வேறுவேறு. எடுத்துக்காட்டாக J என்னும் எழுத்து பிரான்சியத்தில் ஏறக்குறைய .ழ்/ என்பது போலவும், ஆங்கிலத்தில் அதே எழுத்து /ச்3/ (=ஜ்) என்பது போலவும் ஒலிக்கும். பிரான்சியத்தில் H என்னும் எழுத்து ஒலிக்கப்பெறுவதில்லை. எடுத்துக்காட்டாக hôtel என்பது ஒட்டெல் என்றே ஒலிக்கும் (h ஒலிக்கப்பெறாது). பிரான்சிய ஒலிப்பில் ஆங்கிலத்தில் இல்லாத பல மூக்கொலிகள், உயிரொலிகள் உண்டு. பிரான்சியச் சொல்லில் கடைசியில் முடியும் பல எழுத்துகள் ஒலிக்கப்பெறுவதும் இல்லை (எடுத்துக்காட்டாக doux என்பது டூ என்று மட்டுமே ஒலிக்கும்; aller என்பது ல்லெ என்று மட்டுமே ஒலிக்கும். கடைசியில் உள்ள r ஒலிக்கப்பெறுவதில்லை)

மெய்யெழுத்துகள்
  IPA   எடுத்துக்காட்டுகள் தமிழ்[1]
b beau, பொ3 / ப்3 /
d doux, து3 / த்3 /
f fête, வெ2த்; pharmacie, வ2ர்மஸி / வ்2 /
ɡ gain, கெ3ன் ; guerre, கே3ர் / க்3 /
k cabas, க1பா3; archque, அர்.க1.இ.க்1; aquarelle, அ.கு1.அ.ரெல்; kelvin, கெ1ல்வீன் / க்1 /
l loup, லூ / ல் /
m mou, மூ; femme, வா2ம் / ம் /
n nous நூ; bonne, பொ3ன் / ந் /, / ன் /
ɲ agneaux, அ.ஞொ / ஞ் /
ŋ parking, பர்.கி1ங் / ங் /
p passé, ப1.ஸெ / ப்1 /
ʁ roue; rhume[2] / ற்2 / (அடித்தொண்டை றகரம்); guttural r
s sa, சா7; hausse, ஓச்7; ce, சு; garçon கார்சோ7(ன்); / ச்7 /
ʃ chou, சூ5; schème, செ5ம்; / ச்5 /
t tout, து1; thé, தே1 / த்1 /
v vous, வூ; wagon, வகோ3ன் / வ் /
z hasard,அசா71 ; zéro, சே71றோ2 / ச்71 /
ʒ joue, ழ்சூ; geai, ழ்சே / ழ்ச் /
உயிர்ப்போலிகள்
j fief, வ்2யெவ்2; payer, பெய்யெ; fille வி2ய்யெ; travail, த்ற2வய் / ய் /
w oui ஊஇ; loi (இ)லுஅ; moyen, மொய்யா(ன்); web, இவெப்3 / உஇ /
ɥ huit, இயுவீட் /இய்உஇ/
உயிரெழுத்துகள்
  IPA   எடுத்துக்காட்டுகள் தமிழ்[3]
a patte, ப1த்1 / அ /
ɑ pâte, பா1த்1; glas க்3லா / ஆ /
e clé க்1லெ; les, லெ; chez செ5; aller அலெ; pied, பெ / எ2 /
ɛ mère, மெற்2; est எச்7ட்; abdomen அப்டூ6மென்; faite, வெ2ட்5 / எ /
ɛː fête வே2ட்5; mtre[4], மேற்2 / ஏ / நெடில் [ɛ]
ə le, ல்அ2; reposer[5], ர்அ2ப்பொசி7 அகரத்தினும் குறுகிய அகரம்
i si சி7; île இல்; y / இ /
œ sœur சி7யூற்2; jeune, ழ்சென் ஏறத்தாழ ஆங்கிலச் சொல் bir இல் உள்ளது போலவே ஒலிக்கும்
(esp. in RP)
ø ceux, ச்7யூ; jne, ழ்சென்
o sot, சூ7; hôtel, ஒட்5டெ5ல்; haut, ஒ; bureau, ப்3யொறோ2 / ஒ /
ɔ sort சோற்2; minimum, மினிமோன் / ஓ /
u coup, கு / உ /
y tu, த்யு; sûr, ச்7யூற் / யு /
மூக்கொலி உயிரெழுத்துகள்
ɑ̃ sans சொ7ன்; champ, சொன்; vent வொன்; temps; Jean ழ்சொன்; taon டொ5ன் மூக்கொலி ஒகரம் கலந்த அகரம் [ɑ]
ɛ̃ pain பான்; daim, டா6ன்; plein, ப்ளான்; Reims; bien மூக்கொலி எகரம், ஆனால் மூக்கொலி அகரம் போலவும் ஒலிக்கும் [ɛ]
œ̃ brun ப்3ரொன், parfum[6], பற்2வொன் மூக்கொலி ஒகர எகரம் [œ]
ɔ̃ son சொ7ன்; nom நொம் மூக்கொலி ஒகரம் [ɔ]
 
எழுத்தொலிகடந்த சொல்லளவுக் குறிகள்
IPA எடுத்துக்காட்டுகள் விளக்கம்
ˈ moyen [mwaˈjɛ̃][7] சொற்சர அழுத்தம்
. pays [pe.i][8] அசை எழுத்து எல்லையில், அல்லது இடை எல்லையில்
les agneaux [lez‿aˈɲo] liaison[9]

குறிப்புகள்

தொகு
  1. இவை ஒப்பீட்டுக்காக குறிக்கப்பெறுகின்றன. இவை பொதுச் சீர்மை, ஏற்பு பெற்றவை அல்ல
  2. பிரான்சிய அடித்தொண்டை றகரம் நிலப்பகுதிக்குப் நிலப்பகுதி மாறுபடுகின்றது.
  3. இவை ஒப்பீட்டுக்காக குறிக்கப்பெறுகின்றன. இவை பொதுச் சீர்மை, ஏற்பு பெற்றவை அல்ல
  4. /ɛː/ என்பது பெரும்பாலும் [ɛ] ஆக மாற்றப்படுகின்றது, குறிப்பாக இளைஞர்களால்
  5. பிரான்சிய மொழியில், /ə/ என்பது உ என்று சொல்வற்கு இதழைக் குவிப்பது போல குழித்து சொல்லல் வேன்டும் [ɵ̞]; பலருக்கு வாயின் முன்புறம் ஒலிக்கப்பெறுவது போலவே ஒலிக்கும், இது ஒலிப்பியல்படி ஏறத்தாழ sœur [sœʁ] உள்ள உயிரொலிபோலவே இருக்கும்
  6. /œ̃/ என்பது பலநேரம் [ɛ̃] என்பதால் மாற்றீடு செய்யப்ப்டுகின்றது.
  7. சொற்சரத்தில் கடைசி உயிர்மெய் எழுத்தில் அழுத்தம் விழுகின்றது, ஆனால் அழுத்தம் திருத்தமாகப் பேசும் பொழுது அப்படி விழுவதில்லை.
  8. எப்பொழுதாவது மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது
  9. அடுத்து வரும் உயிரெழுத்துக்கு முன் கடைசி மெய்யெழுத்தில் ஒலிக்கப்பெறும்