கல்லூரி

பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும்

கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.[1][2][3]

திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

கல்லூரி வகைகள் தொகு

நிர்வாக வகை தொகு

கல்லூரியின் நிர்வாக அமைப்பைக் கொண்டு இதை மூன்று வகைப்படுத்தலாம்.

  1. அரசுக் கல்லூரிகள்
  2. அரசு உதவி பெறும் கல்லூரிகள்
  3. சுயநிதிக் கல்லூரிகள்

கல்வி வகை தொகு

கல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்தும் கீழ்காணும் சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  2. மருத்துவக் கல்லூரி
  3. பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி
  4. கல்வியியல் கல்லூரி
  5. விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி
  6. விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி
  7. கால்நடை மருத்துவக் கல்லூரி
  8. செவிலியர் பயிற்சிக் கல்லூரி
  9. விளையாட்டு மற்றும் உடல்நலக் கல்வியியல் கல்லூரி

இலக்கியப் பயன்பாடு தொகு

  1. 'கல்லூரி நற்கொட்டிலா' - சீவக சிந்தாமணி (995)

மேற்கோள்கள் தொகு

  1. "Everything You Need to Know About Community Colleges: FAQ". Archived from the original on 28 October 2021. பார்க்கப்பட்ட நாள் 28 October 2021.
  2. Oxford English Dictionary, 1891, s.v., definition 4c
  3. "Nuuk - Arms (crest) of Nuuk". www.heraldry-wiki.com. 30 September 2018. Archived from the original on 7 September 2021. பார்க்கப்பட்ட நாள் 7 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி&oldid=3889860" இலிருந்து மீள்விக்கப்பட்டது