பி. எம். சுந்தரம்

பி. எம். சுந்தரம் (B. M. Sundaram, பிறப்பு: செப்டம்பர் 10, 1934) தமிழகத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞராவார். இசைத் துறையில் பட்டம் பெற்று, ஆய்வாளர், எழுத்தாளர், பாடகர், வாக்கேயக்காரர் என பாரம்பரிய இசைத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இளமைக் காலம்

தொகு

இவரின் பெற்றோர்: தவில் இசைக் கலைஞர் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலாம்பாள் தம்பதி[1].

சுந்தரம் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கருநாடக இசைக் கலைஞர் எம். பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவர். இசையில் புலமை பெற்றவர். பன்மொழிகளில் புலமையுடையவர். இசை வல்லுநர் குழுக்களில் உறுப்பினர். புதுச்சேரி வானொலி நிலையத்தில் இசைத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

எழுதிய நூல்கள்

தொகு
  1. மங்கல இசை மன்னர்கள்
  2. மரபு தந்த மாணிக்கங்கள்
  3. மரபுவழி பரதப் பேராசான்கள் - இந்த நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சுந்தரம், பி. எம். (டிசம்பர் 2013). மங்கல இசை மன்னர்கள். சென்னை: முத்துசுந்தரி பிரசுரம். pp. பின் அட்டை, நூலாசிரியர் குறித்த குறிப்புகள். {{cite book}}: Check date values in: |year= (help)

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._சுந்தரம்&oldid=3614048" இலிருந்து மீள்விக்கப்பட்டது