மகிசாகர் மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம்

மகிசாகர் மாவட்டம் (Mahisagar district) – (குசராத்தி: મહીસાગર જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் பஞ்சமகால் மாவட்டம் மற்றும் கேதா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2013 அன்று புதிதாக துவக்கப்பட்டது[1].இம்மாவட்டத் தலைமையகம் லூனாவாடா நகரம் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இம்மாவட்டத்தில் பாலசினோர் சமஸ்தானம், லூனாவாடா சமஸ்தானம் மற்றும் சந்த் சமஸ்தானம் இருந்தது.

மகிசாகர் மாவட்டம்
મહીસાગર જિલ્લો
மாவட்டம்
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்குஜராத்
நிறுவிய நாள்15 ஆகஸ்டு 2013
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
இணையதளம்https://mahisagar.gujarat.gov.in/about-mahisagar
மத்திய குஜராத்தில் மகிசாகர் மாவட்டம்

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களையும், 717 கிராமங்களையும், 3 நகராட்சிகளையும் கொண்டது.

வருவாய் வட்டங்கள்

தொகு
  1. கான்பூர்
  2. கதானா
  3. விர்பூர்
  4. சந்திரம்பூர் (சந்த் சமஸ்தானம்)
  5. லூனாவாடா (லூனாவாடா சமஸ்தானம்)
  6. பாலசினோர் (பாலசினோர் சமஸ்தானம்)

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 2,26,064 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மக்கள்தொகை 9,94,624 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.33% ஆகும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிசாகர்_மாவட்டம்&oldid=4055958" இலிருந்து மீள்விக்கப்பட்டது