உயிர்ப்போலி
உயிர்ப்போலி என்பது பேச்சொலி வகைகளுள் ஒன்றாகும். இது உயிரொலிக்கும், மெய்யொலிக்கும் இடைப்பட்டது எனலாம். நெஞ்சுப் பகுதியிலிருந்து பிறக்கும் காற்று, எவ்வித தடையுமின்றி வாய்வழியாக வெளியேறும்போது உயிரொலிகள் பிறக்கின்றன. வாய்ப்பகுதி ஊடாகக் காற்று வெளியேறும்போது ஏதாவதொரு வகையில் தடைப்பட்டு வெளியேறுமானால் மெய்யொலிகள் உண்டாகின்றன. நாக்கைச் சிறிது மேலுயர்த்திக் காற்றை அதிக தடையின்றி வெளியேற்றும்போது உயிர்ப்போலிகள் உருவாகின்றன. தமிழில் ய், வ் ஆகியன உயிர்ப்போலிகள் ஆகும். இதில் வ், மேற் பல் வரிசையையும், கீழ் உதட்டையும் பயன்படுத்திக் காற்றுப்பாதையைச் சுருக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஆங்கிலத்தில், l, j, w என்பன உயிர்ப்போலிகள் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ (Martínez-Celdrán 2004, ப. 201), citing (Ladefoged & Maddieson 1996)
- ↑ (Martínez-Celdrán 2004, ப. 201)
- ↑ (Martínez-Celdrán 2004, ப. 201), pointing to (Ladefoged 1964, ப. 25)