அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education - AICTE) என்பது இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழினுட்பம், மருந்தியல் (Pharmacy), கட்டுமானக்கலை மற்றும் நகரமைப்பு (Architecture & Town Planning), விடு தி மேலாண்மை மற்றும் உணவுத் தொழினுட்பம் (Hotel Management & Catering Technology), பயன்பாட்டுக் கலை மற்றும் தொழில் (Applied Arts & Crafts), மேலாண்மைக் கல்வி (Management Studies) மற்றும் கணிப்பொறி பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்கும் தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
சுருக்கம்AICTE
உருவாக்கம்நவம்பர், 1945
தலைமையகம்புது தில்லி
தலைமையகம்
மைய அமைப்பு
குழு
சார்புகள்உயர்கல்வித் துறை, [மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
வலைத்தளம்Official website

வரலாறு

தொகு

1945 நவம்பர் மாதத்தில் தொழில்நுட்பக் கல்வி வசதிகள் மற்றும் அவைகளைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்படியாக ஒருங்கிணைக்கவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு தேசியக் கல்விக் கொள்கையின்படி, இந்த அமைப்பு தனிப்பட்ட அதிகாரமுடைய அமைப்பாக திட்டமிடுதல், கட்டுப்பாடுகள், தரம் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், தரம் நிர்ணயித்தல், குறிப்பிட்ட பகுதிகளுக்கு நிதியுதவி அளித்தல், கண்காணித்தல் மற்றும் சரிபார்த்தல் போன்றவைகளின் மூலம் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மையை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இயங்கும் இந்த அமைப்பு இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான சட்டம் (AICTE Act No. 52 of 1987) கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது இந்தச் சட்டம் 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பின் தன்னியக்கமான அமைப்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 1988 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.

அமைவிடம்

தொகு

இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் தற்போது புது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் 38542 சதுர அடிப் பரப்பளவுள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பிற்கான நிர்வாக அலுவலகம் மற்றும் இதர அலுவலகக் கட்டிடங்களுக்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது குழு

தொகு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவில் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரின் கீழாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  1. ஆசிரியர் வளர்ச்சிக் குழு
  2. இளம்நிலைக் கல்விக் குழு
  3. முதுநிலைக் கல்வி & ஆராய்ச்சிக் குழு
  4. தர உறுதிக்குழு
  5. திட்டமிடல் & ஒருங்கிணைப்புக் குழு
  6. ஆய்வு மற்றும் நிறுவனங்கள் வளர்ச்சிக் குழு
  7. நிர்வாகக் குழு
  8. நிதிக் குழு
  9. கல்விக் குழு

ஒவ்வொரு குழுவிற்கும் ஆலோசகர் ஒருவரின் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

மண்டல அலுவலகங்கள்

தொகு

மேற்கு மண்டலம்

தொகு

இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் கல்கத்தாவில் உள்ளது. இந்த மண்டலத்தில் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், ஒரிஸ்ஸா, ஜார்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.

வடக்கு மண்டலம்

தொகு

இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் கான்பூரில் உள்ளது. இந்த மண்டலத்தில் பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.

வடமேற்கு மண்டலம்

தொகு

இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் சண்டிகரில் உள்ளது. இந்த மண்டலத்தில் ஹரியானா, புதுடெல்லி, ஜம்மு & காஷ்மீர், இராஜஸ்தான் மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.

மத்திய மண்டலம்

தொகு

இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் போபாலில் உள்ளது. இந்த மண்டலத்தில் குஜராத், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.

தென்மேற்கு மண்டலம்

தொகு

இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இந்த மண்டலத்தில் கர்நாடகா, இலட்சத் தீவுகள் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.

தெற்கு மண்டலம்

தொகு

இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்த மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.

குறிப்புக்கள்

தொகு
  1. Regional Offices AICTE website.

வெளி இணைப்புகள்

தொகு