குஜராத் மாவட்டப் பட்டியல்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்கள் அமைந்துள்ளது.[1]
வரலாறு
தொகு1960
தொகு1960இல் வடக்கு மற்றும் வடமேற்கு பம்பாய் மாகாணத்திலிருந்த 17 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலம் உருவானது.
அம்மாவட்டங்கள்: அகமதாபாத் மாவட்டம், அம்ரேலி மாவட்டம், பனஸ்கந்தா மாவட்டம், பரூச் மாவட்டம், பவநகர் மாவட்டம், டாங் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், கேதா மாவட்டம், கச்சு மாவட்டம், மெசனா மாவட்டம், பஞ்சமகால் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டம், சபர்கந்தா மாவட்டம், சூரத் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம் மற்றும் வதோதரா மாவட்டம்.
1964
தொகு1964ஆம் ஆண்டில் அகமதாபாத் மாவட்டம் மற்றும் மெசனா மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து காந்திநகர் மாவட்டம் அமைக்கப்பட்டது.
1966
தொகு1966இல் சூரத் மாவட்டத்தை சில பகுதிகளை பிரித்து வல்சத் மாவட்டம் உருவானது.
1997
தொகு2 அக்டோபர் 1997இல் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவானது.
- கேதா மாவட்டத்த்தின் சில பகுதிகளைக் உள்ளடக்கிய ஆனந்து மாவட்டம் உருவானது.
- பஞ்சமகால் மாவட்டத்தைப் பிரித்து தகோத் மாவட்டம் உருவானது (Dahod District)
- பரூச் மாவட்டத்தைப் பிரித்து, நர்மதா மாவட்டம் உருவானது
- வல்சத் மாவட்டத்தைப் பிரித்து நவ்சாரி மாவட்டம் உருவானது.
- ஜூனாகாத் மாவட்டத்தைப் பிரித்து போர்பந்தர் மாவட்டம் உருவானது.
2000
தொகு2000இல் பனஸ்கந்தா மாவட்டம் மற்றும் மகிசனா மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து பதான் மாவட்டம் உருவானது.
2007
தொகு2 அக்டோபர் 2007இல் சூரத் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து தபி மாவட்டம் உருவானது.
2013
தொகு15 ஆகஸ்டு 2013இல் சில மாவட்டப் பகுதிகளை பிரித்து ஏழு புதிய மாவட்டங்கள் உருவாயின.[2]
- சபர்கந்தா மாவட்டத்தின் சிலபகுதிகளை பிரித்து ஆரவல்லி மாவட்டம் உருவானது.
- அகமதாபாத் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு போடாட் மாவட்டம் (Botad District) உதயமாயின.
- வதோதரா மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து சோட்டா உதய்பூர் மாவட்டம் அமைக்கப்பட்டது.
- ஜாம்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு தேவபூமி துவாரகை மாவட்டம் உருவானது.
- கேதா மாவட்டம் மற்றும் பஞ்ச மகால் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு மகிசாகர் மாவட்டம் (Mahisagar District) அமைக்கப்பட்டது.
- ராஜ்கோட் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம் மற்றும் ஜாம்நகர் மாவட்டங்களின் சில பகுதிகளைக் கொண்டு மோர்பி மாவட்டம் (Morbi district) உருவாக்கப்பட்டது.
- ஜூனாகாத் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு கிர் சோம்நாத் மாவட்டம் உருவானது.
மாவட்டப் பட்டியல்
தொகுமாவட்ட குறியீடு | மாவட்டம் | மாவட்டத் தலைமையிடம் | மக்கட்தொகை 2001 2001 Census[3] |
மக்கட்தொகை 2011 2011 Census[3] |
பரப்பளவு (km²) | அடர்த்தி ( per km²) 2011 |
அமைக்கப்பட்ட நாள் |
---|---|---|---|---|---|---|---|
AH | அகமதாபாத் | அகமதாபாத் | 5,808,378 | 6,959,555 | 5,404 | 1,288 | 1960 |
AM | அம்ரேலி | அம்ரேலி | 1,393,295 | 1,513,614 | 6,760 | 206 | 1960 |
AN | ஆனந்த் | ஆனந்த் | 1,856,712 | 2,090,276 | 2,942 | 711 | 1997 |
AR | ஆரவல்லி | மோதசா | 1,007,977 | 3,159 | 319 | 2013 | |
BK | பனஸ்கந்தா | பாலன்பூர் | 2,502,843 | 3,116,045 | 12,703 | 290 | 1960 |
BR | பரூச் | பரூச் | 1,370,104 | 1,550,822 | 6,524 | 238 | 1960 |
BV | பவநகர் | பவநகர் | 2,469,264 | 2,388,291 | 8,334 | 287 | 1960 |
போடாட் | போடாட் | 2013 | |||||
சோட்டா உதய்பூர் | சோட்டா உதய்பூர் | 2013 | |||||
DA | தகோத் | தகோத் | 1,635,374 | 2,126,558 | 3,642 | 583 | 1997 |
DG | டாங் | ஆக்வா | 186,712 | 226,769 | 1,764 | 129 | 1960 |
துவாரகை | காம்பாலியம் | 2013 | |||||
GA | காந்திநகர் | காந்திநகர் | 1,334,731 | 1,387,478 | 2163 | 641 | 1964 |
JA | ஜாம்நகர் | ஜாம்நகர் | 1,913,685 | 2,159,130 | 8,441 | 176 | 1960 |
JU | ஜூனாகாத் | ஜூனாகாத் | 2,448,427 | 1,159,727 | 3,932.5 | 295 | 1960 |
KA | கட்ச் | புஜ் | 1,526,321 | 2,090,313 | 45,652 | 33 | 1960 |
KH | கேதா | நாடியட் | 2,023,354 | 1,544,831 | 2,381 | 649 | 1960 |
MH | மகிசாகர் | லூனாவாடா | 1,551,709 | 3,998 | 388 | 2013 | |
MA | மெகசானா | மெகசானா | 1,837,696 | 2,027,727 | 4,386 | 419 | 1960 |
மோர்பி | மோர்பி | 2013 | |||||
NR | நர்மதா | ராஜ்பிப்லா | 514,083 | 590,379 | 2,749 | 187 | 1997 |
NV | நவ்சாரி | நவ்சாரி | 1,229,250 | 1,330,711 | 2,211 | 556 | 1997 |
PM | பஞ்ச மகால் | கோத்ரா | 2,024,883 | 1,590,661 | 3,060 | 520 | 1960 |
PA | பதான் | பதான் | 1,181,941 | 1,342,746 | 5,738 | 206 | 2000 |
PO | போர்பந்தர் | போர்பந்தர் | 536,854 | 586,062 | 2,294 | 234 | 1997 |
RA | ராஜ்கோட் | ராஜ்கோட் | 3,157,676 | 3,021,914 | 7,617 | 397 | 1960 |
SK | சபர்கந்தா | இம்மத்நகர் | 2,083,416 | 1,425,827 | 4,100.5 | 348 | 1960 |
கிர்சோம்நாத் | வேராவல் | 1,601,161 | 4,915 | 326 | 2013 | ||
ST | சூரத் | சூரத் | 4,996,391 | 6,079,231 | 4,418 | 1,376 | 1960 |
SN | சுரேந்திரநகர் | சுரேந்திரநகர் | 1,515,147 | 1,586,351 | 9,271 | 171 | 1960 |
TA | தபி | வியாரா | 719,634 | 806,489 | 3,249 | 248 | 2007 |
VD | வதோதரா | வதோதரா | 3,639,775 | 3,249,008 | 4,674 | 695 | 1960 |
VL | வல்சத் | வல்சத் | 1,410,680 | 1,703,068 | 3,034 | 561 | 1966 |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dave, Kapil (7 October 2012). "Next Republic Day, Gujarat will be bigger...". The Indian Express. http://www.indianexpress.com/news/next-republic-day-gujarat-will-be-bigger.../1013137/1. பார்த்த நாள்: 13 October 2012.
- ↑ http://www.narendramodi.in/promises-delivered-gujarat-cabinet-approves-creation-[தொடர்பிழந்த இணைப்பு] of-7-new-districts-and-22-new-talukas/
- ↑ 3.0 3.1 "Ranking of Districts by Population Size, 2001 and 2011". 2011 census of India. Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.