திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை
திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை (1879 – அக்டோபர் 8, 1958) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.
இளமைக் காலம்
தொகுமயிலாடுதுறை அருகிலுள்ள திருவாளப்புத்தூர் எனும் ஊரில் பிறந்தவர் பசுபதிப் பிள்ளை. இவரின் தாய் அம்மணி அம்மாள் ஒரு நாட்டியக் கலைஞர். முதலில் ஆச்சாள்புரம் தருமலிங்கம் பிள்ளை, பின்னர் அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை ஆகியோரிடம் மொத்தமாக 7 ஆண்டுகள் தவில் கற்றுக்கொண்டார் பசுபதி.
இசை வாழ்க்கை
தொகுதவில் கலைஞராக முன்னணி நாதசுரக் கலைஞர்கள் வழிவூர் வீராசுவாமி பிள்ளை, சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, செம்பனார்கோயில் ராமசுவாமி பிள்ளை, எஸ். ஆர். கோவிந்தசுவாமி பிள்ளை சகோதரர்கள், நாகூர் சுப்பையா பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை ஆகியோருக்கு வாசித்துள்ளார்.
நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் பிள்ளை, பொறையார் வேணுகோபால பிள்ளை, திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை, நாச்சியார்கோவில் ராமதாஸ் பிள்ளை, திருவிழந்தூர் வேணுகோபால பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசப் பிள்ளை, திருவிடைமருதூர் வெங்கடேசப் பிள்ளை, திருமுல்லைவாயில் சண்முகவடிவேல், இலுப்பூர் நல்லகுமார், திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி ஆகியோர் பசுபதிப் பிள்ளையின் குறிப்பிடத்தக்க மாணவர்கள் ஆவர்.
மறைவு
தொகுசில காலம் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த பசுபதி, 8 அக்டோபர் 1958 அன்று காலமானார்.
உசாத்துணை
தொகு- பக்கம் எண்கள்:290 - 292, பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.)