க. ரத்னம்
க. ரத்னம் (பிறப்பு: டிசம்பர் 13, 1931) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம், கீரணத்தம் எனும் ஊரில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவர் பின்னாளில் பறவையியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக “தென்னிந்தியப் பறவைகள்” எனும் நூலைப் படைத்தார். இவர் எழுதிய "தமிழ்நாட்டுப் பறவைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[சான்று தேவை]
க. ரத்னம் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 13, 1931 கீரணத்தம், கோயம்புத்தூர் மாவட்டம் |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வாழ்க்கைதொகு
க. ரத்னம் கோவைக்கு அருகில் உள்ள கீரணத்தம் எனும் ஊரில் பிறந்தார். உயர்நிலைக்கல்வி இடிகரை பள்ளியில் பயின்றார். இடைநிலைப்படிப்பை கோவை அரசு கலைக்கல்லூரியிலும், எம்.ஏ இலக்கியம் பட்ட மேற்படிப்பு பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். இவர் முனைவர் பட்டம் பெற்றவர். 1955 முதல் 1990வரை அரசுக்கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்ப்பேராசிரியராகவும் பணியாற்றினார். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவர், "கல்லும் மண்ணும்" என்னும் புதினத்தை எழுதியுள்ளார். மு. வரதராசன், க. அன்பழகன், ரா.பி. சேதுப்பிள்ளை முதலியோர் இவருக்கு முதுகலை படிப்புக்கு ஆசிரியர்கள்.
"ஹவ் டூ வாட்ச் த பேர்டு?" என்னும் அமெரிக்க பறவைகள் பற்றிய ஆங்கில புத்தகத்தைப் படித்ததில் இருந்து க. ரத்னத்திற்கு பறவையியல்மீது ஆர்வம் வந்தது. 1965லிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பறவைகளைக் காண்பதற்காக பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.[1]
எழுதிய நூல்கள்தொகு
- தமிழில் பறவைப் பெயர்கள்[2]
- தென்னிந்தியப் பறவைகள் [3]
- கல்லும் மண்ணும் (நாவல்)
- நினைவின் நிழல் (நாவல்)
- கனவு மாலை (நாவல்)
- சிறகுகள் (சிறுகதை தொகுப்பு)
- உருவக கதைகள்
- காலத்தேரொலி (வசன கவிதைகள்)
- பேதை நெஞ்சம் (வசன கவிதைகள்)
- இவர்களின் பார்வையில் அகலிகை (திறனாய்வு)
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - 7 தொகுதிகள் (மொழிபெயர்ப்பு)
- டப்ளின் நகரத்தார் (மொழிபெயர்ப்பு)
- தமிழ்நாட்டுப் பறவைகள்
- சிறுகதைச்சாளரம்
- சிறுகதை முன்னோடிகள்
- தமிழ்நாட்டு மூலிகைகள்
- சங்க இலக்கியத்தில் யானை
- திராவிட இந்தியா (மொழிபெயர்ப்பு) *கம்பன் ராமகாதையில் பறவைகள் -ஆய்வு
- திருக்குறள் சொல்லடைவு தமிழ் மற்றும் ஆங்கில விளக்கம்
மேற்கோள்கள்தொகு
- ↑ "பறவைக் காதலரான எழுத்தாளர்". தி இந்து தமிழ் திசை. 2022-05-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.teachersofindia.org/sites/default/files/tamil_birds.pdf
- ↑ http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350247[தொடர்பிழந்த இணைப்பு]