தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | நூலின் பிரிவு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | மரபுக்கவிதை | தமிழ்த்தாய் உவமை உலா | உவமைப்பித்தன் | சிலேடைப் பதிப்பகம், சென்னை. |
2 | புதுக்கவிதை | ராஜமார்த்தாண்டன் கவிதைகள் | ராஜமார்த்தாண்டன் | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை. |
3 | புதினம் | மாணிக்கம் | சு. தமிழ்ச்செல்வி | ஸ்நேகா,சென்னை. |
4 | சிறுகதை | வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் | வல்லிக்கண்ணன் | பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. |
5 | நாடகம் (உரைநடை, கவிதை ) | இராசமாதேவி | சீனி. கிருஷ்ணசாமி | தாரிணி பதிப்பகம், சென்னை. |
6 | சிறுவர் இலக்கியம் | குறும்பு செய்ய விரும்பு | புலவர் அரசு | பாரதிராஜா பதிப்பகம், சென்னை. |
7 | திறனாய்வு | இந்திய இலக்கியம் - படைப்பும் படைப்பாளிகளும் | முனைவர் அரங்க. சுப்பையா | ----- |
8 | மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் | இந்திய மொழிகளின் வரலாறு | சு. இரத்தினசாமி | ஸ்ரீ வேலன் பதிப்பகம், சிதம்பரம். |
9 | பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் | எழுச்சி தீபங்கள் | மு. சிவலிங்கம் | கண்ணதாசன் பதிப்பகம், சென்னை. |
10 | நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) | மரபுவழி பரதப் பேராசான்கள் | பி. எம். சுந்தரம் | மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். |
11 | அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் | தமிழ்நாட்டுப் பறவைகள் | முனைவர் க. ரத்னம் | மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். |
12 | பயண இலக்கியம் | வெளிநாடுகளில் விந்தையான அனுபவங்கள் | பேராசிரியர் டாக்டர் எஸ். எம். பாலாஜி | டாக்டர் எஸ். எம். பாலாஜி பப்ளிகேசன்ஸ், சென்னை. |
13 | வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு | கொடுமுடி கோகிலம் கே. பி. சுந்தராம்பாள் வரலாறு | ப. சோழநாடன் | ரிஷபம் பதிப்பகம், சென்னை. |
14 | நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு | பராக்கிரம பாண்டியபுரம் | மா. சந்திரமூர்த்தி, முனைவர் வெ. வேதாசலம் | கலைத்தாய் பதிப்பகம், சென்னை. |
15 | கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் | விந்தைமிகு பேரண்டம் | டாக்டர் ப. ஐயம்பெருமாள், ஆர். சாமுவேல் செல்வராஜ் | கிரேஸ் பப்ளிகேசன்ஸ், கும்பகோணம். |
16 | பொறியியல், தொழில்நுட்பம் | காவல்துறையில் விரல் ரேகை அறிவியல் | ஏ. எம். பத்மநாபன் | ஏ. எம். பத்மநாபன் (சொந்தப் பதிப்பு), சென்னை. |
17 | மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) | தமிழர் மானிடவியல் | பக்தவத்சல பாரதி | மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். |
18 | சட்டவியல், அரசியல் | முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் | ஏ. டி. சி. இராதாகிருட்டிணன் | ஏ. டி. சி. இராதாகிருட்டிணன் (சொந்தப் பதிப்பு), சென்னை. |
19 | பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் | முழுத்தர மேலாண்மை | முனைவர் ப. அர. நக்கீரன் | பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. |
20 | மருந்தியல், உடலியல், நலவியல் | இதய நலம் | மருத்துவர். ச. இளங்கோவன் | பத்மினி பதிப்பகம், சென்னை. |
21 | தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) | ----- | ----- | ----- |
22 | சமயம், ஆன்மீகம், அளவையியல் | சங்க இலக்கியங்கள் புலப்படுத்தும் வழிபாட்டு வரலாறு | ஆதி. பாலசுந்தரன் | மணிமேகலை பிரசுரம், சென்னை. |
23 | கல்வியியல், உளவியல் | ----- | ----- | ----- |
24 | வேளாண்மையியல், கால்நடையியல் | தமிழ்நாட்டுத் தாவரங்கள் | ச. சண்முகசுந்தரம் | மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். |
25 | சுற்றுப்புறவியல் | ----- | ----- | ----- |
26 | கணிணியியல் | தமிழும் கணிப்பொறியும் | மா. ஆண்டோ பீட்டர் | கற்பகம் புத்தகாலயம், சென்னை. |
27 | நாட்டுப்புறவியல் | தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து | அ. கா. பெருமாள் | தன்னனானே பதிப்பகம், சென்னை. |
28 | வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் | ----- | ----- | ----- |
29 | இதழியல், தகவல் தொடர்பு | நீங்களும் சினிமாவிற்குக் கதை எழுதலாம் | மு. விஜயகுமார் | ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை. |
30 | பிற சிறப்பு வெளியீடுகள் | மனித உரிமைகளும், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமும் | பி. ஆர். ஜெயராஜன் | ஸ்ரீபதி ராஜன் பப்ளிஷர்ஸ், சேலம். |
குறிப்புகள்
- தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்), கல்வியியல், உளவியல், சுற்றுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம், விளையாட்டு ஆகிய ஐந்து வகைப்பாட்டில் வரப்பெற்ற நூல்கள் விதிமுறைகளின்படி இல்லாததால் பரிசுக்குக் கருதப்படும் நிலை எழவில்லை.