பாலிதானா

பாலிதானா (Palitana) இந்தியா, குஜராத் மாநிலத்தின், பவநகர் மாவட்டத்தில் அமைந்த நகரம். பவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்த இந்நகரம் சமணர்களுக்கு புனித தலம் ஆகும்.[1] இந்நகரத்திலிருந்து மூன்று கி மீ தொலைவில் உள்ள சத்ருஞ்ஜெய மலை சமணர்களின் முக்கிய புனிதத் தலமாகும். இம்மலையில் நூற்றுக்கணக்கான சமணக் கோயில்கள் உள்ளது.

பாலிதானா
பாட்லிப்பூர்
நகரம்
பாலிதான நகரத் தோற்றம்
பாலிதான நகரத் தோற்றம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பவநகர் மாவட்டம்
ஏற்றம்66 m (217 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,75,000
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)

வரலாறுதொகு

சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனும் ரிசபதேவர் பாலிதானா நகரத்தின் சத்ருஞ்ஜெய மலையில் அமர்ந்து தியானம் செய்தார் என்பது சமணர்களின் நம்பிக்கை. பின்னர் சத்ருஞ்ஜெய மலையில் சமணர் கோயில்கள் எழுப்பப்பட்டன.

சௌராட்டிர தீபகற்பத்தில், 1194இல் நிறுவப்பட்ட பாலிதானா அரசு, பிரித்தானிய இந்திய அரசில் ஒரு மன்னராட்சி நாடாக விளங்கியது. பாலிதானாவின் பரப்பளவு 777 சதுர கிலோ மீட்டராகும். 1921இல் 58,000 மக்கட்தொகையும், 91 கிராமங்களும், ரூபாய் 7,44,416 வருவாயும் கொண்டிருந்தது.

1656ஆம் ஆண்டில் குஜராத்தின் இசுலாமிய ஆளுநர் ஷா ஜஹான் என்பவர் பாலிதானாவை ஒரு புகழ் பெற்ற சமண வணிகர் சாந்திதாஸ் ஜவேரி என்பவருக்கு மானியமாக வழங்கினார். 1730இல் பாலிதானா சமணர் கோயில்களின் நிர்வாகம் ஆனந்த்ஜி கல்யாண்ஜி என்ற அறக்கட்டளையின் கீழ் வந்தது. [2]

சமணர் கோயில்கள்தொகு

 
சத்ருஞ்ஜெய மலை சமணர் கோயில்கள்
 
சத்ருஞ்ஜெய மலை சமணர் கோயில்கள்

உலகத்தில் அதிக கோயில்கள் கொண்ட மலை, சத்ருஞ்ஜெய மலையாகும். இம்மலையில் பளிங்கு கற்களால் ஆன 3,000 சமணர் கோயில்களின் கூட்டம் அமைந்துள்ளது.[3] பாலிதானாவில் உள்ள சத்ருஞ்ஜெய மலை முழுவதும் உள்ள சமணர்களின் புனித தலமாகும். இங்கு சமணர்களின் முதல் தீர்த்தாங்கரர் ரிசபதேவர் என்ற ஆதிநாதரின் முதன்மையான கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல 3,800 படிகள் உள்ளன. [4]

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பாலிதானாவின் மக்கட்தொகை 1,75,000 ஆகும். [5] எழுத்தறிவு விகிதம் 74%ஆக உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் சமணர் என்பதால் இங்குள்ள மக்கள் எவரும் புலால் உண்பதில்லை.

போக்குவரத்து வசதிகள்தொகு

  • பாலிதானா நகரத்திலிருந்து பவநகர் விமான நிலையம் 51 கி. மீ., தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையம் மும்பை, ஆமதாபாத் நகரங்களை இணைக்கிறது.

[6]

  • பேருந்துகள் பவநகர், ஆமதாபாத், வதோதரா ஆகிய நகரங்களை இணைக்கிறது.

பாலிதானா சமணர் கோயில்கள் படக்காட்சியகம்தொகு

   
சாமோவ்சரண் கோயில், பாலிதானா

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிதானா&oldid=2726718" இருந்து மீள்விக்கப்பட்டது