மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி

தஞ்சாவூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி (Rajah Serfoji Government College) இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுமத்தின் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1955ஆம் ஆண்டில் சூன் 23 அன்று தொடங்கப்பட்டது.[3] தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது.[4] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டு வருகிறது.[5]

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி
குறிக்கோள்மெய்ப்பொருள் காண்பதறிவு
நிறுவப்பட்டது1955; 68 ஆண்டுகளுக்கு முன்னர் (1955)
வகைபொது, தன்னாட்சி, அரசு
கல்லூரி முதல்வர்து. ரோசி
மாணவர்கள்3500+
அமைவுதஞ்சாவூர், தமிழ்நாடு,  இந்தியா
வளாகம்தஞ்சாவூர்
இணைப்புகள்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்rsgc.ac.in
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முதன்மைக் கட்டடம்

வழங்கும் படிப்புகள் தொகு

இளநிலைப் படிப்புகள் தொகு

கலைப் பாடங்கள் தொகு

 • தமிழ் இலக்கியம்
 • ஆங்கிலம்

வணிகப் பாடங்கள் தொகு

 • வணிகவியல்
 • பொருளியல்
 • வணிக நிர்வாகவியல்

அறிவியல் பாடங்கள் தொகு

 • இயற்பியல் - தமிழ், ஆங்கில வழி
 • வேதியியல் - தமிழ், ஆங்கில வழி
 • கணிதம் - தமிழ், ஆங்கில வழி
 • விலங்கியல் - தமிழ், ஆங்கில வழி
 • கணினி அறிவியல் - ஆங்கில வழி
 • புள்ளியியல் - ஆங்கில வழி
 • உயிர்வேதியியல் - ஆங்கில வழி மட்டும்
 • உயிர்தொழில்நுட்பவியல் - ஆங்கில வழி மட்டும்

முதுநிலைப் படிப்புகள் தொகு

கலைப் பாடங்கள் தொகு

 • தமிழ்
 • ஆங்கிலம்

வணிகப் பாடங்கள் தொகு

 • வணிகவியல்
 • பொருளியல்

அறிவியல் பாடங்கள் தொகு

 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணிதம்
 • விலங்கியல்
 • கணினி அறிவியல்
 • புள்ளியியல்
 • உயிர்வேதியியல்

ஆய்வு துறைகள் தொகு

முனைவர் பட்டம் (பகுதி/முழு நேரம்)

கலைப் பாடங்கள் தொகு

 • தமிழ்
 • ஆங்கிலம்

வணிகப் பாடங்கள் தொகு

 • வணிகவியல்
 • பொருளியல்
 • மேலாண்மை

அறிவியல் பாடங்கள் தொகு

 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணிதம்
 • விலங்கியல்
 • கணினி அறிவியல்
 • உயிர்வேதியியல்

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை தொகு

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர் 2023ஆம் ஆண்டின் கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பின் இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கிடையான தரநிலையில் 101-150 தரப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[6] 2019ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி தேசிய நிறுவன தரவரிசை நிகழ்வில் பங்கெடுத்துவருகிறது.[7]

குறிப்பிடத்தக்க மேனாள் மாணவர்கள் தொகு

குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்