மேல் முன் இதழ்குவி உயிர் அல்லது மூடிய முன் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதன் குறியீடு y, இதற்கு இணையான X-SAMPA குறியீடு y. ஒலியமைப்பு அடிப்படையில் பல மொழிகளில் இது ‹ü› அல்லது ‹y› என்பவற்றால் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட பிரெஞ்சு மொழி, பிற ரோமனெசுக் மொழிகள், அங்கேரிய மொழி என்பவற்றில் இது ‹u› என்பதாலும், நடு செருமன் மொழி, பல ஆசிய மொழிகளின் ரோமனாக்கம் போன்றவற்றில் இது ‹iu›/‹yu› என்னும் குறியீடுகளாலும் குறிக்கப்படுகின்றன. இதுபோல டச்சு மொழியில், ‹uu›; அங்கேரிய மொழியில் ‹ű›; சிரில்லிக் மொழியில் ‹уь›; போன்றவை இதற்கு இணையானவை.