இடை-நடு உயிர்
இடை-நடு உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதற்கான குறியீடு ə. இது அரைவட்ட அளவுக்குச் சுழற்றப்பட்ட "e" எழுத்தின் வடிவம் கொண்டது. இதே குறியீட்டையே இடை-நடு உயிரின், இதழ்குவி வகைக்கும், இதழ்விரி வகைக்கும் பயன்படுத்துகின்றனர்.
இடை-நடு உயிர் | |||
---|---|---|---|
ɘ̞ | |||
| |||
அ.ஒ.அ எண் | 322 | ||
குறியேற்றம் | |||
உள்பொருள் (decimal) | ə | ||
ஒருங்குறி (hex) | U+0259 | ||
X-SAMPA | @ | ||
கிர்சென்பவும் | @ | ||
ஒலி | |||
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
இடை-நடு இதழ்விரி உயிர்
தொகுஇடை-நடு இதழ்விரி உயிர் பெரும்பாலும் [ə] என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இக் குறியீடு ஒரு இதழ்விரி உயிரைச் சிறப்பாகக் குறிப்பதில்லை. துல்லியம் தேவைப்படும்போது துணைக் குறியைப் பயன்படுத்தி [ɘ̞] என எழுதுவது உண்டு.
ஒலிப்பிறப்பு இயல்புகள்
தொகு- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப் பகுதியில் அமையும். அதாவது நாக்கு, முன்னுயிர், பின்னுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்விரி நிலையாகும்.
இடை-நடு இதழ்குவி உயிர்
தொகுசில மொழிகளில், மேல்-நடுவுயிர், கீழ்-நடுவுயிர் ஆகியவற்றிலிருந்து வேறுபடுகின்ற இடை-நடு இதழ்குவி உயிர் (இதழ்குவி [ə]) இருக்கக்கூடும். எனினும், இம்மூன்று ஒலிகளுக்கும் இடையே வேறுபாடு காட்டும் உயிர்களைக் கொண்ட மொழி எதையும் இதுவரை கண்டறியவில்லை. அதனால், மேல்-இடை நடு இதழ்குவி உயிரொலிக்கு உரிய [ɵ] என்னும் குறியீட்டைப் பயன்படுத்தலாம். துல்லியம் தேவைப்படும்போது துணைக் குறியைப் பயன்படுத்தி [ɘ̞] என எழுதுவது உண்டு.
ஒலிப்பிறப்பு இயல்புகள்
தொகு- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப் பகுதியில் அமையும். அதாவது நாக்கு, முன்னுயிர், பின்னுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்குவி நிலையாகும்.