சௌராட்டிர தீபகற்பம்
சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம் குஜராத் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சௌராட்டிர தீபகற்பத்தின் எல்லைகளாக, வடக்கே கட்ச் மாவட்டமும், மேற்கே அரேபியன் கடலும், தெற்கிலும், தென்மேற்கிலும் காம்பே வளைகுடாவும், வடமேற்கே கட்ச் வளைகுடாவும் கிழக்கே குசராத்தின் இதர மாவட்டங்களும் அமைந்துள்ளது. இத்தீபகற்ப பகுதியை சௌராட்டிரம் அல்லது கத்தியவார் பகுதி என்றும்; இங்குள்ள மக்கள் சௌராட்டிர மொழி பேசியதால் சௌராஷ்ட்ரீகள் என்றும், தற்போது இங்கு கத்தியவாரி சமூகத்தினர் அதிகம் வாழ்வதால் கத்தியவாரிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1]


வரலாறு தொகு
அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ நாகரீக சின்னங்கள், இத்தீபகற்பத்தில் உள்ள லோத்தல் மற்றும் சோமநாதபுரத்தில் உள்ள பிரபாச பட்டினம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் சௌராட்டிர தீபகற்ப பகுதி மௌரியர்களின் ஆட்சியிலிருந்து சக வமிச அரசர்களின் கீழ் வந்தது. குப்தர்களின் காலத்திற்குப் பின் சௌராட்டிர தீபகற்ப பகுதிகள் வல்லபி வம்ச அரசர்களின் கீழ் வந்தது.
இசுலாமிய அரசர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதி பலமுறை உள்ளாயிற்று. கசினி முகமது 1024-இல் சோமநாதபுரம் (குசராத்து), துவாரகை போன்ற இடங்களின் மீது படையெடுத்தார். தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவர்கள் துவாரகை கிருஷ்ணன் கோயிலையும், சோமநாதபுரம் சிவன் கோயிலையும் தகர்த்தனர். இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் காலத்தில் இத்தீபகற்பத்தில் 226 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. இந்தியா விடுதலை அடைந்த பின்பு அனைத்து சுதேச சமஸ்தானங்கள், சர்தார் வல்லபாய் படேலின் கடும் முயற்சியால் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்து. [2]
மாவட்டங்கள் தொகு
15 ஆகஸ்டு 2013 அன்று துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களில் கிர்சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், மோர்பி மாவட்டம் மற்றும் போடாட் மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் சௌராட்டிர தீபகற்பகுதியில் துவக்கப்பட்டது.
கனிம வளங்கள் தொகு
எரிமலை குழம்பினால் ஆன மணல் கற்கள் 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் களிமண், சுண்ணாம்பு கற்கள் பரந்து காணப்படுகிறது. [2]
நிலவியல் தொகு
சௌராட்டிர தீபகற்ப பகுதி கடல் மட்டத்திலிருந்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கிர்நார் மலைப் பகுதிகள் மட்டும் கடல் மட்டத்திலிந்ருது 3665 அடி உயரத்தில் உள்ளது. சௌராட்டிர தீபகற்பம் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளதால், முட்செடிகளும், மரங்களும் கொண்ட காடுகள் காணப்படுகிறது.
வேளாண்மை தொகு
கோதுமை, தினை, நவதானியங்கள், நிலக்கடலை மற்றும் பருத்தி இங்கு விளையும் முதன்மை பயிர்கள்.
பார்க்க வேண்டிய இடங்கள் தொகு
படக்காட்சியகம் தொகு
-
மகாதேவர் கோயில், பவநாத், ஜூனாகாத்
-
பகாவூதீன் மக்பார மசூதி, ஜூனாகாத்
-
மகாத்மா காந்தி பிறந்த வீடு, போர்பந்தர்
-
ஹரிசித்தி மாதா மலைக்கோயில், போர்பந்தர்.
-
பாளி மொழியில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள், ஜூனாகாத்