ஜனா கிருஷ்ணமூர்த்தி
ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர். இவர் 2001-2002-ம் ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்திருக்கிறார். காமராசருக்கு அடுத்து இதுவரை தேசியக் கட்சி ஒன்றிற்கு தலைவராக இருந்த தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி மட்டுமே.[1][2][3]
ஜனா கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் | |
பிரதமர் | அடல் பிகாரி வாஜ்பாய் |
முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி | |
முன்னையவர் | பங்காரு லக்ஷ்மண் |
பின்னவர் | வெங்கையா நாயுடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 மே 1928 மதுரை, தமிழ்நாடு இந்தியா |
இறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா | செப்டம்பர் 25, 2007
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | வழக்குரைஞர் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுகிருஷ்ணமூர்த்தி மதுரையில் பிறந்தவர், இவரது தாய்மொழி தமிழாகும். சென்னை சட்டக்கல்லூரியின் மாணவரான இவர் தனது சட்டப் பயிற்சியை மதுரையில் 1965-ல் மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ்-ன் அப்போதைய தலைவரான எம். எஸ். கோல்வால்கார் இவரை அரசியலுக்கு அழைத்து வந்தார்[சான்று தேவை].
மேற்கோள்கள்
தொகு- ↑ "President Patil condoles Jana Krishnamurthy's demise". 25 September 2007.
- ↑ Yadav, Bhupendra (2022). The Rise of the BJP: The Making of the World's Largest Political Party (in English) (1st ed.). India: Penguin Random House India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0670095254.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Rajappa, Sam (6 September 2013). "'Why this double standard?' people of Tamil Nadu ask the PM". The Weekend Leader.