நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை

இந்தியக் குடியரசின் 23வது அமைச்சரவை (23rd Ministry of the Republic of India), பதினேழாவது மக்களவை அமைக்க நடைபெற்ற 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், பெரும்பான்மை மக்களைத் தொகுதிகளை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோதி தலைமையிலான இரண்டாவது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, 30 மே 2019 அன்று மாலை, புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

23வது அமைச்சரவை - இந்தியக் குடியரசு
உருவான நாள்30 மே 2019
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்நரேந்திர மோதி
நாட்டுத் தலைவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை அரசு
எதிர் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வரலாறு
தேர்தல்(கள்)இந்தியப் பொதுத் தேர்தல், 2019
Outgoing electionஇந்தியப் பொதுத் தேர்தல், 2024
Legislature term(s)5 ஆண்டுகள்
முந்தையநரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை

அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள்

தொகு

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் பின் வருமாறு:[1][2][3]

தலைமை அமைச்சர்

தொகு
  1. நரேந்திர மோதி - இந்தியப் பிரதமர், பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை

மத்திய ஆய அமைச்சர்கள்

தொகு
  1. அமித் ஷா - உள்துறை அமைச்சகம்
  2. சுப்பிரமணியம் செயசங்கர் - வெளியுறவுத் துறை
  3. ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை அமைச்சகம்
  4. நிர்மலா சீதாராமன் - நிதி அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
  5. நிதின் கட்காரி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்
  6. இசுமிருதி இரானி - ஜவுளி அமைச்சகம், மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம்
  7. பியுஷ் கோயல் - இந்திய இரயில்வே அமைச்சகம், வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்
  8. டி. வி. சதானந்த கௌடா - வேதியல் மற்றும் உரங்கள் அமைச்சகம்
  9. அருச்சுன் முண்டா - பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
  10. அர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
  11. இராம் விலாசு பாசுவான் - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
  12. இரவி சங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம்
  13. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் & உருக்கு அமைச்சகம்
  14. நரேந்திர சிங் தோமர் - விவசாயத் துறை அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சசம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
  15. தவார் சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் உரிமை அளிப்பு அமைச்சகம்
  16. ரமேசு போக்கிரியால் - மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  17. ஹர்ஷ் வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
  18. பிரகாஷ் ஜவடேகர் - சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம்
  19. முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
  20. மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
  21. பிரகலாத ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம்
  22. கஜேந்திர சிங் செகாவத் - நீர் வள அமைச்சகம்
  23. கிரிராஜ் சிங் - கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வளர்ப்பு அமைச்சகம்
  24. அர்விந்து கண்பத் (சிவ சேனா) - பெருந்தொழில்கள் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்புடன்)

தொகு

தனிப் பொறுப்புடன் கூடிய இராஜங்க அமைச்சர்கள் வருமாறு:

  1. சந்தோஷ் குமார் கங்க்வார் - தொழிலாளர் & வேலைவாய்ப்புத் துறை
  2. ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை
  3. ஸ்ரீபாத் யசோ நாயக் -யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறைகள் (AYUSH); மற்றும் பாதுகாப்புத் துறை
  4. ஜிதேந்திர சிங் - வடகிழக்கு பிரதேச மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை
  5. கிரண் ரிஜிஜு - இளைஞர் நலம் & விளையாட்டுத் துறை மற்றும் சிறுபான்மையோர் விவகாரங்கள்
  6. பிரகலாத் சிங் படேல் - பண்பாடு & சுற்றுலாத் துறை
  7. ராஜ்குமார் சிங் - மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மற்றும் திறன் மேம்பாடு & தொழில்முனைவுத் துறை
  8. ஹர்தீப் சிங் பூரி - வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் & தொழில்கள்
  9. மன்சுக் எல். மாண்டவியா - கப்பல் துறை, வேதியல் மற்றும் உரத் துறை

இணை அமைச்சர்கள்

தொகு

தனிப் பொறுப்பு அற்ற இராஜாங்க அமைச்சர்கள்:

  1. பக்கன் சிங் குலாஸ்தே - இரும்புத் துறை
  2. அஸ்வினி குமார் சௌபே - சுகாதாரம் & குடும்ப நலத் துறை
  3. அர்ஜுன் ராம் மேக்வா - நாடாளுமன்ற விவகாரம், கனரகத் தொழில்கள் & பொதுத்துறை நிறுவனங்கள்
  4. ஜெனரல் (ஓய்வு) வி. கே. சிங் - சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் துறை
  5. கிருஷ்ணன் பால் - சமூக நீதி & உரிமையளிப்புத் துறை
  6. ராவ் சாகேப் தன்வே - நுகர்வோர் நலன், உணவு & பொது விநியோகம்
  7. ஜி. கிஷன் ரெட்டி - உள்துறை
  8. புருசோத்தம் ரூபாலா - வேளாண்மை & உழவர் நலம்
  9. ராம்தாஸ் அதவாலே - சமூக நீதி & உரிமையளிப்புத் துறை
  10. நிரஞ்சன் ஜோதி - ஊரக வளர்ச்சித் துறை
  11. பாபுல் சுப்ரியா - சுற்றுச்சூழல், வனம் & பருவ நிலை மாற்றம்
  12. சஞ்சீவ் குமார் பல்யான் - கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை & மீன் வளத் துறை
  13. சஞ்சய் சாம்ராவ் தோத்திரி - மனித வள மேம்பாடு, தகவல் தொடர்பு, மின்னணுவியல் & தகவல் தொழில் நுட்பத் துறை
  14. அனுராக் தாக்கூர் - நிதித் துறை & பெருநிறுவனங்களின் விவகாரங்கள் துறை
  15. சென்னபசப்பா சுரேஷ் அங்காடி - இரயில்வே துறை
  16. நித்தியானந்த ராய் - உள்துறை
  17. ரத்தன் லால் கட்டாரியா - நீர் வளம், சமூக நீதி & அதிகாரமளித்தல் துறை
  18. வி. முரளிதரன் - வெளியுறவுத் துறை & நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
  19. ரேணுகா சிங் சரௌதா - பழங்குடி மக்கள் மேம்பாட்டுத் துறை
  20. சோம் பிரகாஷ் - தொழில் மற்றும் வணிகம்
  21. இராமேஷ்வர் தெலி - உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை
  22. பிரதாப் சந்திர சாரங்கி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
  23. கைலாஷ் சௌத்திரி - வேளாண்மை & உழவர் நலம்
  24. தேவஸ்ரீ சௌத்திரி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
  25. எல். முருகன் - தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை

வெளியேறிய முன்னாள் அமைச்சர்கள்

தொகு

நரேந்திர மோதியின் மோதீயின் முதல் அமைச்சரவையில் பணியாற்றி, மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இடம் பெறதாவர்கள்: சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, சுரேஷ் பிரபு, உமா பாரதி, மேனகா காந்தி, ஜெகத் பிரகாஷ் நட்டா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இராதா மோகன் சிங், சத்யபால் சிங், மகேஷ் சர்மா, ஜெயந்த் சின்ஹா, சிவ பிரதாப் சுக்லா, ஆனந்த் குமார், ராம் கிர்பால் யாதவ், அல்போன்ஸ் கண்ணந்தானம், ஜூவல் ஓரம், விஜய் கோயல், சௌத்திரி வீரேந்திர சிங், எஸ். எஸ். அலுவாலியா, சுபாஷ் பாம்ரே, ஹன்ஸ்ராஜ் அஹிர், சுதர்சன் பகத், விஜய் சம்பலா மற்றும் பி. பி. சௌத்திரி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  2. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  3. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்

வெளி இணைப்புகள்

தொகு