முன்னாள் கல்லூரி
முன்னாள் கல்லூரி (அல்மா மேட்டர் (Alma mater இலத்தீன்: alma mater ) என்பது ஒருவர் முன்னர் பயின்ற பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தை அடையாளம் காண தற்போது பயன்படுத்தப்படும் ஒரு லத்தீன் உருவகச் சொற்றொடர்.[1][2][3]
அதன் தற்போதைய பயன்பாட்டிற்கு முன், அல்மா மேட்டர் என்பது பல்வேறு தாய் தெய்வங்களைக் குறிப்பிடும் மரியாதைக்குரியச் சொல்லாக இருந்தது. குறிப்பாக, சேரீசு அல்லது சைபலியினைக் குறிப்பிட்டது.[4] பின்னர், கத்தோலிக்க மதத்தில், இயேசுவின் தாயான மரியாளின் பெயரானது.
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக தொடர்ந்து இயங்கி வரும் பல்கலைக்கழகத்தின் வரலாற்று நிலையைக் கொண்டாடும் வகையில் , போலோக்னா பல்கலைக்கழகம் அல்மா மேட்டர் ஸ்டுடியோரம் ("படிப்புகளின் தாய்") என்பதனை ஏற்றுக்கொண்டபோது, இந்தச் சொல் கல்விப் பயன்பாட்டிற்கு வந்தது.[5]
இந்த வார்த்தை பழைய மாணவர்களுடன் தொடர்புடையது, அதாவது "செவிலி" அல்லது "பேணி வளர்ப்பவர்", எனப் பொருள் தரக்கூடியதாக இருந்தாலும் பட்டதாரிக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6]
சொற்பிறப்பியல்
தொகுஅல்மா (பேணிக் காப்பவர்) என்பது சேரீசு, சைபலே, வீனஸ் மற்றும் பிற தாய் தெய்வங்களுக்கு ஒரு பொதுவான அடைமொழியாக இருந்தாலும், பாரம்பரிய லத்தீன் மொழியில் இதன் பின்னொட்டான மேட்டர் என்பதுடன் இணைத்துப் பயன்படுத்தப்படவில்லை.[7]
உரோமின் வீழ்ச்சிக்குப் பிறகு , இயேசுவின் தாய் மரியாவுடன் இணைந்து இந்த வார்த்தை கிறித்துவ வழிபாட்டுப் பயன்பாட்டிற்கு வந்தது. " மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே! " என்பது பதினோராம் நூற்றாண்டில் நன்கு அறியப்பட்ட மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோயில் இணைக்குழுப் பாட்டு ஆகும்.[7]
1600 ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக அச்சுப்பொறியாளரான ஜான் லெகேட், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் ஒரு சின்னத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, ஆங்கிலம் பேசும் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தை அடையாளப்படுத்த இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதாக முதன்முதலாக ஆவணப்படுத்தப்பட்டது .[8][9] வில்லியம் பெர்கின்சின், எ கோல்டன் செயின் புத்தகத்தின் தலைப்புப் பக்கத்தில் இந்தச் சின்னம் முதன்முதலாக இருந்தது. அதில் அல்மா மேட்டர் கான்டாப்ரிஜியா ("ஊட்டமளிக்கும் தாய் கேம்பிரிட்ஜ்") என்ற லத்தீன் சொற்றொடர் நிர்வாண நிலையில், பாலூட்டும் பெண்ணைத் தாங்கிய பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.[10][11]
ஆங்கில சொற்பிறப்பியலில், பெரும்பாலும் பல்கலைக்கழகம் தொடர்பான முதல் பயன்பாடு 1710 எனக் குறிப்பிடப்படுகிறது, ரிச்சர்ட் வார்டு என்பவரால் ஹென்றி மோரின் நினைவாக ஒரு கல்வித் தாய் உருவம் குறிப்பிடப்பட்டது.[12][13]
சான்றுகள்
தொகு- ↑ "alma", oxforddictionaries.com. Retrieved October 11, 2018.
- ↑ "Definition of 'Alma mater'". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
- ↑ Ayto, John (2005). Word Origins (2nd ed.). London: A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408101605. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ Shorter Oxford English Dictionary, 3rd edition
- ↑ "Our history – University of Bologna". Unibo.it. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
- ↑ Cresswell, Julia (2010). Oxford Dictionary of Word Origins. Oxford University Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199547937. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ 7.0 7.1 Sollors, Werner (1986). Beyond Ethnicity: Consent and Descent in American Culture. Oxford University Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198020721.Sollors, Werner (1986). Beyond Ethnicity: Consent and Descent in American Culture. Oxford University Press. p. 78. ISBN 9780198020721.
- ↑ Stokes, Henry Paine (1919). Cambridge stationers, printers, bookbinders, &c. Cambridge: Bowes & Bowes. p. 12. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ Roberts, S. C. A History of the Cambridge University Press 1521–1921. Cambridge: Cambridge University Press. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ Stubbings, Frank H. (1995). Bedders, Bulldogs and Bedells: A Cambridge Glossary. p. 39.
- ↑ Perkins, William (1600). A Golden Chaine: Or, the Description of Theologie, containing the order and causes of salvation and damnation, according to God's word. Cambridge: University of Cambridge. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ Harper, Douglas. "Alma mater". Online Etymological Dictionary. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ Ward, Richard. The Life of the Learned and Pious Dr. Henry More, Late Fellow of Christ's College in Cambridge. London: Joseph Downing. p. 148. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Alma mater தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- முன்னாள் கல்லூரி – விளக்கம்
- Alma Mater Europaea website