முகம்மது அமீத் அன்சாரி
முகம்மது அமீத் அன்சாரி (பிறப்பு: ஏப்ரல் 1, 1934) இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 11 ஆகத்து 2007 முதல் 11 ஆகத்து 2017 வரை இருந்தார். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர்.[1] அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்ர முன்னாளில் பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர். இந்தியாவின் 12வது குடியரசுத் துணைத் தலைவராக ஆகத்து 11, 2007 அன்று தேர்ந்தெடுக்கப்பெற்ற அன்சாரி ஆகத்து 7, 2012 இல் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் நீடித்தார்.
முகம்மது அமீத் அன்சாரி | |
---|---|
![]() | |
முகம்மது அமீத் அன்சாரி | |
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் 11 ஆகத்து 2007 – 11 ஆகத்து 2017 | |
குடியரசுத் தலைவர் | பிரணப் முகர்சி பிரதீபா பாட்டீல் |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | பைரோன் சிங் செகாவத் |
பின்வந்தவர் | வெங்கையா நாயுடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 ஏப்ரல் 1934 கல்கத்தா (தற்பொழுது கொல்கத்தா) |
தேசியம் | இந்தியர் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சல்மா அன்சாரி |
படித்த கல்வி நிறுவனங்கள் | அலிகார் இசுலாமியர் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல் நிபுணர், கலைக்கழக உறுப்பினர் |
சமயம் | இசுலாம் |
மேற்கோள்கள் தொகு
- ↑ அமீத் அன்சாரி இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் பரணிடப்பட்டது 2015-09-20 at the வந்தவழி இயந்திரம். பரணிடப்பட்ட நாள் ஆகத்து 14, 2007