மேல் முன் இதழ்விரி உயிர் என்பது பல பேச்சு மொழிகளில் காணப்படும் ஒரு வகை உயிர் ஒலியாகும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி முறையில் இதன் குறியீடு i. விரிந்த பேச்சு மதிப்பீட்டு முறை ஒலிப்பியல் அரிச்சுவடி (X-SAMPA) முறையில் இதை i என்னும் எழுத்தால் குறிப்பிடுகின்றனர். தமிழில் "இ", "ஈ" ஆகிய உயிர் ஒலிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றில், "இ" மேல் முன் இதழ்விரி குற்றுயிரொலியும், "ஈ" மேல் முன் இதழ்விரி நெட்டுயிரொலியும் ஆகும்.