தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும்,திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில் ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். சிறிய பக்கத்தில் மரத்தால் செய்யப்பட்ட குச்சியினாலும் பெரிய பக்கத்தை விரல்களாலும் முழக்குவர். விரல்களில் அரிசிக் கூழால் செய்யப்பட்டு உலர்த்தப்பட்ட கவசங்கள் அணிந்திருப்பார்கள். பெரும்பாலான தவில் கலைஞர்கள் சிறிய பக்கத்தை வலது கையால் குச்சி கொண்டும் பெரிய பக்கத்தை இடது கையால் கவசம் அணிந்த விரல்களைக் கொண்டும் முழக்குவர். எனினும், இடது கையால் குச்சியையும் வலது கையால் விரல்களையும் பயன்படுத்தும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

தவில்
தவில்
வகை

கொட்டு இசைக்கருவி, ஆட்டுத்தோலால் ஆனது.

சுருதி எல்லை
Bolt tuned or rope tuned with dowels and hammer
ஒத்த இசைக்கருவி

மிருதங்கம், உறுமி

தவில் பாகங்கள்

தொகு

தவிலின் உருளை வடிவிலான பகுதி பலா மரத்தினால் செய்யப்படுகிறது .இதன் சிறிய பக்கத்தில் இருக்கும் தோல் வளந்தலை என்று கூறப்படும். இது எருமைக்கன்றின் தோலால் செய்யப்படுகிறது .இதன் பெரிய பக்கத்தில் உள்ள தோல் தொப்பி என்று வழங்கப்படுகிறது. இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்த தோலை தாங்கிப் பிடிக்கும் வளையங்கள் இரு பக்கமும் உண்டு. அவை மூங்கிலால் செய்யப்பட்டது. .அந்த வளையங்கள் விரைவாக உடைவதால் இப்பொது உருக்கு உலோகத்தால் செய்யப்படுகிறது .தோல் கயிறு கொண்டு கட்டப்பட்ட பகுதிகள் இப்பொது உருக்கு உலோகத்தால் செய்யப்படும் ஆணிகள் கொண்டு முடுக்கி விடப்படுகிறது .தவிலின் உருளை வடிவின் வெளிப்புறத்தில் உருக்கு உலோகத்தால் செய்யப்பட்ட வளையங்கள் இரண்டு பொருத்தப்படுகிறது. அவற்றில் 22 துளைகள் உள்ளன ஒவ்வொன்றிலும் 11 துளைகள் இருக்கும். ஒன்று சிறிய பக்க தோலைத் தாங்கி பிடித்து இருக்கும் மற்றொன்று பெரிய பக்கத் தோலைப் பிடித்து இருக்கும் .இதனால் அவற்றில் எதாவது ஒரு பக்கம் கிழிந்து விட்டால் எளிதில் மாற்ற முடியும். முற் காலங்களில் இரண்டு பக்கமும் தோல் கயிற்றால் இணைக்கப்பட்டதால் ஒரு பக்கம் கிழிந்தாலும் இரண்டு பக்கத்தையும் கழற்றி பின் சரி செய்யும் முறை இருந்தது. [1] [2]

 
தவில் செய்யும் கலைஞர்கள்

தவில் இசை

தொகு

தவில் வாசிப்பதற்கு அடிப்படை இசையாவன:

 1. தா தி தொம் நம் ஜம்
 2. தா தி தொம் நம் கி ட ஜம்

வரலாறு

தொகு

தவில் வாத்தியம் எப்போது உருவானது, எப்போது பாவனைக்கு வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புராணங்கள், இதிகாசங்களில் டின்டிமம் என்னும் ஒரு தாள வாத்தியம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் குச்சியாலும் மறுபக்கம் கையாலும் முழக்கப்படும் பறை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் எழுதப்பட்டுள்ளது.[3]

தவிலின் தனிச்சிறப்பு

தொகு

கருநாடக இசைக் கச்சேரிகளில் பிரதான பாடகர் தான் முதலில் தொடங்குவார். பக்கவாத்தியம் பின்தொடரும். வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களின் தனிக் கச்சேரியிலும் அந்தந்த வாத்தியங்கள் தான் தொடங்கும். நாதசுவரக் கச்சேரிகளில் நாதசுவரம் தான் பிரதான வாத்தியம்; தவில் பக்கவாத்தியம். ஆனால் நாதசுவரக் கச்சேரி தொடங்கும்போது தவில் வாசிப்போடு தான் தொடங்கும். இது தவில் வாத்தியத்தின் தனிச் சிறப்பு.

புகழ் பெற்ற தவில் கலைஞர்கள்

தொகு
 1. நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
 2. மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை
 3. திருமுல்லைவாயில் முத்துவீரு பிள்ளை
 4. கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
 5. திருநகரி நடேச பிள்ளை
 6. நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை
 7. வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை
 8. நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை
 9. யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை
 10. வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்
 11. அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்
 12. திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி
 13. அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை
 14. அம்மா சத்திரம் கண்ணுசாமி பிள்ளை
 15. திருக்கடையூர் சின்னையா பிள்ளை
 16. திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை
 17. திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி
 18. தஞ்சை கோவிந்தராசன்
 19. வேதாரண்யம் பாலு
 20. திருவிழா ஜெய்சங்கர்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. http://www.thehindu.com/todays-paper/tp-national/thavils-evolution-leads-to-naadam-dilution/article4257603.ece
 2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hailed-for-his-sound-contribution/article5084137.ece
 3. இத் தகவல் 14 மார்ச் 2014 பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மங்கல இசை' என்ற நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவில்&oldid=3710878" இலிருந்து மீள்விக்கப்பட்டது