தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (National Assessment and Accreditation Council, NAAC) அல்லது என்ஏஏசி இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.
राष्ट्रीय मूल्यांकन एवं प्रत्यायन परिषद | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1994 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு அமைப்பு |
தலைமையகம் | பெங்களூரு |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | www |
வரலாறு
தொகு1986இல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைக்கேற்ப 1994ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியின் தரக் குறைபாடுகளை களைவதாகும். 1992ஆம் ஆண்டில் செயலாக்கத் திட்டம் வடிக்கப்பட்டு தனியதிகாரம் கொண்ட தேசிய தரவரிசைப்படுத்தும் அமைப்பொன்றை நிறுவ தொலைநோக்கு திட்டம் தீட்டப்பட்டது. [2] இதன்படி, என்ஏஏசி 1994ஆம் ஆண்டு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
தரச்சான்று முறைமை
தொகுஎன்ஏஏசியிடமிருந்து தரச்சான்று பெறுவது மூன்றுநிலை செயல்பாடாகும். முதல்நிலையில் தரப்படுத்தப்படும் நிறுவனம் தயார்படுத்திக்கொண்டு சுய ஆய்வு அறிக்கையை தருவதாகும். இதனைப் பதிப்பித்தபிறகு நேரடியாக இணைநிலை அணியொன்று சுய அறிக்கைப்படி உள்ளதா என ஆய்்ந்து பரிந்துரை அளித்தல் இரண்டாம்நிலை ஆகும். மூன்றாம் நிலையில் என்ஏஏசியின் செயற்குழு இறுதி முடிவெடுப்பதாகும்.
தர நிலை
தொகுதர ஆய்வு முடிவில் உயர் கல்வி நிறுவனங்கள் ஆங்கில் எழுத்தின் அடிப்படையில் 4 தரப்புள்ளிகளுக்கு நிறுவனங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றன.[3]
நிறுவன கூடுதல் தரப்புள்ளிகள் | எழுத்து வகைப்பாடு | செயல்பாடு |
---|---|---|
3.51 – 4.00 | A++ | தரம் பெற்றது |
3.26 – 3.50 | A+ | தரம் பெற்றது |
3.01 – 3.25 | A | தரம் பெற்றது |
2.76 – 3.00 | B++ | தரம் பெற்றது |
2.51 – 2.75 | B+ | தரம் பெற்றது |
2.01 – 2.50 | B | தரம் பெற்றது |
1.51 – 2.00 | C | தரம் பெற்றது |
≤ 1.50 | D | தரம் பெறவில்லை |
அங்கீகாராம்
தொகுசூன் 2023 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், 820 பல்கலைக்கழகங்களும் 15501 கல்லூரிகளும் இந்த அவையினால் அங்கீகாரம் பெற்றுள்ளன.[4]
முடிவுகள்
தொகு11 மார்ச் 2020 முதல் செல்லுபடியாகும் அங்கீகாரத்துடன் கூடிய உயர்கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பட்டியலை தேமதஅ வெளியிட்டது.[5]
பல்கலைக்கழகம் | மாநிலம் | தரப்புள்ளி | தர நிலை முடிவுறும் காலம் |
---|---|---|---|
டாட்டா சமூக அறிவியல் கழகம் | மகாராட்டிரா | 3.89 | 18/02/2023 |
லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம் | மத்தியப் பிரதேசம் | 3.79 | 27/03/2022 |
இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் | மகாராட்டிரா | 3.77 | 26/11/2022 |
அமிர்த விஸ்வ வித்யாபீடம் | தமிழ்நாடு | 3.70 | 16/08/2028 |
இந்திய அறிவியல் கழகம் | கருநாடகம் | 3.67 | 25/09/2023 |
இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | மேற்கு வங்காளம் | 3.66 | 27/03/2024 |
மும்பை பல்கலைக்கழகம் | மகாராட்டிரா | 3.65 | 27/03/2024 |
அழகப்பா பல்கலைக்கழகம் | தமிழ்நாடு | 3.64 | 01/05/2024 |
பனஸ்தலி வித்யாபித் | இராசத்தான் | 3.63 | 10/03/2022 |
ஜாமியா மில்லியா இஸ்லாமியா | தில்லி | 3.61 | 13/12/2026 |
ஆந்திரப் பல்கலைக்கழகம் | ஆந்திரப் பிரதேசம் | 3.6 | 18/02/2023 |
சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் | மகாராட்டிரா | 3.6 | 21/02/2024 |
சென்னைப் பல்கலைக்கழகம் | தமிழ்நாடு | 3.59 | 21/08/2028 |
கல்லூரிகள் | மாநிலம் | தரப்புள்ளி | தர நிலை முடிவுறும் காலம் |
---|---|---|---|
அரசு மொகிந்திரா கல்லூரி | பஞ்சாப் | 3.86 | 18/02/2021 |
பி. எம். எஸ். பொறியியல் கல்லூரி | கர்நாடகா | 3.83 | 27/03/2024 |
சுபோத் கல்லூரி | ராஜஸ்தான் | 3.82 | 29/10/2024 |
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரி | தமிழ்நாடு | 3.82 | 11/09/2022 |
புதிய கலை, வணிகம் மற்றும் அறிவியல் கல்லூரி, அகமதுநகர் | மகாராட்டிரா | 3.79 | 29/10/2022 |
கே. டி. எச். எம். கல்லூரி, நாசிக் | மகாராட்டிரா | 3.79 | 29/10/2024 |
செயின்ட் ஜோசப் கல்லூரி, பெங்களூர் | கருநாடகம் | 3.79 | 29/10/2024 |
தூய சவேரியார் கல்லூரி, கொல்கத்தா | மேற்கு வங்காளம் | 3.77 | 22/01/2024 |
காட்டன் கல்லூரி, கவுகாத்தி | அசாம் | 3.76 | 04/11/2021 |
தூய வளனார் கல்லூரி, தேவகிரி | கேரளம் | 3.76 | 15/09/2023 |
திருச்சிலுவைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | தமிழ்நாடு | 3.75 | 13/02/2027 |
தியோகிரி கல்லூரி, அவுரங்காபாத் | மகாராட்டிரா | 3.75 | 16/03/2021 |
வி. என். ஆர். விக்னனா ஜோதி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் | தெலங்காணா | 3.73 | 15/08/2023 |
இலயோலா சமூக அறிவியல் கல்லூரி | கேரளம் | 3.72 | 09/12/2021 |
தூய ஆன்ஸ் கல்வியியல் கல்லூரி, மங்களூரு | கருநாடகம் | 3.71 | 09/12/2021 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Director NAAC". NAAC. Archived from the original on 11 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ National Assessment and Accreditation Council About Us பரணிடப்பட்டது 2012-01-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Assessment Outcome". www.naac.gov.in.
- ↑ http://naac.gov.in/index.php/en/menu/graphs
- ↑ "Universities accredited by NAAC whose accreditation period is valid". National Assessment and Accreditation Council. Bengaluru. 2020-03-11. Archived from the original on 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.