ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்


ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Regional Museum of Natural History) அல்லது பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் என்பது நாட்டின் நான்காவது பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் சவாய் மாதோபூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் நிலவியல் அமைப்பை காட்சிப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் சவாய் மாதோபூர் என்னும் இடத்தில் இருந்து ஒன்பது கிமீ தொலைவில் உள்ள ராம்சிங்புரா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
RMNH
Regional Museum of Natural History.jpg
ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் is located in Rajasthan
ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Location within Rajasthan
நிறுவப்பட்டது2007 (2007)
அமைவிடம்ராம்சிங்புரா, சவாய் மாதோபூர்
வகைஇயற்கை வரலாறு
உரிமையாளர்[சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், இந்திய அரசு
வலைத்தளம்nmnh.nic.in/SMadhopur.htm

வரலாறுதொகு

 
ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

ராஜீவ் காந்தி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவை இந்திய துணைத் தலைவர் முகமது ஹமீத் அன்சாரி 23 டிசம்பர் 2007 ஆம் நாளன்று மேற்கொண்டார். இந்த அருங்காட்சியகம் மாநில நிதியமைச்சர் நமோ நரேன் மீனா அவர்களால் மார்ச் 1, 2014 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது. [1]

இந்த அருங்காட்சியக நிர்வாகம் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் சவாய் மாதோபூரில் ராம்சிங்புரா அருகே அமைந்துள்ள ரண்தம்பூர் தேசிய பூங்கா வளாகத்தில் 7.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இதன் ஆலோசக தலைமையகம் புது தில்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகும்.[2] இந்தியாவில் மைசூர், போபால் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள, இதுபோன்ற நான்காவது அருங்காட்சியகம் என்ற பெருமையை இந்த அருங்காட்சியகம் பெற்றுள்ளது.

 
அருங்காட்சியகத்தின் பக்கவாட்டுத் தோற்றம்

விளக்கம்தொகு

ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் கண்காட்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் மூலம் இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் குறித்த பொது விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்குவதற்கான ஒரு முறைசாரா மையமாக இயங்கி வருகிறது. தாவரங்கள் ன்மற்றும் விலங்குகளுக்கிடையேயான சுற்றுச்சூழல் தொடர்பை இந்த அருங்காட்சியகம் சித்தரிக்கும் வகையில் உள்ளது.. அதே வேளையில் பூமியிலுள்ள வாழ்வின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்தல் பற்றிய புரிதலை மக்களிடைய வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பார்வை குன்றிய மாணவர்கள் வளாகத்தில் விலங்குகளின் கண்காட்சியை உணரும் வகையில் காட்சிப்பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் இது முக்கியமான பங்கினை வகிக்கிறது.  

[ மேற்கோள் தேவை ] இந்த அருங்காட்சியகத்தில் மூன்று தளங்கள் உள்ளன. அவற்றில் தாவரங்கள், கால்நடைகள், கனிம வளங்கள் மற்றும் மேற்கு பிராந்தியத்தின் புவியியல் மற்றும் இந்தியாவின் மேற்கு வறண்ட பகுதி பற்றிய காட்சிப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. தற்போது இந்த அருங்காட்சியகத்தின் தரை தளத்தில் உள்ள முதல் காட்சிக்கூடத்தில், ராஜஸ்தானின் பல்லுயிர் அல்லது ராஜஸ்தானின் காடுகள் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான காட்சிப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்களை அதிகம் ஈர்ப்பது சிங்காரா (கேஸல்), சிறுத்தை, சிங்கம் மற்றும் புலி போன்ற விலங்குகளின் மாதிரிகள் ஆகும். பிஷ்னோய் சமூகம் மற்றும் ராஜஸ்தான் கிராமப்புறங்களைப் பற்றிய டியோராமாக்கள் இங்கு உள்ளன. அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் ஓவியங்கள் காட்சிக்கு உள்ளன. மேலும் கருப்பு மட்பாண்டகள் உள்ளன. இவற்றில் உள்ளூர் கலைஞர்களால் நேரடியாக வரையப்படுகின்ற ஓவியங்கள் மற்றும் உருவாக்கப்படுகின்ற மட்பாண்டங்களை இந்த அருங்காட்சியகத்திற்கு வருவோர் பார்த்து இன்புறலாம். ரும் அனுபவிக்க முடியும்.   [ மேற்கோள் தேவை ] அருங்காட்சியகத்தின் வரவேற்பு பகுதிக்கு எதிரே உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு நூலகம் உள்ளது, இந்த நூலகத்தில் பார்வையாளர்கள் மேற்கு இந்தியாவின் வனவிலங்குகள், ராஜஸ்தானின் பல்லுயிர் போன்றவற்றைப் பற்றிய நூல்கள் உள்ளன. அவற்றை பார்வையாளர்கள் படிக்க வசதி உள்ளது. அங்குள்ள ஆடிட்டோரியத்தில் 300 பேர் தங்கும் வசதி உள்ளது. கருத்தரங்குகள் நடத்தவும் மற்றும் வனவிலங்கு ஆவண விளக்கக்காட்சிகளுக்காகவும் இந்த அரங்கம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் இயற்கை பாரம்பரியத்தையும் வரலாற்றையும் சித்தரிப்பதை இலக்குகளாகக் கொண்டு இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இனிவரும் ஆண்டுகளில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இந்த அருங்காட்சியகம் இலக்கு வைத்து அதற்கான முயற்சியை மேற்கொண்டுவருகிறது. [3]

 
ராஜீவ் காந்தி இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு