கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு

(தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (National Institutional Ranking Framework) என்பது இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு
வகைஉயர் கல்வி
இடைவெளிவருடாந்திரம்
வெளியீட்டாளர்கல்வித் துறை அமைச்சகம்
முதல் வெளியீடு2016
நாடுஇந்தியா
வலைத்தளம்www.nirfindia.org/Home

விளக்கம்

தொகு

கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பிற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததன் பேரில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாளன்று மனித வள மேம்பாட்டு அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது.[1] பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொறியியல் நிறுவனங்கள், மேலாண்மை நிறுவனங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டிடக்கலை நிறுவனங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டினைப் பொறுத்து அவற்றிற்கு தனித்தனி பிரிவுகளின் கீழ் தரவரிசை வழங்குவது இவ்வமைப்பின் பணியாகும். கல்வி நிறுவனங்களின் மனித வளங்கள், ஆராய்ச்சி மற்றும் பயன் தாரர்களின் கருத்தின் அடிப்படையில் தரவரிசை வழங்கப்படுகிறது. இதற்கான மதிப்பீடுகள் ஐந்து முக்கியப் பெரும் பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளில் வழங்கப்படும் மதிப்பீடு நிறுவனத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். முதல் முறையாக வழங்கப்பட்ட தரவரிசையில் சுமார் 3500 நிறுவனங்கள் தானாக முன்வந்து பங்கேற்றன.[2]

2017ஆம் ஆண்டு உயர்கல்வி நிறுவன தரவரிசை பட்டியலினை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2017ஆம் ஆண்டு 3ஆம் நாளன்று வெளியிட்டது.[3] 2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் தரவரிசையில் நான்கு பிரிவுகளைத் தேசிய தரவரிசை அறிக்கை கொண்டிருந்தது (பல்கலைக்கழகங்கள், பொறியியல், மேலாண்மை மற்றும் மருத்துவம்). ஆனால் 2017ல் ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் கல்லூரி தரவரிசை என புதிய பிரிவுகள் இரண்டு சேர்க்கப்பட்டன. தரவரிசை தேர்வில் சுமார் 3,000 நிறுவனங்கள் பங்கேற்றன.[4]

ஏப்ரல் 3, 2018 அன்று, 2018 தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. முந்தைய ஆண்டைவிடப் பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.[5][6]

ஒட்டுமொத்த, பல்கலைக்கழகங்கள், பொறியியல், கல்லூரிகள், மேலாண்மை, மருத்துவம், கட்டிடக்கலை மற்றும் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 8 நாள் வெளியிடப்பட்டது.[7]

2020 தரவரிசைகளைப் பொறுத்தவரை, சுமார் 3,800 நிறுவனங்கள் பங்கேற்றன. இது 2019ஆம் ஆண்டில் பங்கேற்ற நிறுவனங்களைவிட 20 சதவீதம் அதிகமாகும்.[8] 2020 ஆண்டின் தரவரிசையானது ஜீன் 11ஆம் நாளன்று வெளியிட்டது. முதல் முறையாக, பல் மருத்துவ நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் பல்வேறு இடங்களைப் பெற்றது.[9]

தோற்றம்

தொகு

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைக்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 1, 2014ஆம் நாளன்று பயிற்சிப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்தின் வாயிலாகத் தேசிய தரவரிசை கட்டமைப்பை உருவாக்குவதற்கான குழுவை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட முதன்மை குழு, செயலாளருடன் 2014 அக்டோபர் 29 அன்று அமைக்கப்பட்டது. முக்கியப் பொறுப்புகளில் மனிதவள மேம்பாட்டுச் செயலர்களும், உறுப்பினர்களாக கரக்பூர் மற்றும் சென்னை இந்தியத் தொழில்நுட்ப கழக இயக்குநர்கள், டெல்லி பல்கலைக்கழகம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், குஜராத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள், அகமதாபாத் மற்றும் பெங்களூரில் இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர்கள், திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி இயக்குநர்கள் (டெல்லி ), தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி, தேசிய தொழில் நுட்ப நிறுவனம், வாரங்கல், அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியத் தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம் (குவாலியர்), இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (போபால்), தேசிய தர நிர்ணய குழுமம் (பெங்களூர்) மற்றும் என்.பி.ஏ (புது தில்லி) தலைவர் உள்ளிட்டோர் உள்ளனர்.[10]

குழுவின் குறிப்பு விதிமுறைகள்:

  • செயல்திறன் அளவீடு மற்றும் தரவரிசைக்கு ஒரு தேசிய கட்டமைப்பைப் பரிந்துரைத்தல்
  1. நிறுவனங்கள்
  2. பாடங்கள்
  • நிறுவன அமைப்பு, நிறுவன செயல்முறை மற்றும் நடைமுறைகளைத் தீர்மானித்து தேசிய தரவரிசை கட்டமைப்பின் காலவரையறைகளைப் பரிந்துரைத்தல்.
  1. தேசிய தரவரிசை கட்டமைப்பின் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான வழிமுறையைப் பரிந்துரைத்தல்.
  2. தேசிய மதிப்பீட்டு மற்றும் தரச்சான்று அவை (NAAC) மற்றும் தேசிய அங்கீகார வாரியம் (NBA) உடன் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளைப் பரிந்துரைத்தல்.

நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்துவதற்கான பொருத்தமான அளவிடக்கூடிய அளவீடுகளின் தொகுப்பை மையக் குழு அடையாளம் கண்டது. இவை ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. பொறியியல் கல்வி நிறுவனங்களின் விடயத்தில் பல்வேறு மதிப்பீடுகளை வழங்கி இதனைப் பிற துறை நிறுவனங்களும் பயன்படுத்தல். இந்த வரைவு அறிக்கையினை தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவரும், குழுவின் உறுப்பினருமான சுரேந்திர பிரசாத் தயாரித்தார்.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கப் பல்கலைக்கழக மானிய குழு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 நாளன்று அமைத்தது. இந்த நிபுணர் குழு உருவாக்கிய கட்டமைப்பைத் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.[11] மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பையும் நடுவண் குழு பரிந்துரைத்தது.[12] அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு மருந்தியல் கல்வியை வழங்கும் தரவரிசை நிறுவனங்கள் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனங்களுக்கான அளவுருக்கள் மற்றும் அளவீடுகளை உருவாக்கியது.[13][14]

மையக் குழுவின் பரிந்துரைகள்

தொகு

மையக் குழுவின் பரிந்துரைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:[10]

  • பொறியியல் நிறுவனங்களின் தரவரிசைக்கான அளவீடுகள் முக்கிய குழு ஒப்புக் கொண்ட வரைகூறுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
  • வரைகூறுகள் ஐந்து முக்கியப் பிரிவு அல்லது தலைப்புகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவும் பொருத்தமான துணை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒட்டுமொத்த மதிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும், துணைத் பிரிவிற்கும் பொருத்தமான மதிப்பு வேறுபாடின்றி அமைய வேண்டும்.
  • ஒவ்வொரு துணைத் பிரிவின்கீழ் மதிப்பெண்ணைக் கணக்கிடப் பொருத்தமான அளவீட்டு முறை முன்மொழியப்பட்டது. ஒவ்வொரு பிரிவிற்கும் மதிப்பெண்களைப் பெறத் துணை-தலைப்பின் கீழ் மதிப்பெண்கள் சேர்க்கப்படுகின்றன. ஒட்டுமொத்த மதிப்பெண் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒதுக்கப்பட்ட முக்கியத்துவம் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒட்டுமொத்த அதிகபட்ச மதிப்பெண் 100.
  • கல்வி நிறுவனங்களை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்த நிலைக்குழு பரிந்துரைத்தது:
  • அ வகை நிறுவனங்கள்: இவை நாடாளுமன்ற சட்டங்கள் மூலம் தோற்றுவிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்வி நிறுவனங்கள்.
  • ஆ வகை நிறுவனங்கள்: இவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவனங்கள், முழு கல்வி சுயாட்சியை அனுபவிப்பதில்லை.

அளவீடுகளும் மதிப்புகளும்

தொகு

பொறியியல், மேலாண்மை, மருத்துவம் மற்றும் கட்டிடக்கலை நிறுவனங்கள்

தொகு

பொறியியல், மேலாண்மை, மருத்துவம் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அளவீடுகளும் அவற்றிற்கான மதிப்பீடுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரைகூறுகள் அ வகை நிறுவனங்கள் ஆ வகை நிறுவனங்கள்
கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் 0.30 0.30
ஆராய்ச்சி, தொழில்சார், கூட்டுத்திட்ட செயல்பாடுகள் 0.30 0.20
பட்டாதாரி உருவாக்க வெளிப்பாடு 0.15 0.25
நிறுவன சென்றடைவு, உள்ளீடு 0.15 0.15
நிறுவன கண்ணோட்டம் 0.10 0.10

ஒட்டுமொத்த மற்றும் கல்லூரிகள்

தொகு

அங்கீகரிக்கப்பட்ட அளவீடுகளும் மதிப்பீடுகளும், ஒட்டுமொத்த மதிப்பும் கல்லூரிகளுக்கான மதிப்பும் அட்டவணையில் (2018 ஆண்டுக்கானது)

வரைகூறுகள் ஒட்டுமொத்தம்[15] கல்லூரி[16]
கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் 0.30 0.40
ஆராய்ச்சி, தொழில்சார், கூட்டுத்திட்ட செயல்பாடுகள் 0.30 0.15
பட்டாதாரி உருவாக்க வெளிப்பாடு 0.20 0.25
நிறுவன சென்றடைவு, உள்ளீடு 0.10 0.10
நிறுவன கண்ணோட்டம் 0.10 0.10

அண்மைய தரவரிசை - 2023

தொகு
ஒட்டுமொத்தம் (முதல் 10 தரம்)[17]
தரம் நிறுவனம் நகரம் மாநிலம்
1 இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை சென்னை தமிழ்நாடு
2 இந்திய அறிவியல் கழகம் பெங்களூரு கருநாடகம்
3 இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தில்லி புது தில்லி தில்லி
4 இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பம்பாய் மும்பை மகாராஷ்டிரா
5 இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கான்பூர் கான்பூர் உத்தரப்பிரதேசம்
6 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், தில்லி புது தில்லி தில்லி
7 இந்திய தொழில்நுட்ப நிறுவனம் காரக்பூர் காரக்பூர் மேற்கு வங்காளம்
8 இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்க்கி ரூர்க்கி உத்தரகண்டம்
9 இந்திய தொழில்நுட்ப நிறுவனம் குவகாத்தி கவுகாத்தி அசாம்
10 ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் புது தில்லி தில்லி
பல்கலைக்கழகங்கள் (முதல் 10 தரம்)[18]
தரம் நிறுவனம் நகரம் மாநிலம்
1 இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு கருநாடகம்
2 ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் புது தில்லி தில்லி
3 ஜாமியா மில்லியா இஸ்லாமியா புது தில்லி தில்லி
4 ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் கொல்கத்தா மேற்கு வங்காளம்
5 வாரணாசி இந்துப் பல்கலைக்கழகம் வாரணாசி உத்தரப்பிரதேசம்
6 மணிப்பால் உயர் கல்விக்கான அகாதமி-மணிபால் மணிப்பால் கருநாடகம்
7 அமிர்த விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர் தமிழ்நாடு
8 வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் வேலூர் தமிழ்நாடு
9 அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் அலிகார் உத்தரப்பிரதேசம்
10 ஐதராபாத்து பல்கலைக்கழகம் ஐதராபாத்து தெலங்காணா

விமர்சனம்

தொகு

இந்த பட்டியல் முழுமையற்றது, சீரற்றது மற்றும் சீரற்ற எல்லைக்குட்பட்டது என விமர்சிக்கப்பட்டது.[19] இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், வாரணாசி தேசிய தரவரிசை குறித்து ஆட்சேபனை எழுப்பியது. இத்தரவரிசை முழுமையற்ற தரவுகளின் அடிப்படையில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.[20]

மேற்கோள்கள்

தொகு
  1. "National Institutional Ranking Framework: Overview". MHRD, Government of India. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
  2. "NIRF India Rankings 2018: IISc Bangalore overall best, AIIMS Delhi tops medical institutes' list - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  3. "India Rankings 2016". National Institutional Ranking Framework. MHRD, Government of India. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
  4. "NIRF India Rankings 2018: IISc Bangalore overall best, AIIMS Delhi tops medical institutes' list - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  5. "NIRF India Rankings 2018: IISc Bangalore overall best, AIIMS Delhi tops medical institutes' list - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  6. "NIRF India Rankings 2018: IISc Bangalore overall best, AIIMS Delhi tops medical institutes' list - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  7. DelhiApril 9, India Today Web Desk New; April 9, 2019UPDATED:; Ist, 2019 11:19. "NIRF Rankings 2019: List of top 10 institutes from each category". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-11. {{cite web}}: |first3= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  8. "NIRF Rankings 2020, NIRF India Rankings 2020 Today: Live Updates". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  9. "NIRF Ranking 2020: IISc, JNU and BHU best universities in India, check the Top 25 list". The Indian Express (in ஆங்கிலம்). 2020-06-11. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  10. 10.0 10.1 National Institutional Ranking Framework: A Methodology for Ranking of Engineering Institutions in India (PDF). Department of Higher Education Ministry of Human Resource Development Government of India. September 2015. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
  11. A Methodolog y for Ranking of Universities and Colleges in India (PDF). Department of Higher Education Ministry of Human Resource Development Government of India. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
  12. A Methodology for Ranking of Management Institutions in India (PDF). Department of Higher Education Ministry of Human Resource Development Government of India. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
  13. A Methodology for Ranking of Pharmacy Institutions in India (PDF). All India Council for Technical Education. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
  14. A Methodology for Ranking of Architecture Institutions (PDF). All India Council of Technical Education. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
  15. "Ranking Metrics for Overall" (PDF). nirfcdn.azureedge.net. p. 9. Archived from the original (PDF) on 24 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  16. "Ranking Metrics for Colleges" (PDF). nirfcdn.azureedge.net. Archived from the original (PDF) on 24 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  17. "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. Archived from the original on 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
  18. "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. Archived from the original on 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.
  19. Three Charts Show What’s Wrong With the NIRF University Rankings
  20. "IIT BHU raises objection on NIRF ranking 2017, says list based on ‘incomplete data’". https://indianexpress.com/article/education/iit-bhu-raises-objection-on-nirf-ranking-2017-says-list-based-on-incomplete-data/. பார்த்த நாள்: 26 May 2019. 

இதனையும் காண்க

தொகு