முதன்மை பட்டியைத் திறக்கவும்

முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

முரசு வகைதொகு

இந்த முரசுகளில் மூன்று வகை உண்டு.

  1. வீர முரசு
  2. தியாக முரசு
  3. நியாய முரசு

வீர முரசுதொகு

இது போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது. போருக்குச் செல்லும் முன்னும், போர் நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த முரசிலிருந்து வெளிவரும் ஒலி வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்

தியாக முரசுதொகு

இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இது.

நியாய முரசுதொகு

நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

இவற்றையும் காணவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரசு&oldid=1991370" இருந்து மீள்விக்கப்பட்டது