பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கவும் தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன. பல் வேர்கள் முரசினால் மூடப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இருமுறை பற்கள் முளைக்கின்றன. பாற்பற்கள் (பால் பற்கள்) ஆறு மாதத்தில் முளைக்கத் தொடங்குகின்றன. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு. சுறாக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதிய பற்கள் முளைக்கின்றன.

மனிதப் பற்கள்
மேல்வரிசைப் பற்கள்
கீழ்வரிசைப் பற்கள்

பல் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பற்கள் கால்சியம் தாதுவால் ஆனவை.

மனிதப் பற்கள் தொகு

 
வெட்டுப் பற்கள்
 
கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்) அமைந்திருக்கும் இடம்
 
கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்)
 
கடைவாய்ப் பற்கள்

மனிதரின் பற்கள் முகத்தின் கீழ்ப்பக்கம் இருக்கும் மேற்தாடை எலும்பான அனுவென்பிலும், கீழ்த்தாடை எலும்பான சிபுகவென்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றறைகளில் இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு. குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும்.
மனிதரில் மொத்தம் 32 பற்கள் காணப்படும். இவற்றில் மேற்தாடையில் இடப்புறம் 8 பற்களும், வலப்புறம் 8 பற்களும் இருக்கும். இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பற்கள் காணப்படும்.

வகைப்பாடு தொகு

பற்களின் உருவத்தையும், அவை அமைந்திருக்கும் இடத்தையும் பொறுத்து அவை நான்கு வகையாகப் பிரிக்கப்படும்.

வெட்டும் பற்கள் தொகு

வெட்டும் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் பண்டங்களை கடிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருளி மேல் கோடரியால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.

கோரைப் பற்கள் தொகு

கோரைப் பற்கள் அல்லது வேட்டைப் பற்கள் வாயின் இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை கிழிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருள் மேல் ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.

முன்கடைவாய்ப் பற்கள் தொகு

முன் கடவாய்ப் பற்கள் வாயில் உள்ள பற்களில் நடுப் பக்கத்தில் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை நொறுக்க உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.

கடைவாய்ப் பற்கள் தொகு

பின் கடவாய் பல்லானது கடினமான உணவுகளை நசித்து, அரைத்து மெதுமையான துகள் போன்று ஆக்குகின்றன.

பற்களின் அமைவிடம் தொகு

  • பாற்பற்கள்:

மேற்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 0

கீழ்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 0

  • நிலையான பற்கள்:

மேற்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 3

கீழ்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 3

குழந்தைகளில் பொதுவாக ஆறு மாதமளவில் முளைக்கும் பாற்பற்கள், 24 மாதமளவில் முழுவதும் முளைத்திவிடும். ஆறு வயதளவில் பாற்பற்கள் விழ, பின்னர் நிலையான பற்கள் தோன்ற ஆரம்பிக்கும். அனேகமாக 24 வயதளவில் 32 பற்களும் முளைத்துவிடும்.

வெவ்வேறு பற்கள் வெவ்வேறு வகையான அமைப்பைக் கொண்டிருக்கும். அவற்றின் வேர்களின் எண்ணிக்கையும் வேறுபடும். சில ஒரு தனியான வேரையும், சில இரண்டு, மூன்று வேர்களையும் கொண்டிருக்கும்.

பல்லின் உள்தோற்றம்

 
மனிதப் பல் ஒன்றின் வெட்டுமுகத் தோற்றம்
  • பல்முடி - முரசுக்கு வெளியாக நீண்டிருக்கும் பகுதி
  • பல்வேர் - தாடை எலும்புகளினுள் புதைந்திருக்கும் பகுதி
  • பற்கழுத்து - பல்முடிக்கும், பல்வேருக்கும் இடையில் இருக்கும் ஒடுங்கிய பகுதி


பல் மிளிரி எனப்படுவது பளபளப்பானதும் கடினமானதுமான பதார்த்ததாலான, பல்முடியில் இருக்கும் பன்முதலைச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இது பற்களுக்குப் பாதுகாப்பை வழங்கும்.

பற்சீமெந்து எனப்படுவது கடினமான பதார்த்தத்தாலான, பல்வேரில் இருக்கும் பன்முதலைச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இது பல்லை தாடை எலும்புகளிலுள்ள சிற்றறைகளினுள், மிகவும் இறுக்கமாகப் பொதிந்து வைக்க உதவும்.

பன்முதல் என்பது ஓரளவுக்கு எலும்பை ஒத்த கடினமான அமைப்பைக் கொண்டது.

பன்மச்சை என்பது பன்முதலின் உள்ளாக அமைந்திருக்கும் ஒரு குழி போன்ற அமைப்பு. இதனுள் இணைப்பிழையம், குருதிக்கலன்கள், நரம்புகள் என்பன காணப்படும். இவை பல்வேரிலுள்ள சிறு துளையூடாக பல்லின் உள்ளே செல்லும்.

நோய்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்&oldid=3900248" இலிருந்து மீள்விக்கப்பட்டது