ரமேஷ் பொக்ரியால்
ரமேஷ் பொக்ரியால் "நிசாங்க்"(Ramesh Pokhriyal "Nishank", செங்கிருதம்: रमेश पोखरियाल "निशंक"; பிறப்பு சூலை 15, 1959[1]), இந்திய அரசியல்வாதியும் இந்தி மொழிப் புலவரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான இவர் இந்தியாவின் பதினாறாவது மக்களவையில் அரித்துவார் மக்களவைத் தொகுதியின் சார்பாக உறுப்பினராக உள்ளார். 2009 முதல் 2011 வரை உத்தராகண்ட மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
ரமேஷ் பொக்ரியால் | |
---|---|
கல்வித் துறை அமைச்சர் | |
பதவியில் 29 சூலை 2020 – 11 சூன் 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | இவரே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் |
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் | |
பதவியில் 30 மே 2019 – 29 சூலை 2020 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | பிரகாஷ் ஜவடேகர் |
பின்னவர் | இவரே கல்வித் துறை அமைச்சர் |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | ஹரீஷ் ராவத் |
தொகுதி | அரித்துவார் |
5ஆவது உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 27 சூன் 2009 – 11 செப்டம்பர் 2011 | |
ஆளுநர் | பன்வாரி லால் ஜோஷி மார்கரட் அல்வா |
முன்னையவர் | புவன் சந்திர கந்தூரி |
பின்னவர் | புவன் சந்திர கந்தூரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூலை 1959 பெளரி, உத்தராகண்டம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர்(கள்) | குசும் காந்தா போக்ரியால் (தி. 1985; இற. 2012) |
பிள்ளைகள் | 3 இல் ஒருவர் (அருஷி நிஷாங்க்) |
வாழிடம்(s) | தேராதூன், உத்தராகண்டம் |
முன்னாள் கல்லூரி | ஹேம்வதி நந்தன் பாஹுகுனா கர்வால் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | www |
இளமை
தொகுசூலை 15, 1959 அன்று பரமானந்த் போக்கிரியால் மற்றும் விசுவாம்பரி தேவிக்கு மகனாக (தற்போதைய உத்தராகண்டம்) உத்தரப் பிரதேசத்தின் பௌரி கர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பினானி கிராமத்தில் பிறந்தார்.
அரசியல் வாழ்வு
தொகுஉத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை, விதான் சௌதாவிற்கு, முதல்முறையாக 1991ஆம் ஆண்டு கர்ணப்பிரயாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே தொகுதியிலிருந்து 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநில அரசில் 1997ஆம் ஆண்டு உத்தராஞ்சல் வளர்ச்சி அமைச்சராகப் பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டப்பேரவைக்கு தலிசைன் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே தொகுதியிலிருந்து மீண்டும் 2007ஆம் ஆண்டு போட்டியிட்டு இம்முறை வெற்றியடைந்தார்.[1]
முதலமைச்சராக
தொகு27 சூன், 2009 உத்தராகண்டத்தின் ஐந்தாவது முதல்வராக பதவியேற்றார்.[2] இம்மாநிலத்தின் மிக இளைய முதலமைச்சர் என்ற பெருமை உடையவர்.
மத்திய அமைச்சராக
தொகுஇவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில், அரித்துவார் மக்களவைத் தொகுதிலியிருந்து வென்று, நரேந்திர மோதியின் அமைச்சரவையில்மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனார்.
இவர் மீண்டும் 30 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக பொறுப்பேற்றார்.[3] 31 மே 2019 அன்று இவருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். June 24, 2009. பார்க்கப்பட்ட நாள் 2015-12-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Nishank sworn in as Uttarakhand Chief Minister". The Indian Express. 27 June 2009. http://www.indianexpress.com/news/Nishank-sworn-in-as-Uttarakhand-Chief-Minister/482090.
- ↑ DehradunMay 31, Press Trust of India; May 31, 2019UPDATED:; Ist, 2019 00:52. "Ramesh Pokhriyal Nishank: Poet-politician gets a ministerial berth | What you need to know". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
வெளியிணைப்புகள்
தொகு- ரமேசு போக்கிரியால் தனிப்பட்ட வலைத்தளம் பரணிடப்பட்டது 2009-06-27 at the வந்தவழி இயந்திரம்