மேல் பின் இதழ்குவி உயிர்

மேல் பின் இதழ்குவி உயிர் அல்லது மூடிய பின் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதன் குறியீடு u. இதற்கு இணையான X-SAMPA குறியீடு u. பல மொழிகளில் மேல் பின் இதழ்குவி உயிர்களை ஒலிக்கும்போது இதழ்கள் குவிந்து முன்னோக்கி நீளுகின்றன.

மேல் பின் இதழ்குவி உயிர்
u
அ.ஒ.அ எண்308
குறியேற்றம்
உள்பொருள் (decimal)u
ஒருங்குறி (hex)U+0075
X-SAMPAu
கிர்சென்பவும்u
ஒலி

 
பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • Loudspeaker.svg ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
Blank vowel trapezoid.svg
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

உறுப்பமைவுதொகு

ஒலிக்கும்போதான நாக்கின் நிலை, இதழ் அமைப்பு என்பவற்றைப் பொறுத்தே உயிர் ஒலிகள் வகை பெறுகின்றன. முக்கியமாக நாக்கின் மேல்-கீழ் நிலை, அதன் முன்-பின் நிலை, இதழின் குவிதல்-விரிதல் நிலை என்பனவே உயிர் ஒலி வேறுபாடுகளை உருவாக்குகின்றன. மேல் பின் இதழ்குவி உயிரைப் பொறுத்தவரை, பின்வரும் நிலைமைகளைக் காணலாம்.

  1. நாக்கு வாயின் மேற் பகுதிக்குக் கூடிய அளவு அண்மையாக இருத்தல்.
  2. கூடி அளவு நாக்கு பின் தள்ளி இருத்தல்.
  3. இதழ்கள் குவிதல்

தமிழில்தொகு

தமிழில் , ஆகிய இரண்டும் மேல் பின் இதழ்குவி உயிர்கள். இவற்றில் மேல் பின் இதழ்குவி குற்றுயிர் என்றும், மேல் பின் இதழ்குவி நெட்டுயிர் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒலிப் பிறப்பைப் பொறுத்தவரை உகரம், ஊகாரம் இரண்டும் ஒரே வகையினவே. ஒலிப்புக் கால அளவிலேயே இரண்டும் வேறுபடுகின்றன. குற்றுயிரை ஒலிக்கும்போது நாக்கு சற்று நெகிழ்வு உடையதாகவும், நெட்டுயிரை ஒலிக்கும்போது சற்று இறுக்கமாகவும் இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்தொகு