வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு (தெலுங்கு: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) இந்தியக் குடியரசின் தற்போதைய துணைத் தலைவராக[1][2][3] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். 11, ஆகத்து 2017-ம் நாள் பதவி ஏற்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் உதயகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.

எம். வெங்கையா நாயுடு
Venkaiah Naidu official portrait.jpg
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 ஆகத்து 2017
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
முன்னவர் முகம்மது அமீத் அன்சாரி
முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
முன்னவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்வந்தவர் லால் கிருஷ்ண அத்வானி
மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 1, 1949 (1949-07-01) (அகவை 72)
சாவதா பாலெம், நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) எம். உஷாமா
பிள்ளைகள் முப்பவரப்பு ஹர்ஷவர்தன், தீபா வெங்கட்
இருப்பிடம் விசாகப்பட்டினம், ஆந்திரா
பெங்களூரு, கர்நாடகா
சமயம் இந்து

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கையா_நாயுடு&oldid=3253931" இருந்து மீள்விக்கப்பட்டது