மங்கல இசை மன்னர்கள் (நூல்)

மங்கல இசை மன்னர்கள் பி. எம். சுந்தரம் எழுதிய நூலாகும்.[1] இது இசைக் கலைஞர்களின் வரலாற்று நூலாகும். 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய நாதசுவர, தவிற் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு தனித்தனிக் கட்டுரைகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளன[2]. நாதசுவரக் கலைஞர்கள் பற்றி 78 கட்டுரைகளும், தவில் கலைஞர்கள் பற்றி 48 கட்டுரைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

மங்கல இசை மன்னர்கள்
Mangala-isai-mannargal-bookcover.jpg
நூலின் முகப்புப் பக்கம்
நூலாசிரியர்பி. எம். சுந்தரம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைஇசைக் கலைஞர் வாழ்க்கைச் சுருக்க நூல்
வெளியீட்டாளர்மெய்யப்பன் தமிழாய்வகம்
வெளியிடப்பட்ட நாள்
2001
பக்கங்கள்367

நூலின் குறிக்கோள்தொகு

தமிழிசையின் இரு பழம்பெரும் இசைக்கருவிகளான நாதசுவரம், தவில் இசைக்கலைஞர்களின் வரலாறு, தனிப்பட்ட திறமைகள், பெற்ற விருதுகள் என்பவற்றோடு அக் கலைஞர்களின் சொந்தக் குணாதிசயங்களை இந்த நூல் ஆவணமாகப் பதிவு செய்துள்ளது. 1787 ஆம் ஆண்டில் பிறந்த கீவளூர் சுப்பராய பிள்ளை முதல் 1988 ஆம் ஆண்டு மறைந்த இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை வரை கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகாலத்தில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக, இலங்கை கலைஞர்கள் இந்த ஆய்வு நூலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.[2] இன்றைய நாதசுவரம், தவில் இசைக்கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்த பழம்பெரும் இசைக் கலைஞர்களைப் பற்றிய எழுத்து ஆவணம் எதுவும் இல்லாமலிருந்த நிலையில் இந்த நூல் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றது.[2]

முதல் வெளியீடுதொகு

இந்நூல் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு மெய்யப்பன் தமிழாய்வக வெளியீடாக 367 பக்கங்களைக் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Bibliographic information". books.google.co.in. மூல முகவரியிலிருந்து 23 பெப்ரவரி 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2017.
  2. 2.0 2.1 2.2 "மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்". வரலாறு.காம் (1 அக்டோபர் 2013). மூல முகவரியிலிருந்து 23-02-2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 பிப்ரவரி 2017.

உசாத்துணைதொகு

  • சுந்தரம், பி. எம். (2013): மங்கல இசை மன்னர்கள். (முதற் பதிப்பு), முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.

வெளியிணைப்புகள்தொகு