சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா)

சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா) (Minstry of Environment and Forests), இந்த அமைச்சகமே இந்தியாவின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை கவனிக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்த அமைச்சகம் 1985ல் ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைச்சகத்தின் பொறுப்பானது இந்தியாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களை திட்டமிடுவதும், ஊக்குவிப்பதும், ஒருங்கிணைப்பதும், மேற்பாடுவையிவதாகும். இந்த அமைச்சகத்தின் முக்கியப் பணியானது, இந்திய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதும், பாதுகாப்பது, மேலும் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு; காடு வளர்ப்பு, மற்றும் நில சீரழிவு தணிப்பு ஆகியன்வாகும். இதுவே இந்தியாவின் தேசிய பூங்காக்கள் நிர்வகிக்கும் பொறுப்பு உடையதாகும்.[1]

அகில இந்தியப் பணிச்சேவைகளூள் ஒன்றான, இந்திய வனப் பணி (IFS) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் தொகு

நிறுவனங்கள் தொகு

அமைப்பு தொகு

  • சிறப்பு மையங்கள்
    • சுற்றுச்சூழல் கல்வி மையம், அகமதாபாத் (Centre for Environment Education)
    • முதலுதவி சுற்றுச்சூழல் கல்வி மையம், சென்னை (C. P. R. Environmental Education Centre)
    • விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மையம், பெங்களூர் (Centre for Animals and Environment)
    • சிறப்பு சுற்றுச் சூழல் பொருளாதாரம் மையம், சென்னை (Centre of Excellence in Environmental Economics)
    • உள்ளூர் ஆரோக்கிய வழக்கங்கள் புதுப்பித்தல் அறக்கட்டளை, பெங்களூர்
    • சூழலியல் அறிவியல் மையம், பெங்களூர் (Centre for Ecological Sciences)
    • சிதையும் சுற்றுச்சூழல் மேலாண்மை மையம், பெங்களூர்
    • சுரங்க சுற்றுச்சூழல் மையம், தன்பாத் (Centre for Mining Environment)
    • சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON), கோயம்புத்தூர்
    • வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,[2] திருவனந்தபுரம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு