தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், புது தில்லி

தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் (National Museum of Natural History, NMNH ), புது தில்லி இந்தியாவின் இரு இயற்கை அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். 1972 இல் நிறுவப்பட்டு 1978 இல் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றது.[1] இது புது தில்லியின் மையப்பகுதியில் பரகம்பா சாலையில் தான்சென் மார்கில், கன்னாட் பிளேசு மெட்ரோ நிலையத்திற்கு அருகில் நேபாளத் தூதரகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.[2][3] ஏப்ரல் 26, 2016 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் அருங்காட்சியகத்தின் கட்டிடமும் அனைத்து சேகரிப்புகளும் முழுமையாக அழிபட்டன.[4]

தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1972 (1972)
அமைவிடம்பரகம்பா சாலை, தான்சென் மார்கு, புது தில்லி, இந்தியா
வகைஇயற்கை வரலாறு
வலைத்தளம்nmnh.nic.in

2016 தீ விபத்து தொகு

ஏப்ரல் 26, 2016 விடிகாலையில் அருங்காட்சியகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது; இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து சேகரிப்புகளும் முழுமையாக நாசமடைந்தன.[4] அருங்காட்சியகம் அமைந்துள்ள இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்களின் கூட்டமைப்பு (FICCI) கட்டிடத்தின் ஆறாவது மாடியில் அதிகாலை 1:30  மணிக்கு தீ மூண்டது. இது இரண்டாவது மாடியை அடைந்து தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்படுத்தும் முன்னரே அருங்காட்சியகத்தின் அனைத்துக் காட்சிப் பொருட்களையும் தீக்கிரையாக்கியது. [4][5]

இந்த அருங்காட்சியகத்தில் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லிக்கால் தொன்மாவின் புதைபடிவ எலும்பும் மைசூரைச் சேர்ந்த புகழ் பெற்ற தோற்பாவைக் கலைஞர்கள் வான் இங்கென் மற்றும் வான் இங்கென் வடிவமைத்த நிரப்பிய விலங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[6] இத்தீயை அணைக்க 200 தீயணைப்பு வீரர்களும் 35 தீயணைப்பு வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன; தீயைக் கட்டுக்குள் கொணர மூன்றரை மணி நேரத்திற்கும் கூடுதலாகப் போராடினர். கட்டிடத்தினுள் சிக்கிய ஆறு பேர் புகையினால் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[7]

இந்த அருங்காட்சியகத்தில் காட்டுயிர்கள், சூழலியல், பாதுகாப்பு குறித்த விரிவான திரைப்படத் தொகுப்புகள் இருந்தன; ஊர்வன/நகர்வன காட்டுக்கள், டைனோசார்கள், உயிரின துவக்கமும் பரிணாமமும் குறித்த படத்தொகுப்புகள், இயற்கைப் பாதுகாப்பு, தாவரவினங்களும் விலங்கினங்களும் குறித்த பல காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. [8]

தீ விபத்திற்கான காரணம் அறியப்படவில்லை; அருங்காட்சியகத்தின் காட்சிப் பொருட்களாலும் மரப்பேழைகளாலும் தீ விரைவாகப் பரவியதாக கூறப்படுகின்றது.[7][9]

மேற்சான்றுகள் தொகு

  1. "About us". NMNH official site. Archived from the original on 10 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 15 September 2015.
  2. "New, futuristic natural history museum to come up in Delhi". ZeeNews.India.com. Indo‑Asian News Service. 19 July 2015. பார்க்கப்பட்ட நாள் 15 September 2015.
  3. "National Museum of Natural History". DelhiInformation.in. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 Vidhi Doshi (2016-04-26). "Fire guts Delhi's natural history museum". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2016-04-26.
  5. Sonal Mehrotra (26 April 2016). "Delhi's National Museum of Natural History Destroyed In Massive Fire". NDTV.com.
  6. "Massive fire destroys Delhi's National Museum of Natural History". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  7. 7.0 7.1 "Major fire breaks out in FICCI building". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  8. "Massive fire erupts at National Museum of Natural History in New Delhi". India Today. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  9. "Fire destroys Delhi's National Museum of Natural History". The Indian Express. 26 April 2016.

வெளியிணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு