இதழமைவுநிலை
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
ஒலிப்பியலில், இதழமைவுநிலை (Roundedness) என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் (இதழ்களின்) அமைப்பு நிலையைக் குறிக்கிறது. இது, "உயிரொலி இதழினமாதல்" ஆகும். இதழ்குவி உயிரொலிகளை ஒலிக்கும்போது, உதடுகள் குவிந்து வட்ட வடிவமான துவாரத்தை ஏற்படுத்துகின்றன. இதழ்விரி உயிரொலிகளை ஒலிக்கும்போது இதழ் விரிந்து இயல்பான அமைப்பைப் பெறுகின்றன. பெரும்பாலான மொழிகளில் முன்னுயிர்கள் இதழ்விரி உயிர்களாகவும், பின்னுயிர்கள் இதழ்குவி உயிர்களாகவும் அமைகின்றன. ஆனால், பிரெஞ்சு, செருமன் போன்ற சில மொழிகளில், ஒரே உயர நிலை கொண்ட முன்னுயிர்களில் இதழ்குவி உயிர்களும், இதழ்விரி உயிர்களும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. இதேபோல, வியட்நாம் மொழியில் ஒரே உயர நிலையில் அமைகின்ற பின்னுயிர்களில் இதழ்குவி உயிர்களும், இதழ்விரி உயிர்களும் உள்ளன.