ஹரீஷ் ராவத்

ஹரீஷ் ராவத் (Harish Rawat) (இந்தி: हरीश रावत; பிறப்பு ஏப்ரல் 27, 1947) உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், பதினைந்தாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது விவசாயத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தார். இவருக்கு 28 அக்டோபர் 2012 அன்று கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டு, நீர் நிலைகளுக்கான பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு ஹரீஷ் (மாநிலங்களவை உறுப்பினராகவும்) உத்தராகாண்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினராகவும் இருந்தார். இவர் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 1 பிப்ரவரி 2014 அன்று பதவியேற்றார்.[1]

ஹரீஷ் ராவத்
பதவியில்
11 மே 2016 – 18 மார்ச் 2017
பதினைந்தாவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதிஅரித்வார்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
2002–2008
தொகுதிஉத்தராகண்டம்
7வது, 8வது மற்றும் 9வது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980-1991
முன்னையவர்முரளி மனோகர் ஜோஷி
பின்னவர்ஜீவன் சர்மா
தொகுதிஅல்மோரா
மத்திய நீர் வளத்துறை அமைச்சர்
பதவியில்
30 அக்டோபர் 2012 – 31 சனவரி 2014
முன்னையவர்பவன் குமார் பன்சால்
பின்னவர்உமா பாரதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 ஏப்ரல் 1947 (1947-04-27) (அகவை 77)
மோகனாரி, அல்மோரா மாவட்டம், உத்தராகண்டம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிஇலக்னோ பல்கலைக்கழகம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் இப்பதவியை 04.07.2019 அன்று இராஜினாமா செய்தார்.[2]

சான்றுகள்

தொகு
  1. http://zeenews.india.com/news/uttarakhand/harish-rawat-takes-oath-as-new-cm-of-uttarakhand_908334.html
  2. "நாடாளுமன்ற தேர்தல் தோல்வி: காங். பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா". மாலை மலர். பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹரீஷ் ராவத்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரீஷ்_ராவத்&oldid=3625111" இலிருந்து மீள்விக்கப்பட்டது