கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா)

இந்திய அரசு அமைச்சகம்
(மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்வித் துறை அமைச்சகம் (Ministry of Education) இதற்கு முன்னால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கியது (1985-2020). புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் கல்வித் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.[2]

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Ministry of Human Resource Development
Ministry மேலோட்டம்
அமைப்பு15 ஆகத்து 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
ஆட்சி எல்லைஇந்தியா இந்தியக் குடியரசு
தலைமையகம்சாஸ்திரி பவன்,
Dr. ராஜேந்திர பிரசாத் சாலை,
புது தில்லி
ஆண்டு நிதி99,312 கோடி (US$12 பில்லியன்) (2020–21 est.)[1]
அமைச்சர்
பொறுப்பான துணை அமைச்சர்கள்
Ministry தலைமைகள்
கீழ் அமைப்புகள்
வலைத்தளம்education.gov.in

தற்போதைய கல்வித் துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான்[3]. இணை அமைச்சர்களாக சஞ்சய் ஷாம்ராவ், இராஜ்குமார் ரஞ்சன் சிங், அன்னபூர்ணா தேவி யாதவ் மற்றும் சுபாசு சர்க்கார் உள்ளனர்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவில் கல்வி அமைச்சகம் இருந்தது. ஆனால் 1985 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அதன் பெயரை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) என்று மாற்றினார். புதிய "தேசிய கல்வி கொள்கை 2020" உருவாக்கியபின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் கல்வித் துறை அமைச்சகமாக மாற்றப்பட்டது.[4]

அமைச்சகம் மேலும் இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை முதன்மை, இடைநிலை, உயர்நிலைக் கல்வி, வயது வந்தோர் கல்வி மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றைக் கையாள்கிறது. உயர்கல்வித் துறையானது பல்கலைக்கழக அளவிலான கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உதவித்தொகை போன்றவற்றைக் கையாள்கிறது.

படிப்பறிவு மற்றும் பள்ளிக் கல்வித் துறை,

தொகு

இது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

மாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

இந்திய கல்விக் கழகங்கள் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்படுகின்றன.

நிறுவன அமைப்பு

தொகு

இந்த துறை எட்டு செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் செயற்பாடுகள் 100 க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகிறது.[5]

மேலும்:

அமைச்சர்கள்

தொகு

தற்போதைய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ( 7 July 2021 - பதவியில் உள்ளவர்)

எண் பெயர் புகைப்படம் பதவிக் காலம் கட்சி பிரதமர்
கல்வித் துறை அமைச்சர்
1 அபுல் கலாம் ஆசாத்   15 ஆகத்து 1947 22 சனவரி 1958 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
2 கே.எல். ஸ்ரீமாலி 22 சனவரி 1958 31 ஆகத்து 1963
3 ஹுமாயூன் கபீர் 1 செப்படம்பர் 1963 21 நவம்பர் 1963
4 எம். சி. சாக்ளா   21 நவம்பர் 1963 13 நவம்பர் 1966 ஜவகர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
5 பக்ருதின் அலி அகமது   14 நவம்பர் 1966 13 மார்ச் 1967 இந்திரா காந்தி
6 திரிகுண சென்   16 மார்ச் 1967 14 பெப்ரவரி 1969
7 வி. க. ர. வ. ராவ் 14 பெப்ரவரி 1969 18 மார்ச் 1971
8 சித்தார்த்த சங்கர் ரே 18 மார்ச் 1971 20 மார்ச் 1972
9 சையித் நூருல் கசன்   24 மார்ச் 1972 24 மார்ச் 1977
10 பிரதாப் சந்திர சந்தர் 26 மார்ச் 1977 28 சூலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
11 கரண் சிங்   30 சூலை 1979 14 சனவரி 1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி சரண் சிங்
12 பி. சங்கரநந்த் 14 சனவரி 1980 17 அக்டோபர் 1980 இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) இந்திரா காந்தி
13 எசு. பி. சவாண்   17 அக்டோபர் 1980 8 ஆகத்து 1981
14 சீலா கவுல் 10 ஆகத்து 1981 31 திசம்பர் 1984 இந்திரா காந்தி,
ராஜீவ் காந்தி
15 கே. சி. பாண்ட் 31 திசம்பர் 1984 25 செப்டம்பர் 1985 ராஜீவ் காந்தி
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
16 பி. வி. நரசிம்ம ராவ் 25 செப்டம்பர் 1985 25 சூன் 1988 இந்திய தேசிய காங்கிரசு ராஜீவ் காந்தி
17 பி. சிவ் சங்கர் 25 சூன் 1988 2 திசம்பர் 1989
18 வி. பி. சிங்   2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம் வி. பி. சிங்
19 ராஜ் மங்கல் பாண்டே 21 நவம்பர் 1990 21 சூன் 1991 சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) சந்திரசேகர்
20 அர்ஜுன் சிங்   23 சூன் 1991 24 திசம்பர் 1994 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
(16) பி. வி. நரசிம்ம ராவ் 25 திசம்பர் 1994 9 பெப்ரவரி 1995
21 மாதவ்ராவ் சிந்தியா   10 பெப்ரவரி 1995 17 சனவரி 1996
(16) பி. வி. நரசிம்ம ராவ் 17 சனவரி 1996 16 மே 1996
22 அடல் பிகாரி வாச்பாய்   16 மே 1996 1 சூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
23 எச். ஆர். பொம்மை   5 சூன் 1996 19 மார்ச் 1998 ஜனதா தளம் தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
24 முரளி மனோகர் ஜோஷி   19 மார்ச் 1998 21 மே 2004 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
25 அர்ஜுன் சிங்   22 மே 2004 22 மே 2009 இந்திய தேசிய காங்கிரசு மன்மோகன் சிங்
26 கபில் சிபல்   29 மே 2009 29 அக்டோபர் 2012
27 பள்ளம் ராஜூ   30 அக்டோபர் 2012 26 மே 2014
28 இசுமிருதி இரானி[9] 26 மே 2014 5 சூலை 2016 பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி
29 பிரகாஷ் ஜவடேகர்[10]   5 July 2016 31 May 2019
30 ரமேசு போக்கிரியால்[11]   30 மே 2019 29 சூலை 2020
கல்வித் துறை அமைச்சகம்
31 ரமேஷ் பொக்ரியால்   29 சூலை 2020 07 சூலை 2021 பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி
32 தர்மேந்திர பிரதான்   07 சூலை 2021 பதவியில் பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி

இணை அமைச்சர்கள்

தொகு
எண் பெயர் படம் அலுவல் கட்சி பிரதமர்
1 அன்னபூர்ணா தேவி யாதவ் 8 ஜூலை 2021 பதவியில் பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி
2 சுபாசு சர்க்கார்   8 ஜூலை 2021 பதவியில்

தேசிய கல்விநிறுவனங்களின் தரவரிசை(NIRF)

தொகு

ஏப்ரல் 2016 இல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கீழ் இந்திய கல்லூரிகளின் தரவரிசைகளின் முதல் பட்டியலை வெளியிட்டது. NBA, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், UGC, Thomson Reuters, Elsevier மற்றும் INFLIBNET (Information & Library Network) மையத்தை உள்ளடக்கிய முழு தரவரிசைப் பயிற்சியும். ரேங்கிங் கட்டமைப்பு செப்டம்பர் 2015 இல் தொடங்கப்பட்டது. அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்கள் உட்பட அனைத்து 122 மத்திய-நிதி நிறுவனங்களும் முதல் சுற்று தரவரிசையில் பங்கேற்றன.

இவற்றையும் பார்க் க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Union Budget 2020–21 Analysis" (PDF). prsindia.org. 2020. Archived from the original (PDF) on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
  2. "HRD Ministry Renamed as Ministry of Education as Modi Cabinet Reverses Change Made by Rajiv Gandhi". News18. 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 29 July 2020.
  3. Ministers and their Ministries of India
  4. Yadav, Shyamlal. "How India's Education Ministry became 'HRD Ministry', and then returned to embrace Education". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  5. ORGANIZATIONAL STRUCTURE பரணிடப்பட்டது 2010-09-29 at the வந்தவழி இயந்திரம் Department of Higher Education.
  6. Technical Education Overview பரணிடப்பட்டது 2011-10-05 at the வந்தவழி இயந்திரம் Dept of Ed.
  7. National Level Councils பரணிடப்பட்டது 2010-02-01 at the வந்தவழி இயந்திரம் Tech Ed.
  8. Council of Architecture website. Coa.gov.in (1 September 1972). Retrieved on 14 April 2012.
  9. "Cabinet ministers announcement". 27 May 2014. http://www.tribuneindia.com/2014/20140527/latest-news.htm. 
  10. "Cabinet reshuffle July 2016". 6 Jul 2016. http://epaper.newindianexpress.com/863513/The-New-Indian-Express-Bangalore/06-July-2016#page/1/2. 
  11. "Cabinet ministers announcement". 31 May 2019. https://mhrd.gov.in/minister-page. 

வெளி இணைப்புகள்

தொகு