பாரதிய கிசான் சங்கம்

பாரதிய கிசான் சங்கம் (Bharatiya Kisan Sangh) (BKS), (மொழிபெயர்ப்பு: இந்திய விவசாயிகள் சங்கம்), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்த்தின் இணைப்பு பெற்ற இந்திய விவசாயிகள் அமைப்பாகும்.[1] பாபுராவ் தெங்காடியின் வழிகாட்டுதலின் பேரில், பகு சாகிப் பாஸ்குடே என்பவரால் 1978ஆம் ஆண்டில் அரசியல் சார்பற்ற அமைப்பாக, பாரதிய கிசான் சங்கத்தை மத்தியப்பிரதேசத்தில் பதிவு அமைக்கப்பட்டது. அனைத்து இந்திய மாநிலங்களில் இதன் கிளைகள், இரண்டு கோடி விவசாய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2] 2005இல் பாரதிய கிசான் சங்கத்தின் பொதுச்செயலராக பிரபாகர கேல்கரும், தலைவராக அனிருத்தர முர்குடே என்பவரும் செயல்படுகின்றனர்.

சங்க நடவடிக்கைகள் தொகு

  • இந்திய வேளாண்மை கட்டமைப்பை வலுப்படுத்த 20 பில்லியன் டாலர் ஒதுக்க, மார்ச் 2005 அன்று இந்திய அரசை வலியுறுத்தியது.[3]
  • பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பருத்திக்கு போதிய ஆதார விலை நிர்ணயிக்கக் கோரி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.[4]
  • 13 செப்டம்பர் 2013 அன்று இந்தியா முழுவதிலிருந்து ஒன்றை இலட்சம் விவசாயிகளைத் திரட்டி பேரணியை நடத்தி, லால் லீலா மைதானத்தில் நிறைவுக் கூட்டம் நடத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் பிற அணிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "BKS over cotton support prices". Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-08-13.
  2. India Today. July 2008. 
  3. http://www.thehindubusinessline.com/2005/03/17/stories/2005031701351700.htm%7Ctitle=Bharatiya Kisan Sangh seeks $20-b fund for agri infrastructure
  4. http://www.expressindia.com/latest-news/Bharatiya-Kisan-Sangh-unhappy-with-BJP-over-cotton-support-prices/246829/%7Ctitle=Bharatiya[தொடர்பிழந்த இணைப்பு] Kisan Sangh unhappy with BJP over cotton support prices

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_கிசான்_சங்கம்&oldid=3562876" இலிருந்து மீள்விக்கப்பட்டது