பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் என்பது பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட பதவி ஆகும். தேசிய செயற்குழு மற்றும் மாநிலங்களின் செயற்குழு உறுப்பினர்களால் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். பொதுவாக தேசியத் தலைவரை கட்சியின் மூத்த தலைவர்களின் ஆசியுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேசியத் தலைவர் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். கட்சி விதிகளின்படி ஒருவரை தொடர்ந்து இருமுறைக்கு மேல் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.[1] கட்சியின் தேசியத் தலைவர் பிரதமர் பதவி அல்லது மத்திய அமைச்சர் போன்ற அரசுப் பதவிகளை ஏற்க இயலாது. அவ்வாறு அரசுப் பதவியை ஏற்க வேண்டுமானால் கட்சிப் பதவியை துறக்க வேண்டும்.[2] தேசியத் தலைவராக ஒருவர் தேர்தெடுக்கப்பட வேண்டும் எனில் குறைந்த பட்சம் தொடர்ந்து 15 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.[1]

பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர்
தற்போது
ஜெகத் பிரகாஷ் நட்டா

20 சனவரி 2020 முதல்
Typeஅரசியல் கட்சி
சுருக்கம்பாஜக
வாழுமிடம்6-A, தீனதயாள் உபாத்தியாயா சாலை, புது தில்லி-110001
நியமிப்பவர்தேசிய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள்
பதவிக் காலம்3 ஆண்டுகள்
(தொடர்ந்து இரு முறைகளுக்கு மேற்படாமல்)
அரசமைப்புக் கருவிபாஜக அமைப்பு விதிகள்
உருவாக்கம்6 ஏப்ரல் 1980
முதலாமவர்அடல் பிகாரி வாச்பாய்
இணையதளம்www.bjp.org

பாரதிய இளைஞர் அணி, பாரதிய மகளிர் அணி, பாரதிய விவசாயிகள் அணி, பாரதிய தொழிலாளர்கள் சங்கம் போன்ற அணித் தலைவர்களை தேசியத் தலைவர் நியமனம் செய்கிறார்.[1]

1980-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி நிறுவப்பட்ட பிறகு அடல் பிகாரி வாச்பாய் கட்சியின் முதல் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986-ஆம் ஆண்டில் லால் கிருஷ்ண அத்வானி இரண்டாவது தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் சா உள்ளிட்ட மொத்தம் 11 பேர் தேசியத் தலைவர்களாக செயல்பட்டுள்ளனர். 20 சனவரி 2020 முதல் ஜெகத் பிரகாஷ் நட்டா தேசியத் தலைவராக உள்ளார்.[5]

பாஜக தேசியத் தலைவர்கள் பட்டியல்

தொகு
வரிசை எண் பதவிக் காலம் படம் பெயர் மாநிலம் குறிப்புகள்
1 1980–1986   அடல் பிகாரி வாச்பாய் மத்தியப் பிரதேசம் [3]
[6]
[7]
[8]
1980இல் பாரதிய ஜனதா கட்சி நிறுவப்பட்ட போது அதன் முதல் தேசியத் தலைவராக அடல் பிகாரி வாச்பாய் தேர்வு செய்யப்பட்டார். பாஜகவின் முதல் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் தேர்வு செய்யப்பட்டார்.
2 1986–1991   லால் கிருஷ்ண அத்வானி குஜராத் [3]
[6]
[9]
[10]
[11]
1986இல் வாஜ்பாய்க்குப் பின்னர் கட்சியின் இரண்டாவது தேசியத் தலைவராக அத்வானி தேர்வு செய்யப்பட்டார். இவர் 3 முறை தேசியத் தலைவர் வகித்தார். 1990-ஆம் ஆண்டில் அத்வானி நடத்திய ரத யாத்திரைக்காக இந்தியா முழுவதும் அறியப்பட்டார். வாஜ்பாய் அமைச்சரவையில் அத்வானி துணைப்பிரதமராக 2002 முதல் 2004 வரை பதவி வகித்தார்.
3 1991–1993   முரளி மனோகர் ஜோஷி உத்தரப் பிரதேசம் [10]
[12]
[13]
[14]
இவர் 1991இல் பாஜக தேசியத் தலைவராவதற்கு முன்னர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கதில் 50 ஆண்டுகள் செயலாற்றியவர். இவர் ராம ஜென்ம பூமி இயக்கதிற்கு லால் கிருஷ்ண அத்வானியுடன் பாடுபட்டவர். இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக பணியாற்றியவர். இவர் தேசியத் தலைவராக இருந்த போது, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பாஜக பெரிய எதிகட்சியாக விளங்கியது.
(2) 1993–1998   லால் கிருஷ்ண அத்வானி குஜராத் [10]
[14]
பாஜக தேசியத் தலைவராவதற்கு முன்னர் அத்வானி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கதில் 50 ஆண்டுகள் செயலாற்றியவர். இவர் இரண்டாவது முறையாக தேசியத் தலைவர் பதவி விகித்தார். 1996 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்று, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. 1999ல் வெற்றி பெற்ற பின் 2002ல் துணை பிரதமர் ஆனார்.
4 1998–2000
 
குஷபாவு தாக்கரே மத்தியப் பிரதேசம் [9]
[15]
[16]
[17]
5 2000–2001 பங்காரு லட்சுமண் தெலங்காணா [18]
[19]
தலித் சமூகத்தவரான இவர் தெகல்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றதால் கட்சிப் பதவி இழந்தவர்.
6 2001–2002
 
ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு [19]
[20]
[21]
[22]
பங்காரு லெட்சுமண் பதவி விலகலுக்குப் பின்னர் ஜெனா கிருஷ்ணமூர்த்தி தேசியத் தலைவரானார். ஒராண்டுக் பின்னர் இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றதால் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
7 2002–2004   வெங்கையா நாயுடு ஆந்திரப் பிரதேசம் [23]
[22]
ஜெனா கிருஷ்ணமூர்த்தி பதவி விலகியதால் வெங்கையா நாயுடு தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
(2) 2004–2005   லால் கிருஷ்ண அத்வானி குஜராத் [10]
[23]
[24]
[25]
[26]
மூன்றாவது முறையாக அத்வானின் தேசியத் தலைவராக பதவியேற்றார். மேலும் நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். 2005இல் இவர் முகமது அலி ஜின்னாவை புகழ்ந்து பேசியதால் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
8 2005–2009   ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேசம் [10]
[26]
[27]
[28]
[29]
2005இல் ராஜ்நாத் சிங் பாஜகவின் தேசியத் தலைவராக பதவியேற்றார். 2006-இல் மீண்டும் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராகவும் இருந்தவர். இவர் 2009இல் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
9 2009–2013   நிதின் கட்காரி மகாராட்டிரம் [10]
[29]
[30]
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கதில் நீண்ட கால உறுப்பினரான நிதின் கட்காரி 2009-இல் இளம் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் மகாராஷ்டிர மாநில பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர். இவர் 2013-இல் தேசியத் தலைவர் பதவிலிருந்து விலகினார்.
(8) 2013–2014   ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேசம் [10]
[29]
[31]
2013-இல் இரண்டாவது முறையாக ராஜ்நாத் சிங் தேசியத் தலைவராக பதவியேற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கடுமையாக உழைத்தவர். மேலும் இவர் நரேந்திர மோதியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காரணமானவர். 2014 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி ஆட்சி அமைத்ததால், ராஜ்நாத் சிங் மத்திய் அமைச்சரானர். எனவே கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
10 2014–2020   அமித் சா குஜராத் [32]
[2]
[33]
அமித் சா கட்சியின் தேசியத் தலைவராக 2014இல் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மோதியின் முதலாம் அமைச்சரவையில் அமித் சா உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இவர் தொடர்ந்து இரு முறை கட்சியின் தேசியத் தலைவராக பதவி வகித்தார்.
11 2020–Incumbent   ஜெகத் பிரகாஷ் நட்டா இமாச்சலப் பிரதேசம் [34]
[5]
ஆர் எஸ் எஸ் அமைப்பின் நீண்ட கால உறுப்பின்ரான ஜெகத் பிரகாஷ் நட்டா 2020-இல் கட்சியின் தேசியத் தலைவரானார். இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராக பதவியில் இருந்தவர். மேலும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், பிரேம் குமார் துமால் அமைச்சரவையில் 1998 - 2003 ஆண்டுகளில் அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Bharatiya Janata Party Constitution" (PDF). BJP official website. Bharatiya Janata Party. Archived (PDF) from the original on 18 November 2017. பார்க்கப்பட்ட நாள் 30 June 2018.
  2. 2.0 2.1 Rawat, Sanjay (9 July 2014). "Amit Shah Appointed BJP President". Outlook இம் மூலத்தில் இருந்து 2 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180702150814/https://www.outlookindia.com/newswire/story/murder-accused-amit-shah-appointed-bjp-president/848862. 
  3. 3.0 3.1 3.2 Varma, Gyan (7 April 2017). "BJP Foundation Day: How the party has grown since 1980". Mint இம் மூலத்தில் இருந்து 13 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180613111800/https://www.livemint.com/Politics/6OXdDGL7fso1o6WVihmGQJ/BJP-Foundation-Day-How-the-party-has-grown-since-1980.html. 
  4. "Happy Birthday L K Advani: Facts about the longest serving BJP president". India Today. 8 November 2016 இம் மூலத்தில் இருந்து 13 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180613160530/https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/lk-advani-350766-2016-11-08. 
  5. 5.0 5.1 "JP Nadda takes over as BJP president". Mint. 20 January 2020. பார்க்கப்பட்ட நாள் 20 January 2020.
  6. 6.0 6.1 Chatterjee, Manini (1994). "The BJP: Political Mobilization for Hindutva". South Asia Bulletin 14 (1). 
  7. "Nation’s highest civilian honour for Atal Bihari Vajpayee". Mint. 25 December 2014 இம் மூலத்தில் இருந்து 30 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630161920/https://www.livemint.com/Politics/PEPkJFc48HrRTVpnXKydVO/Nations-highest-civilian-honour-for-Atal-Bihari-Vajpayee.html. 
  8. Hansen 1999, ப. 157–158.
  9. 9.0 9.1 Guha 2007, ப. 540–560.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 "BJP Presidents from 1980 to 2013". India Today இம் மூலத்தில் இருந்து 14 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180614161502/https://www.indiatoday.in/india/photo/bjp-presidents-from-1980-to-2013-369096-2013-01-23. 
  11. Hansen 1999, ப. 159.
  12. Muralidharan, Sukumar (7 November 1998). "Taking Hindutva to school". Frontline இம் மூலத்தில் இருந்து 16 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140616063041/http://www.frontline.in/static/html/fl1523/15230040.htm. 
  13. "Presidential Election: Murli Manohar Joshi, Sushma Swaraj Among Probables". News 18. 26 February 2017 இம் மூலத்தில் இருந்து 30 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630214205/https://www.news18.com/news/india/presidential-election-murli-manohar-joshi-sushma-swaraj-among-probables-1353432.html. 
  14. 14.0 14.1 Datta, Prabhash K. (21 March 2017). "25 years after Babri demolition: Will Modi choose Advani as President?". India Today இம் மூலத்தில் இருந்து 1 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180701140309/https://www.indiatoday.in/india/story/narendra-modi-bjp-president-of-india-advani-amitabh-bachchan-najma-heptullah-murli-manohar-joshi-966867-2017-03-21. 
  15. Bhaumik, Saba Naqvi (27 October 1997). "Veteran leader Kushabhau Thakre emerges as front-runner for BJP president post". India Today இம் மூலத்தில் இருந்து 1 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180701165045/https://www.indiatoday.in/magazine/nation/story/19971020-veteran-leader-kushabhau-thakre-emerges-as-front-runner-for-bjp-president-post-830770-1997-10-27. 
  16. "Kushabhau Thakre passes away". The Times of India. 28 December 2003 இம் மூலத்தில் இருந்து 15 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180715040619/https://timesofindia.indiatimes.com/india/Kushabhau-Thakre-passes-away/articleshow/387224.cms. 
  17. "Kushabhau Thakre Passes Away". The Financial Express. 28 December 2003 இம் மூலத்தில் இருந்து 1 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180701164959/https://www.financialexpress.com/archive/kushabhau-thakre-passes-away/93520/. 
  18. "Bangaru Laxman, ex-BJP president, dies in Hyderabad". The Times of India. 1 March 2014 இம் மூலத்தில் இருந்து 5 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140305033931/http://timesofindia.indiatimes.com/india/Bangaru-Laxman-ex-BJP-president-dies-in-Hyderabad/articleshow/31221884.cms. 
  19. 19.0 19.1 Vyas, Nina (14 March 2001). "Jana Krishnamurthy acting BJP chief". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180715040619/https://www.thehindu.com/2001/03/15/stories/01150005.htm. 
  20. "Ex-BJP president Jana Krishnamurthy cremated in Chennai". The Times of India. 26 September 2007 இம் மூலத்தில் இருந்து 14 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180614161503/https://timesofindia.indiatimes.com/india/Ex-BJP-president-Jana-Krishnamurthy-cremated-in-Chennai/articleshow/2403979.cms. 
  21. "Jana Krishnamurthi ratified BJP chief". தி இந்து. 24 March 2001 இம் மூலத்தில் இருந்து 15 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180715040619/https://www.thehindu.com/2001/03/25/stories/01250002.htm. 
  22. 22.0 22.1 Ramaseshan, Radhika. "A-Team Powers Back". The Telegraph இம் மூலத்தில் இருந்து 2 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180702011052/https://www.telegraphindia.com/1020630/front_pa.htm. 
  23. 23.0 23.1 "Naidu's journey from pasting party posters to being Vice President". Rediff.com. 5 August 2017. Archived from the original on 14 October 2017. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  24. "Advani replaces Venkaiah Naidu as BJP chief". Rediff.com. 18 October 2018. Archived from the original on 4 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2 July 2018.
  25. "No regrets over Jinnah statement: Advani". The Times of India. 6 January 2006 இம் மூலத்தில் இருந்து 12 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170212194803/http://timesofindia.indiatimes.com/india/No-regrets-over-Jinnah-statement-Advani/articleshow/1361730.cms. 
  26. 26.0 26.1 Vyas, Neena (1 January 2006). "Advani resigns as BJP president". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180715040619/https://www.thehindu.com/todays-paper/advani-resigns-as-bjp-president/article3233731.ece?source=ppc&gclid=CjwKCAjwmufZBRBJEiwAPJ3Lpjck3zGpgx-rzw1v6u26oVgrtkOxZQvpJlI7IBz73s3DxSMzt73RhRoCbskQAvD_BwE. 
  27. Ghatak, Lopamudra (23 December 2006). "It's basic instinct for Rajnath Singh". The Times of India இம் மூலத்தில் இருந்து 15 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180715040619/https://timesofindia.indiatimes.com/india/Its-basic-instinct-for-Rajnath-Singh/articleshow/911268.cms?referral=PM. 
  28. "Who is Rajnath Singh?". India Today. 23 January 2013 இம் மூலத்தில் இருந்து 2 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180702122243/https://www.indiatoday.in/india/story/who-is-rajnath-singh-152326-2013-01-23. 
  29. 29.0 29.1 29.2 "Rajnath Singh elected BJP president, vows to bring back party to power". India TV. 23 January 2013 இம் மூலத்தில் இருந்து 2 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180702122249/https://www.indiatvnews.com/politics/national/rajnath-singh-bjp-president-vows-to-bring-back-party-to-power-7938.html. 
  30. "Nitin Gadkari: From swayamsevak to BJP chief". The Hindu. 19 December 2009 இம் மூலத்தில் இருந்து 15 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180715040619/https://www.thehindu.com/news/national/Nitin-Gadkari-From-swayamsevak-to-BJP-chief/article16854166.ece. 
  31. "Rajnath Singh – from 'Physics lecturer' to 'Union Home Minister'". India TV. 10 September 2014 இம் மூலத்தில் இருந்து 2 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180702150650/https://www.indiatvnews.com/politics/national/rajnath-singh-home-minister-of-india-bjp-modi-government-latest-18798.html. 
  32. "Amit Shah, Modi's close aide, takes charge as BJP president". The Times of India. 9 July 2014 இம் மூலத்தில் இருந்து 13 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713003209/http://timesofindia.indiatimes.com/india/Amit-Shah-Modis-close-aide-takes-charge-as-BJP-president/articleshow/38068666.cms. 
  33. Hebbar, Nistula (24 January 2016). "Amit Shah re-elected BJP president". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180715040619/https://www.thehindu.com/news/national/Amit-Shah-re-elected-BJP-president/article14017742.ece. 
  34. "JP Nadda Elected Unopposed As BJP Chief, Takes Over From Amit Shah". NDTV. 20 January 2020. பார்க்கப்பட்ட நாள் 20 January 2020.[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு