முதன்மை பட்டியைத் திறக்கவும்

உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, மலேசியாவில் உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.

உறுமி மேளம்
உறுமி மேளம்
வகை

கொட்டு இசைக்கருவி, ஆட்டுத்தோலால் ஆனது

சுருதி எல்லை
Bolt tuned or rope tuned with dowels and hammer
ஒத்த இசைக்கருவி

தவில்

உறுமி முதலான மேளங்களை நீத்தார் சடங்கில் இசைக்கும் காட்சி

வடிவமைப்புதொகு

உறுமி மேளை இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது.

வாசித்தல்தொகு

இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர்.

குழுக்கள்தொகு

மலேசியாதொகு

  • சிறீ கருமாரியம்மன் உறுமி மேளம் [1]
  • ஜெ சக்தி சங்கிலிக் கறுப்பன் உறுமி மேளம்
  • சங்கமம் உறுமி மேளம்
  • ஓம் முருகா உறுமி மேளம் - [2]
  • சிறீ நாக கன்னி உறுமி மேளம் [3]
  • வெற்றி வேல் உறுமி மேளம் [4]
  • சிறீ துர்க்கை அம்ம உறுமி மேளம் [5]
  • உருத்திர சக்தி & திருசூலி உறுமி மேளம் [6]
  • சிறீ மகாசக்தி உறுமி மேளம் [7]

உறுமி மேளமும் பாட்டும்தொகு

  • காட்டில் வாழும் மீசைக்காரா, வேட்டையாட வருவாயா - [8]
  • எலெலோ, எலெலோ, ஆண்டாண்டு காலமம்மா - [9]

உசாத்துணைகள்தொகு

  • வாழ்வியற் களஞ்சியம். தொகு 5.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுமி_மேளம்&oldid=2181868" இருந்து மீள்விக்கப்பட்டது